என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் மூலம் வாலிபரிடம்  ரூ.8 லட்சம் பணம் மோசடி
    X

    ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ.8 லட்சம் பணம் மோசடி

    • செல்போனில் டெலிகிராம் சமூக வலை தளத்தில் ஓட்டல்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்தது.
    • அதனை நம்பிய ரவிக்குமார் அந்த இ-மெயில் பகுதிநேர வேலைக்காக ஒரு ஏஜெண்டை தொடர்பு கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்காண்டப்பள்ளி கிராமம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (32). இவரது செல்போனில் டெலிகிராம் சமூக வலை தளத்தில் ஓட்டல்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்தது. அதனை பார்த்து அந்த லிங்கை கிளிக் செய்தபோது அதில் வந்த ஏஜெண்டின் இ-மெயில் ஐடி-யை தொடர்பு கொள்ளவும் என்று வந்தது.

    உடனே அதனை நம்பிய ரவிக்குமார் அந்த இ-மெயில் பகுதிநேர வேலைக்காக ஒரு ஏஜெண்டை தொடர்பு கொண்டார். அப்போது அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு ரூ.8 லட்சத்து 26 ஆயிரத்து 179-யை ரவிக்குமார் செலுத்தினார். அதன்பிறகு அந்த ஏஜெண்டை தொடர்பு கொள்ளமுடியாததால், தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து ரவிக்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×