என் மலர்
கிருஷ்ணகிரி
- வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார்.
- கலெக்டருக்கு அரசு அலுவலர்கள், ஓணம் வாழ்த்துக்களை கூறினார் கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக வசித்து வருகிறார்கள். அவர்கள் ஓணம் பண்டி கையை சிறப்பாக கொண்டாடி னார்கள். இதையொட்டி புத்தாடை அணிந்து வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டா டினார்கள். மேலும் வீடுகளை மலர்களால் அலங்கரித்திருந்தனர்.
கலெக்டர் முகாம் அலுவ லகம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆவார். அவர் நேற்று தனது அலுவலகத்தில் ஓணம் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடினார். வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார். இதையொட்டி கலெக்டருக்கு அரசு அலுவலர்கள், ஓணம் வாழ்த்துக்களை கூறினார்கள்.
இதே போல ஓசூர், கிருஷ்ணகிரி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்க கூடிய கேரளா மாநில மக்கள் ஓணம் பண்டிகையை நேற்று சிறப்பாக கொண்டா டினார்கள். இதே போல் தருமபுரி மாவட்டத்திலும் கேரளா மாநில மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள்.
- அண்மைக் காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரேஷன் அரிசி, கஞ்சா கடத்தல் அதிகரித்து உள்ளது.
- பழுதான உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் உள்ளதோடு, கம்பத்தில், முறையாக பொருத்தப்படாமல் அதிவேகமாக காற்று வீசி னால் மின் விளக்கு கீழே விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது.
வேப்பனப்பள்ளி,
கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் வேப்பனப் பள்ளி உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தோட்டக் கலைத் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவல கங்கள் உள்ளன. இதனால், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அனைத்து தேவைக்கும் வேப்பனப் பள்ளிக்கு வந்து செல்கின்ற னர்.
இதே போல, ஆந்திர, கர்நாடக மாநில எல்லையில் உள்ள கிராம மக்களும் தங்கள் தேவைக்கு வேப்ப னப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதனால், காலை முதல் இரவு வரை வேப்பனப் பள்ளியில் மக்கள் நடமாட்ட மும், வாகனங்களின் நெரி சலும் இருக்கும். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வேப்பனப்பள்ளி-பேரிகை சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப் பட்டது. ஆனால், மக்கள் பயன்பாட்டுக்கு வந்த ஓரிரு மாதங்களில் பழுதானது.
இதே போல, வேப்பனப் பள்ளி நகரில் குற்ற சம்பவங் களைக் கண்காணித்து தடுக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு காவல்துறை சார்பில் கண்காணிப்புக் கேமராக்கள் முக்கிய சாலைகளில் பொருத்தப் பட்டது. இக்கேமராக்கள் போதிய பராமரிப்பு இன்றி பயன்பாடு இல்லாத நிலை யில் உள்ளது. இதனால், இரு மாநில எல்லையில் உள்ள இப்பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக வேப்பனப் பள்ளியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில் பழுதான உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் உள்ளதோடு, கம்பத்தில், முறையாக பொருத்தப்படாமல் அதிவேகமாக காற்று வீசி னால் மின் விளக்கு கீழே விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது. இவ்வழியாக ஆந்திர, கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி, கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்படு கின்றன.
இதைத் தடுக்கவும், நகரில் நகை பறிப்பு, விபத்து மற்றும் விதிகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்ட கண் காணிப்புக் கேமராவும் பயன்பாட்டில் இல்லை. இதனால், அண்மைக் காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரேஷன் அரிசி, கஞ்சா கடத்தல் அதிகரித்து உள்ளது.
எனவே, பொது மக்களின் பாதுகாப்பு கருதி பேரிகை சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கைச் சீர் செய்யவும், குற்றங்களைத் தடுக்க நகரப் பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களைச் சீர் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.65 முதல் ரூ.78 வரை ஏலம் போனது.
- சுமார் 15 டன் கொப்பரை தேங்காய்கள் ரூ.10 லட்சம் வரை விற்பனை ஆனது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சுந்தரம் உத்தரவின் பேரில் பொது மேலாளர் முருகன் தலைமையில் விற்பனை சங்கத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.65 முதல் ரூ.78 வரை ஏலம் போனது. இதில் சுமார் 15 டன் கொப்பரை தேங்காய்கள் ரூ.10 லட்சம் வரை விற்பனை ஆனது.
