என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாய் குறுக்கே வந்ததால் அரசு பேருந்துகள் மோதி விபத்து
    X

    நாய் குறுக்கே வந்ததால் அரசு பேருந்துகள் மோதி விபத்து

    • பேருந்து ஊத்தங்கரை அருகே வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்தார்.
    • விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    மத்தூர்:

    பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

    இந்த பேருந்து நேற்றிரவு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்தார்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த மற்றொரு அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுனர் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

    இதில் காயமடைந்த மல்லிகா (வயது57), இசைவாணி (33), வேலு (42), பேருந்து ஓட்டுனர் குப்புசாமி (46), மாயவன் (42) ஆகிய 5 பேரும் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×