என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சில் திடீர் தீ விபத்து
- டிரைவர் ராமச்சந்திரன், கண்டக்டர் ராமலிங்கம் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு பஸ்சில் இருந்த 15 பயணிகளை உடனே கீழே இறக்கி விட்டனர்.
- தீ சிறிது அளவில் பற்றி எரிந்தபோது டிரைவர், கண்டக்டர் சமார்த்தியத்தால் 15 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.
மத்தூர்,
புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டது. அந்த பஸ் ஊத்தங்கரை அருகே வந்த போது எதிர்பாராத விதமாக எஞ்சின் பகுதியில் திடீரென்று புகை வந்தது. அப்போது மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது.
அப்போது டிரைவர் ராமச்சந்திரன், கண்டக்டர் ராமலிங்கம் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு பஸ்சில் இருந்த 15 பயணிகளை உடனே கீழே இறக்கி விட்டனர். உடனடியாக அவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு தகவல் அளித் தனர். தகவலறிந்த ஊத்தங் கரை தீயணைப்பு துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ சிறிது அளவில் பற்றி எரிந்தபோது டிரைவர், கண்டக்டர் சமார்த்தியத்தால் 15 பயணி களின் உயிர் காப்பாற் றப்பட்டது. அவர்களை பயணிகள் அனைவரும் பாராட்டினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