இதில் விவசாயிகளுக்கு விற்பனை சங்கத்தின் மூலம் உடனடியாக பணம் பட்டு வாடா செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்த விவசாயிகள் நல்ல விலைக்கு போனதாக மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- இதில் 14,16,18, மற்றும் 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ராஜ் என்ற மாணவன் குண்டு எறிதல் போட்டியில் 9.75 மீட்டர் தூரத்தில் எறிந்து முதலிடம் பிடித்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
2023 சாம்பியன்ஷிப் தேர்வு செய்வதற்கு மாவட்ட அளவிலானதடகள போட்டிகள், ஓசூர் அருகே மதகொண்டபள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் நடை பெற்றது. இதில் 14,16,18, மற்றும் 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஓசூர் பேடரபள்ளியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியிலிருந்து 14 வயதுக்குட்பட்ட 3 மாணவர்களும், 3 மாணவியரும் கலந்து கொண்டனர். அதில், ராஜ் என்ற மாணவன் குண்டு எறிதல் போட்டியில் 9.75 மீட்டர் தூரத்தில் எறிந்து முதலிடம் பிடித்தார்.
மேலும், சுபிக்க்ஷா என்ற மாணவி உயரம் தாண்டு தலில், இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து, நேற்று பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் நாகேஷ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாநகராட்சி கவுன்சிலர் ரஜினி காந்த், பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ரமேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி மஞ்சுளா, துணைத் தலைவர் ரவி, பள்ளி உடற்கல்வி ஆசிரியை கலையரசி ஆகி யோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினர்.
மேலும், குண்டு எறித லில் முதலிடம் பிடித்த மாணவர் ராஜ், மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.
- காட்டு பெருமாள் கோயிலில் இருந்து ஜம்புத்து கிராமம் வரை குண்டும் குழியுமான சாலையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.
- ஜம்புத்து கிராமத்திற்கு தற்போதுள்ள ஜிட்டாண்டஹள்ளி மின் இணைப்பில் இருந்து மாற்றி ஆலப்பட்டி மின்ப கிர்மான வட்டத்தோடு இணைக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி அருகே உள்ள ஜம்புத்து கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசகர் நஷீர்அகமத், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அனுமத்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் வரதராஜன், மாவட்ட பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பா ளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு சங்கத்தின் கொ டியினை ஏற்றிவைத்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள கோரிக்கை குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை கட்ட கடந்த 1953-ம் ஆண்டு நிலத்தைக் கொடுத்து விட்டு புலம்பெயர்ந்து குடியிருந்து வரும் 75 குடும்பங்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். காட்டு பெருமாள் கோயிலில் இருந்து ஜம்புத்து கிராமம் வரை குண்டும் குழியுமான சாலையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும். ஜம்புத்து கிராமத்திற்கு தற்போதுள்ள ஜிட்டாண்டஹள்ளி மின் இணைப்பில் இருந்து மாற்றி ஆலப்பட்டி மின்ப கிர்மான வட்டத்தோடு இணைக்க வேண்டும்.
காட்டுப் பன்றி களை சுட்டுக் கொல்ல துப்பாக்கி வழங்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விளைப் பொருட்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். யானை களால் உயிர்சேதம் ஏற்பட் டால் இழப்பீடு தொகை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- விழாவிற்கு திராவிடர் கழக தலைமை கழக அமைப் பாளர் ஊமை. ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அறி வரசன் வரவேற்றார்.
