சாமல்பட்டி அருகே மதுபோதை தகராறில் முதியவர் கொலை

கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மகேந்திரனை தேடி வருகின்றனர்.
சாமல்பட்டி அருகே மதுபோதை தகராறில் முதியவர் கொலை
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அடுத்துள்ள கே.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் (வயது60). இவரும், அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி மகன் மகேந்திரன் (32) என்பவரும் நேற்று இரவு அப்பகுதியில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பன்னீர் அருகில் உள்ள மளிகை கடையில் வைத்து இருந்த மண்எண்ணையை எடுத்து மகேந்திரனின் பைக்கில் ஊற்றி தீ வைத்தார்.

இதனால் 2 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் கோபமடைந்த மகேந்திரன் கல்லை எடுத்து பன்னீர் தலையில் போட்டு கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் பன்னீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மகேந்திரனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com