என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த அடிப்படை உண்மையை அதிகமாக தெரிந்து கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், உலக இளைஞர் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், மாரத் தான் போட்டி தொடங்கியது. இதை உதவி கலெக்டர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உலக இளைஞர் திருவிழா 2023-24-ஐ கொண்டாடும் விதமாக திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடடு அலகின் சார்பில் இந்த மாரத்தான் போட்டி நடந்தது. இந்த மாரத்தான் போட்டி 5 கி.மீ தூரத்திற்கு நடத்தப்பட்டது.

    17 வயது முதல் 25 வயது வரை உள்ள கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காத்தான்பள்ளம் கொன்சாகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர் புனித வளனார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ் ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த மாரத்தான் போட்டி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி லண்டன்பேட்டை, தாலுகா அலுவலகம் வழியாக கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா வரை சென்று, மீண்டும் அதே வழியில் வனச்சரக அலுவலகம் வழியாக வந்து மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. இந்த போட்டியின் மூலம் போதை பொருள் தடுப்பையும், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு சென்றடைய செய்யவும், இளைஞர் மத்தியில் பாதுகாப்பையும், பாலியல் ரீதியான சமூக பொறுப்பையும் ஊக்கப் படுத்தவும், எச்.ஐ.வி, எய்ட்ஸ் - பாலியல் நோய்களுக்கான சிகிச்சைக்கான வழிமுறை தெரியப்படுத்தவும், எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த அடிப்படை உண்மையை அதிகமாக தெரிந்து கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் அருள், தாசில்தார் சம்பத், செஞ்சிலுவை சங்க செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எச்.ஐ.வி, எய்ட்ஸ் கூட்டமைப்பு தலைவர் குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள், ரெட் கிராஸ் அமைப்பினர், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
    • ஆண்டுகால சத்துணவு திட்டத்தை சீர்குலைப்பதை யும், சத்துணவு ஊழியர்களை அலைக்கழிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்டத் தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராதா, காந்திமதி, மாவட்ட இணைச் செயலாளர்கள் லட்சுமி, சுமதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதாம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.

    அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் கல்யா ணசுந்தரம், தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர், மாவட்டத் தலைவர் சரவணன், நகராட்சி மாநகராட்சி சங்க துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் நடராஜன் சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் மஞ்சுளா நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் கனகவள்ளி நன்றி கூறினார்.

    ஆர்ப்பா ட்டத்தில், 40 ஆண்டுகால சத்துணவு திட்டத்தை சீர்குலைப்பதையும், சத்துணவு ஊழியர்களை அலைக்கழிப்பதையும் தடுத்து நிறுத்தக் கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்கக்கோரியும், காலிப்பணியிடங்ளை நிரப்பிடவும், தேர்தல்கால வாக்குறுதியை நிறை வேற்றிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி னார்கள்.

    • லாட்டரி விற்பனை நடை பெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
    • ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளை சேர்ந்த 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடை பெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.

    அந்த வகையில் லாட்டரி விற்றதாக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெல மங்கலம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளை சேர்ந்த 34 பேரை போலீசார் கைது செய்தனர். 

    அவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள் மற்றும், ரூ.4,500 பணம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • பேருந்து ஊத்தங்கரை அருகே வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்தார்.
    • விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    மத்தூர்:

    பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

    இந்த பேருந்து நேற்றிரவு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்தார்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த மற்றொரு அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுனர் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

    இதில் காயமடைந்த மல்லிகா (வயது57), இசைவாணி (33), வேலு (42), பேருந்து ஓட்டுனர் குப்புசாமி (46), மாயவன் (42) ஆகிய 5 பேரும் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அடுத்துள்ள கே.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் (வயது60). இவரும், அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி மகன் மகேந்திரன் (32) என்பவரும் நேற்று இரவு அப்பகுதியில் மது அருந்தியுள்ளனர்.

    அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பன்னீர் அருகில் உள்ள மளிகை கடையில் வைத்து இருந்த மண்எண்ணையை எடுத்து மகேந்திரனின் பைக்கில் ஊற்றி தீ வைத்தார்.

