என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வேதபாராயணம், பிரபந்த பாராயண சாற்று முறை நிகழ்ச்சிகளும் நடந்தது.
    • இரவு ஓசூர் ராம நாயக்கன் ஏரி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடை பெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேதாஜி சாலையில், மிக வும் பழமையான, பிரசித்தி பெற்ற ஸ்ரீகோதண்டராமர் கோவில் உள்ளது.

    இங்கு பவித்ரோத்சவ விழா, கடந்த புதன்கிழமை, 81 கலச திருமஞ்சன நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, சனிக்கிழமை வரை அங்குரார்ப்பணம், புண்யாஹவாசனம், துவார பூஜை, பவித்ர பிரதிஷ்டை மற்றும் கும்ப மண்டல ஆராதனையும் சிறப்பு ஹோமங்களும் நடை பெற்றது. தொடர்ந்து, வேதபாராயணம், பிரபந்த பாராயண சாற்று முறை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக, சம்வத் சரோத்சவ நிகழ்ச்சியும், இரவு ஓசூர் ராம நாயக்கன் ஏரி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடை பெற்றது.

    பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. தலைமை அர்ச்சகர் கேசவன் தலைமையில், அர்ச்சகர்கள் ரகுராமன், சுதர்சன் மற்றும் யோகேஷ் ஆகியோர் சிறப்பு ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

    இதில், விழாக் குழு தலை வரும், முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான கோபிநாத், மற்றும் நீலகண்டன் உள்ளிட்ட கமிட்டி நிர்வா கிகள்,கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, ஆய்வாளர் சக்திவேல், கோவில் பணி யாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • 50 கிலோ எடை கொண்ட 36 பைகளில் 1.8 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • குறைந்த விலைக்கு வாங்கிய கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தசரதராம செட்டி தெருவை சேர்ந்த அஜீத் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வரு கிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமை யிலான போலீசார், கிருஷ்ணகிரி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகில் உள்ள ஒரப்பம் 3 ரோடு பகுதியில் வாகன தணிக்கை மேற் கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் 50 கிலோ எடை கொண்ட 36 பைகளில் 1.8 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பிக்அப் வேனை, அரிசியுடன் பறிமுதல் செய்த போலீசார், அந்த வேனை ஓட்டி வந்த டிரைவரான ராயக் கோட்டை அருகில் உள்ள சிங்காரப்பேட்டை கிரா மத்தை சேர்ந்த மாதேஷ் (36) என்பவரை கைது செய்து விசாரணை மேற் கொண்ட னர்.

    பிக்வேன் உரிமை யாளரும், அரிசியின் உரிமை யாளருமான கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் அரிசியை ஒரப்பம், முருக்கம்பள்ளம், எலத்தகிரி பகுதிகளில் வீடு வீடாக சென்று குறைந்த விலைக்கு வாங்கிய கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தசரதராம செட்டி தெருவை சேர்ந்த அஜீத் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வரு கிறார்கள்.

    • ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பில் வரும் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட, எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பில் வரும் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதன் கட்டுமான பணிகளை, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வாய்ஸ் டிரான்ஸ் மீட்டர்’ என்னும் கருவியை பொருத்தி தேர்வெழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.
    • இந்திரலேகா என்பவர் வெளியில் இருந்து செல்போன் மூலம் நவீன் தேர்வு எழுத உதவியதும் தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதியமான் பொறியியல்கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வு எழுத 4 ஆயிரத்து 591 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 ஆயிரத்து 559 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். காலை பொது அறிவு தேர்வும், மதியம் தமிழ் தேர்வும் நடைபெற்றது.

    இந்த நிலையில் பொது அறிவு தாள் தேர்வை அனைவரும் மும்முரமாக எழுதி கொண்டிருந்தனர். அப்போது தேர்வு அறையில் திடீரென சத்தம் கேட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தேர்வு எழுதியவர்களை சோதனை செய்தனர்.

    அப்போது தேர்வு எழுதிய வாலிபர் ஒருவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். சினிமா பாணியில் முககவ சத்தில் `வாய்ஸ் டிரான்ஸ் மீட்டர்' என்னும் கருவியை பொருத்தி வெளியில் இருந்து தகவலை கேட்டு தேர்வெழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பச்சியூரை சேர்ந்த நவீன் (வயது 26) என்பது தெரிய வந்தது. மேலும் அவருடைய உறவினர் இந்திரலேகா என்பவர் வெளியில் இருந்து செல்போன் மூலம் நவீன் தேர்வு எழுத உதவியதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஓசூர் அட்கோ போலீசார் இரு வரையும் கைது செய்தனர். நவீன் தேர்வுக்காக ஆன்லைன் மூலம் சிறிய அளவிலான `வாய்ஸ் டிரான்ஸ்மீட்டரை' வாங்கி அதை கறுப்பு நிறமுககவசத்தில் வைத்து தைத்து அதை அணிந்தவாறு தேர்வெழுத வந்துள்ளார்.

