என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்த மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் 8 பேர் மீது வழக்கு- போலீசார் விசாரணை
- ஒரு வருடத்திற்கு முன்பு பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டனர்.
- 22-ந் தேதி அன்று கீதாஞ்சலியை சிவா கைகளால் சரமாரியாக தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கீதாஞ்சலி (வயது 21).வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களான இருவரும் காதலித்து ஒரு வருடத்திற்கு முன்பு பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை சிவாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இந்நிலையில் கீதாஞ்சலி தனது கணவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களாக, சிவாவும், அவரது குடும்பத்தினரும், கீதாஞ்சலியை அடிக்கடி சித்ரவதை செய்து, கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. கடந்த 22-ந் தேதி அன்று கீதாஞ்சலியை சிவா கைகளால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் காயம் அடைந்து ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டார். இதுகுறித்து மத்தூர் போலீஸ் நிலை யத்தில் கீதாஞ்சலி புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் கீதாஞ்ச லியின் கணவர் சிவா, மாமனார் கிருஷ்ணன், மாமியார் கஸ்தூரி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