    இதனால் 2 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் கோபமடைந்த மகேந்திரன் கல்லை எடுத்து பன்னீர் தலையில் போட்டு கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் பன்னீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    • டிரைவர் ராமச்சந்திரன், கண்டக்டர் ராமலிங்கம் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு பஸ்சில் இருந்த 15 பயணிகளை உடனே கீழே இறக்கி விட்டனர்.
    • தீ சிறிது அளவில் பற்றி எரிந்தபோது டிரைவர், கண்டக்டர் சமார்த்தியத்தால் 15 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

    மத்தூர்,

    புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டது. அந்த பஸ் ஊத்தங்கரை அருகே வந்த போது எதிர்பாராத விதமாக எஞ்சின் பகுதியில் திடீரென்று புகை வந்தது. அப்போது மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது.

    அப்போது டிரைவர் ராமச்சந்திரன், கண்டக்டர் ராமலிங்கம் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு பஸ்சில் இருந்த 15 பயணிகளை உடனே கீழே இறக்கி விட்டனர். உடனடியாக அவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு தகவல் அளித் தனர். தகவலறிந்த ஊத்தங் கரை தீயணைப்பு துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ சிறிது அளவில் பற்றி எரிந்தபோது டிரைவர், கண்டக்டர் சமார்த்தியத்தால் 15 பயணி களின் உயிர் காப்பாற் றப்பட்டது. அவர்களை பயணிகள் அனைவரும் பாராட்டினர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி, 120 காலிப்பணியிடங்கள் உள்ளன.
    • மேலும் விவரம் பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யத்தால் 2023ஆண்டிற்கான இரண்டாம் நிலைக்காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி, 120 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியுமுள்ள முன்னாள் படைவீரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையவழி வாயிலாக வருகிற செப்டம்பர் 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம். இது குறித்து மேலும் விவரம் பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • செல்போனில் டெலிகிராம் சமூக வலை தளத்தில் ஓட்டல்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்தது.
    • அதனை நம்பிய ரவிக்குமார் அந்த இ-மெயில் பகுதிநேர வேலைக்காக ஒரு ஏஜெண்டை தொடர்பு கொண்டார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்காண்டப்பள்ளி கிராமம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (32). இவரது செல்போனில் டெலிகிராம் சமூக வலை தளத்தில் ஓட்டல்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்தது. அதனை பார்த்து அந்த லிங்கை கிளிக் செய்தபோது அதில் வந்த ஏஜெண்டின் இ-மெயில் ஐடி-யை தொடர்பு கொள்ளவும் என்று வந்தது.

    உடனே அதனை நம்பிய ரவிக்குமார் அந்த இ-மெயில் பகுதிநேர வேலைக்காக ஒரு ஏஜெண்டை தொடர்பு கொண்டார். அப்போது அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு ரூ.8 லட்சத்து 26 ஆயிரத்து 179-யை ரவிக்குமார் செலுத்தினார். அதன்பிறகு அந்த ஏஜெண்டை தொடர்பு கொள்ளமுடியாததால், தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து ரவிக்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரசாயன பூச்சிக் கொல்லியின் பயன் பாட்டை வெகுவாக குறைக்கலாம்.
    • மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    கிருஷ்ணகிரி,  

    பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அள வோடு பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் கிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    பூச்சி தாக்குதல் கிருஷ்ண கிரி மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்கள், மா, வாழை உள்ளிட்ட தோட்டக் கலை பயிர்களும் சாகுபடி செய்யப் படுகின்றன. பல்வேறு பூச்சி மற்றும் நோய்கள் பயிர்களை தாக்க வாய்ப்பு உள்ளது.