    ஆனால் அந்த `வாய்ஸ்டி ரான்ஸ் மீட்டரில்' எழுந்த சத்தம் அவரை காட்டி கொடுத்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மதியம் நடந்த தமிழ் தேர்வு எழுத வந்த அனைத்து தேர்வர்களும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    • முகாமிற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார்.
    • 335 பேருக்கு நிறு வனங்கள் சார்பில் பணி நிய மன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.

    இதற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரவேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 20.3.2022 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

    அதேப்போல் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டைட்டான், டாடா எலக்ரானிக்ஸ், டெல்டா, ஓலா மற்றும் செய்யாறு காலணி தயாரிப்பு தொழிற்சாலை புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021 -22ம் ஆண்டு 14 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும், 2022-23 ஆண்டு 24 தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் என மொத்தம் 38 முகாம்களின் மூலம் மொத்தம் 6,418 நபர்கள் பணிநியமனம் பெற்றுள்ளார்கள்.

    மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவினால், தனியார் துறை வேலை இணையத்தின் வாயிலாகவும் வேலைநாடுநர்கள் பதிவு செய்து வேலை பெற வழிவகை செய்யும் இணைப்பு பாலமாக திகழ்கிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த இணையத்தில் சிறிய மற்றும் பெரிய அளவிலான 156 தனியார் துறை நிறுவனங்கள் பதிவு செய்து, இதுவரை 1221 வேலைதேடுபவர்கள் இம்மாவட்டத்தில் பணி நியமனம் பெற்றுள்ளனர். பணியில் சேரும் நீங்கள் நிறுவனங்களின் தேவைக்கேற்ப தனிதிறமைகளை வளர்த்துக்கொண்டு பணியாற்ற வேண்டும். நிறுவனங்கள் பணியாளர்களின் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வு வழங்கி வருகிறது.

    படித்து முடித்தவுடன் சிறிய வேலை இருந்தாலும் அவற்றில் நீங்கள் பணியாற்றி அவற்றில் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நாம் முன்னேறி செல்ல வேண்டும். இங்கு பங்கேற்றுள்ள நிறுவனங்களில் நீங்கள் நல்ல முறையில் நேர்கானலில் பங்குகொண்டு வேலை வாய்ப்பு பெறவேண்டும். எனவே இளைஞர்கள் இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்றைய முகாமில் 2,238 பேர் கலந்து கொண்டனர். அதில் 335 பேருக்கு நிறுவனங்கள் சார்பில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மணிமேகலை நாகராஜ், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்கு நர்லதா, தொழில் பாதுகாப்பு இணை இயக்குநர் சபீனா பானு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
    • ரூ.86 ஆயிரத்து 760 மதிப்புள்ள 1,442 மதுபாட்டில்களை பறமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தலைமையில் கலால் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 90 மில்லி அளவு கொண்ட 960 கர்நாடக மாநில மதுபாட்டில்கள், 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 482 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (35), கிருஷ்ணகிரி நடுப்பட்டி அருகே உள்ள பாண்டவர் கொட்டாயை சேர்ந்த சந்திரசேகர் (36) என்பதும், அவர்கள் கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த ரூ.86 ஆயிரத்து 760 மதிப்புள்ள 1,442 மதுபாட்டில்களை பறமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய திருப்பத்தூர் காகங்கரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை தேடி வருகிறார்கள்.

    அதே போல கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் தாபா ஓட்டலில் சோதனை செய்தனர். அங்கு 1800 மதிப்புள்ள 10 மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதை வைத்திருந்த வேட்டியம்பட்டியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • கடைகளில் இருந்து மொத்தம் 9.30 கிலோ பிளாஸ்டிக்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவங்கள், காய்கறி மற்றும் இறைச்சி கடைகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நடசேன் மற்றும் ஊழியர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது பல்வேறு கடைகளில் இருந்து மொத்தம் 9.30 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டது.

    வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், மீறி வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • ஷில்பாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
    • தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    கிருஷ்ணகிரி,   

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பத்தேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகள் ஷில்பா (வயது23). இவர் மோகன்ராஜ் என்பவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்க–ளுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்து வந்தனர். ஷில்பாவு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தேன்கனிக்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஷில்பா நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவி–னர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்–சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்–கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 3 வருடங்கள் ஆனநிலையில் ஷில்பா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. முரளி, பெண்ணின் கணவர் மற்–றும் உறவினர்களி டம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தலைமை யில் பூமி பூஜை நடைபெற்றது.
    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதிய ழகன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் நாகம் பட்டி ஊராட்சி, பிச்சனம் பட்டி பகுதியில் அனைத்து அண்ணா மறுலர்ச்சி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல் தலைமை யில் பூமி பூஜை நடைபெற்றது. இப்பூஜைக்கு சிறப்பு அழைப்பாளராக பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதிய ழகன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய கழக செயலாளர்கள் குண வசந்தரசு, (கிழக்கு), நரசிம்மன் (தெற்கு ), மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர் சங்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அம்மன் ராஜா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கதிர்வேல், நாகம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சீனன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் சாந்தமூர்த்தி, கோவிந்தராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் உதய குமார், பொம்மேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை சுப்பிரமணி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தனசேகரன், கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் (பொறுப்பு) மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளருமான பூபதி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் முருகன், விஜியகுமார், மாவட்ட ஒட்டுநர் அணி துணை அமைப்பாளர் ரஜினி சரவ ணன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரேம்குமார், ஒன்றிய கலை இலக்கிய அணி செயலாளர் பால் மூர்த்தி, மாடஹள்ளி மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    • மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து நெல், ராகி உள்ளிட்ட மூட்டைகள் நனைந்து வீணாகிறது.
    • பொதுப்பணித்துறை சொந்தமான இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    பேட்டபனூர் கால்நடை மருத்துவ மனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால், கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதால் தாமதம் ஏற்படுகிறது. எனவே, கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும். வேப்பனப்பள்ளியில் உள்ள வேளாண்மை அலுவலகம் கட்டிடம் சேதமாகி உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து நெல், ராகி உள்ளிட்ட மூட்டைகள் நனைந்து வீணாகிறது. எனவே, வேளாண்மை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும்.

    பாரூர் ஏரியின் கீழ் பொதுப்பணித்துறை சொந்தமான இடங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து அவ்வழியே பொதுமக்கள் சென்று வர இடையுறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுப்பணித்துறை சொந்தமான இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றிட வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றி, தூர்வார வேண்டும்.

    மேலும் நீர்நிலைகள், நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிகளவில் காய்கறிகள் விளைவிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும், பயிற்சியும் அளிக்க வேண்டும். போச்சம்பள்ளி வாரச்சந்தையில் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதை தடுக்க தகவல் பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் சரயு பேசியதாவது:-

    இ-நாம் திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை கூடங்களில் மாங்காய்கள் விற்பனை செய்யலாம். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகள் சாகுபடி தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். போச்சம்பள்ளி வாரச்சந்தையில் கட்டண விவரங்களுடன் தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மகனை வெளியே அனுப்பி மகளுக்கு பாலியல் தொந்த ரவு கொடுத்தார்.
    • போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வி.மாதேப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயது நபர். கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 22.01.2022 அன்று கூலித் தொழிலாளியின் மனைவியும், மாமியாரும் கூலி வேலைக்காக சென்ற னர். மகன், மகள் மற்றும் அவரது தந்தை ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்தனர். அப் போது தொழிலாளி மகனை வெளியே அனுப்பி மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து போலீசார், போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தொழி லாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உமாதேவி மங்களமேரி ஆஜர் ஆகி வாதாடினார்.

    • சாமுவேலை நண்பர்கள் 3 பேருடன் சென்று கத்தியால் வயிற்றில் குத்தினார்.
    • மேல்கிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட் டம்,தேன்கனிக் கோட்டை தாலுகா விற்கு உட்பட்ட கெலமங்கலம் துளசி நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 26). கூலித்தொழிலாளி.

    இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (32), என்பவரது மனைவி ரேணுகா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அறிந்த ஜெகதீஷ் பலமுறை கண்டித்துள்ளார். இதை சாமுவேல் கேட்க வில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் நேற்று கெலமங் கலம் ராஜலட்சுமி தியேட்டர் அருகே அமர்ந்திருந்த சாமு வேலை நண்பர்கள் 3 பேருடன் சென்று கத்தியால் வயிற்றில் குத்தினார்.

    படுகாயமடைந்த சாமு வேல் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக் கப்பட்டார். அங்கிருந்து மேல்கிச் சைக்காக ஓசூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக, கெல மங்கலம் போலீசில் சாமு வேல் புகார் செய்தார்.

    இதையடுத்து தலை மறைவாக இருந்த ஜெகதீஷ் மற்றும் ஜெக்கேரி அருகே உள்ள சின்னட்டியை சேர்ந்த விஜய் (25) மற்றும் கெலமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமூர்த்தி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×