- நிகழ்ச்சி யில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் மய்யத்தை திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி,
பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் பெரியார் மய்யம் திறப்பு விழா, தந்தை பெரியார் சிலை திறப்பு விழா, அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா கிருஷ்ண கிரி கார்னேசன் திடலில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு திராவிடர் கழக தலைமை கழக அமைப் பாளர் ஊமை. ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அறி வரசன் வரவேற்றார். நிகழ்ச்சி யில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் மய்யத்தை திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பெரியார் சிலையை திறந்து வைத்தார். உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அம்பேத்கர் நூலகத்தை திறந்து வைத்தார். கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, கி.வீரமணி படிப்பகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.மதியழகன் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி கிழக்கு), ஒய்.பிரகாஷ் (கிருஷ்ணகிரி மேற்கு), திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலா ளர் அன்புராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் என்.எஸ்.பிரபாவதி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மாணிக்கம், மாநில ஒருங்கி ணைப்பாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.பி. சுகவனம், நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர செயலாளர் நவாப், தி.மு.க. பிரமுகர் தொழில் அதிபர் கே.வி.எஸ். சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினேஷ், துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட விவசாயி அணி துணை அமைப்பாளர் ஜி.கே.உதயகுமார், மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
- இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 50 ஆண்டுகள் ஆகியும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையிடம் பல முறை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை எனக்கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட நிர்வாகம் மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறையை கண்டித்து கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார். கட்சியின் தொகுதி செய லாளர் தியாகு, தொகுதி துணை செயலாளர் முனிசந்திரன், ஒன்றிய செயலாளர் ஆலபட்டி ரமேஷ், மாதையன், பாக்யராஜ், சசிகுமார், எடிப்பள்ளி கிருஷ்ணன், தியாகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதையொட்டி புதிய வீட்டு வசதி வாரிய குடியி ருப்பு பஸ் நிறுத்தத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக நீதிமன்றத்தை நோக்கி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், உதவி கலெக்டர் ர் பாபு, தாசில் தார் சம்பத் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்ச னைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை யடுத்து 15 நாட்களுக்குள் கோரிக் கைகள் நிறை வேற்றவிட்டால் மீண் டும் நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கும் போராட்டம் நடைபெறும் எனக்கூறி போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- காலிபணியிடங்கள் 3,359. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இந்த நேரடித்தேர்விற்கு கடந்த 18-ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (புதன்கிழமை) தொடங் குகிறது.இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித்தேர்வு 2023 பதவிளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்த காலிபணியிடங்கள் 3,359. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த நேரடித்தேர்விற்கு கடந்த 18-ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம். இந்த போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 04343 - 291983 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள், இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒசூர் சிப்காட் லயன்ஸ் கிளப் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
- இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமை வகித்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒசூர் சிப்காட் லயன்ஸ் கிளப் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் தலைவர் பிரேம் ஆனந்த், தாளாளர் தேவராஜன், ஆலோசகர் நம்பி, முகாம் ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மற்றும் பள்ளி பி.டி.ஏ. நிர்வாகிகள் சுதா கர், ஜெபஸ்டின் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 70-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு கண்களை இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், சூளகிரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் கனிமங்கள் மற்றும் குவாரி அமைக்கும் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றி யத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வளாக கட்டிடம், ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் கனிமங்கள் மற்றும் குவாரி அமைக்கும் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி. ஊ), விமல் ரவிக்குமார், பாபிபிராசினா (வ.ஊ) மற்றும், உதவி பொறி யாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தார்கள்.
- சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 387 மனுக்களை வழங்கினார்கள்.
- மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 387 மனுக்களை வழங்கினார்கள்.மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேட்டை தடுப்பு காவலர்கள் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி வனப்பகுதிகளில் காட்டுப்பன்றி, மான், மயில், யானைகள் அதிக அளவில் உள்ளன. இவை தண்ணீர், உணவு தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக யானைகள் தக்காளி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன் தலைமையில் வனவர் தேவநாதன், வனகாப்பாளர் மகா விஷ்ணு மற்றும் வனகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கம்பந்தூர் கிராமம் அருகே 2 பேர் காட்டு பன்றி கறியை பங்குபோட்டு கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்து றையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அதேபகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 60), சதீஷ் (22) என்பதும், காட்டுப்பன்றியை வேட்டையாடி கறியை பங்கு போட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஜவளகிரி வனச்சரக அலுவலர் முரளிதரன் தலைமையில் வனவர்கள் ரமேஷ், ஆனந்த், வனகாப்பா ளர்கள் கோவிந்தன், கதிர வன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 2 பேர் மயிலை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜான்சன்லுகன் (வயது26), சதுகான்லுகன் (28) என்பதும், தனியார் விவசாய பண்ணையில் தங்கி கூலி தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடியது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.