    விவசாயிகள் பூச்சி களையும், நோய்களையும் கட்டுப் படுத்திட வேளாண்மை துறையால் பரிந்துரைக்கப்படும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான இயற்கை ஒட்டுண்ணிகள், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறி, உழவியல் முறைகள், உயிரியல் காரணிகள் ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்துவதின் மூலம் ரசாயன பூச்சிக் கொல்லியின் பயன் பாட்டை வெகுவாக குறைக்கலாம். மேற் குறிப்பிட்ட ஒருங்கி ணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையை கடை பிடிக்காமல் தேவைக்கு அதிகமாக பூச்சி மற்றும் நோய் கொல்லி மருந்துகளை பயன் படுத்துவதின் மூலம் நாம் உண்ணும் உணவுகளிலும், மற்றும் கால்நடை தீவனங்களிலும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு நிர்ண யிக்கப்பட்ட நஞ்சு அளவை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

    இதன் மூலம் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பிற்காலங்களில் பூச்சி மற்றும நோய்களை கட்டுபடுத்த முடியாமல் மகசூல் இழப்பு ஏற்பட கூடிய சூழ்நிலை உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர். எனவே உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பூச்சிக் கொல்லி மருந்துகளை அளவோடு பயன் படுத்திட வேண்டும். பூச்சி மருந்துகள் குறித்த தகவல் களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • விதை விற்பனை யாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக் குவியல்களின் தரம் அறிந்து விவசாயி களுக்கு விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
    • விதை உற்பத்தி யாளர்கள் அல்லது மொத்த விற்பனை யாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது விற்பனை பட்டியல் களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையும் கேட்டு சரிபாருங்கள்.

    கிருஷ்ணகிரி,

    விதை விற்பனை யாளர்கள் தரமான விதை களை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதை விற்பனை யாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக் குவியல்களின் தரம் அறிந்து விவசாயி களுக்கு விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். விதை உற்பத்தி யாளர்கள் அல்லது மொத்த விற்பனை யாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது விற்பனை பட்டியல் களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையும் கேட்டு சரிபாருங்கள்.

    பகுப்பாய்வு அறிக்கை பெறப்படாத விதைக் குவியல்களிலிருந்து பணிவிதை மாதிரிகள் எடுத்து ஒரு பணிவிதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ.80-ஐ செலுத்தி விதைகளின் தரத்தினை அறிந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து, பகுப் பாய்வறிக்கையினை பெற்றிடுங்கள்.

    விதைக்குவியல்களின் தரமறிந்து நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யுமாறு விதை விற்பனையாளர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
    • ஆய்வின்போது உணவுகளில் கலர் பவுடர்கள் சேர்ப்பதை அறி வுறுத்தப்பட்டது.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி, மற்றும் பெட்டிக்கடைகளில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு உத்தர வின்படி மாவட்ட நியமன அலுவலர் வெங்க டேசன் அறிவுறுத்தலின் பேரில்.மத்தூர் மற்றும் ஊத்தங்கரை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நாகேஸ்வரன் கல்லாவி ரோடு , பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி,பெட்டி கடைகளில் ஆய்வு செய்தார்.

    ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.ஆய்வின்போது உணவுகளில் கலர் பவுடர்கள் சேர்ப்பதை அறி வுறுத்தப்பட்டது. ஹோட்ட ல்களில் சுகாதார முறையில் சமைப்பதையும் அஜின மோட்டோ பயன்படுத்து வதை தவிர்ப்பதையும் எடுத்துரைக்கப்பட்டது.சங்கர் கேப் சாய் பவன் ஹோட்டல் ஆர் கே பேக்கரி கடைகள்சிங்காரவேலன் அகர்வால் கேரள பேக்கரி உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தார்.

    • இந்த திட்டத்திற்காக விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் கடந்த 24.07.2023 அன்று தொடங்கி வைத்தார்.
    • விண்ணப் பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலு வலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி தாலுகா கங்கலேரி ஊராட்சிகு உட்பட்ட தவளம் மற்றும் ஆலப்பட்டிகிராமங்களில் கலைஞர் மகளிர் உரி மைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்ப தாரர்களிடம் கள ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் கே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகளிர் உரிமை திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் கடந்த 24.07.2023 அன்று தொடங்கி வைத்தார்.

    விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப் பட்டது.கிருஷ்ணகிரி மாவட் டத்தில் முதற்கட்டமாக 584 ரேஷன் கடைகளில் இருக்கும்குடும்ப அட்டை களுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 74 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக 510 நியாயவிலை கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 05.08.2023 முதல் 16.08.202 வரை நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாமில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 859 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.

    இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப் பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவை யேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப் படும். அப்போது விண்ணப் பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலு வலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், வருவாய் ஆய்வாளர் ரமாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துராமன், கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×