என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 15 டன் கொப்பரை தேங்காய் ஏலம்
    X

    போச்சம்பள்ளி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 15 டன் கொப்பரை தேங்காய் ஏலம்

    • விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.65 முதல் ரூ.78 வரை ஏலம் போனது.
    • சுமார் 15 டன் கொப்பரை தேங்காய்கள் ரூ.10 லட்சம் வரை விற்பனை ஆனது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சுந்தரம் உத்தரவின் பேரில் பொது மேலாளர் முருகன் தலைமையில் விற்பனை சங்கத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.65 முதல் ரூ.78 வரை ஏலம் போனது. இதில் சுமார் 15 டன் கொப்பரை தேங்காய்கள் ரூ.10 லட்சம் வரை விற்பனை ஆனது.

    இதில் விவசாயிகளுக்கு விற்பனை சங்கத்தின் மூலம் உடனடியாக பணம் பட்டு வாடா செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்த விவசாயிகள் நல்ல விலைக்கு போனதாக மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×