என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கவாத்து செய்தவன் மூலம் பூக்கள் உற்பத்தியை அதிகரித்து, காய் உற்பத்தி திறனை மேம்படுத்துகிறது.
    • தேவைக்கு அதிகமாக உள்ள கிளைகளை மா மரத்தில் இருந்து நீக்குவதன் மூலம் உரப்பகிர்வு முறையை திறனுடையதாக்க முடியும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் பூபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மா மரங்களில் இருந்து ஆண்டுக்கு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட காலநிலை மாற்றம், பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் காரணமாக மா பயிரில் மகசூல் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. எனவே, வரும் காலங்களில் நல்ல மகசூலை பெற்றிட விவசாயிகள் மா சாகு படியில் மா மரங்களில் அறுவடைக்கு பின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்து நல்ல மகசூல் பெற்று பயனடையலாம்.

    அதன்படி, மா மரங்களில் கவாத்து செய்வதன் மூலம் நல்ல சூரிய வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே உள்ள இலைகளுக்கு கிடைத்து, மரம் நன்றாக வளர்ந்து பூ பூத்து, நல்ல காய்ப்புக்கு ஏதுவாகிறது. தேவைக்கு அதிகமாக உள்ள கிளைகளை மா மரத்தில் இருந்து நீக்குவதன் மூலம் உரப்பகிர்வு முறையை திறனுடையதாக்க முடியும்.

    மேலும் இலைவ ளர்ச்சியை கட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலம் நிறைவான மகசூலை பெற முடியும். மரத்திற்கு எளிதாக சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் ஏற்பட கவாத்து வழி வகுப்பதன் மூலம் பூச்சி மற்றும் நோய்க ளால் ஏற்படும் இழப்பு குறைக்கப்பட்டு, காய்களில் நல்ல நிறம் உருவாகவும், தரம் மேம்படவும் வழிவகை செய்கிறது. கவாத்து செய்தவன் மூலம் பூக்கள் உற்பத்தியை அதிகரித்து, காய் உற்பத்தி திறனை மேம்படுத்துகிறது.

    எனவே, இது தொடர்பாக தோட்டக் கலைத்துறை சார்பில் வட்டார வாரியாக பயிற்சி வழங்க பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம், எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் தோட்டக்கலை விஞ்ஞானிகள் மூலம் பயிற்சி மற்றும் செயல் முறை விளக்கம் வழங்கப்ப டவுள்ளது.

    அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் 4-ந் தேதி பர்கூர் வட்டாரத்திலும், 7-ந் தேதி மத்தூர் வட்டாரத்திலும், 8-ந் தேதி காவேரிப்பட்டணம் வட்டாரத்திலும், 12-ந் தேதி கிருஷ்ணகிரி வட்டாரத்திலும், 13-ந் தேதி வேப்பனஹள்ளி வட்டாரத்திலும், 14-ந் தேதி ஊத்தங்கரை வட்டாரத்திலும் பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் நடைபெறவுள்ளது. எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மா விவசாயிகள் நல்ல மகசூல் பெற்றிட தோட்டக் கலைத்துறை சார்பில் கேட்டுக் கொள்கி றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று இவ்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
    • கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஓணம் கொண்டாடினர்.

    கிருஷ்ணகிரி,

    கேரளாவின் அறுவடை திருநாளான ஓணம் பண்டி கை நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி யின் நிறுவனர் கொங்க ரசன், பள்ளியின் தாளா ளர் சாமுண்டீஸ்வரி, நிர்வாக இயக்குனர்கள் கவுதமன், புவியரசன், பள்ளியின் முதல்வர் பார்வதி ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

    மேலும், பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று இவ்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஓணம் கொண்டாடினர்.

    இதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மாணவ, மாணவிகள் பல்வேறு வண்ண மலர் களின் இதழ்களை பயன்படுத்தி வண்ணமயமான ரங்கோலி கோலம் வரைந்து பள்ளியை அலங்கரித்தனர்.

    • சாதனை படைத்த மாணவிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
    • இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விஜய குமார், துணை முதல்வர் நசீர்பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் தடகள போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தஷிதா மற்றும் தயனிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மாணவி தஷிதா 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், தயனிதா நீளம் தாண்டுதலில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-ம் இடமும் பெற்று மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் இந்த மாணவிகள் மாநில அளவில் நடை பெறும் போட்டிகளில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களை பாரத் கல்வி குழு மங்களின் நிறுவனர் மணி சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார்.

    அவர் பேசும் போது மாணவ, மாணவிகள் எதிர் வரும் விளையாட்டு போட்டிகளில் மாநில அள விலும், தேசிய அளவிலும் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்று கூறி பரிசுகளை வழங்கினார். மேலும் சாதனை படைத்த மாணவிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

    வெற்றிக்கு உறுதுணை யாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் தமீசை பள்ளியின் நிறுவனர் மணி பாராட்டி னார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விஜய குமார், துணை முதல்வர் நசீர்பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடந்த 24-ம் தேதி வீட்டில் இருந்து மகாராஜ கடை முனீஸ்வரன் கோவி லுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.
    • பெற்றோர், உறவி னர்கள் எங்கு தேடி யும் கிடைக்கவில்லை. பெற்றோர், உறவி னர்கள் எங்கு தேடி யும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருேக உள்ள சப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது40). இவர் சற்று மன நலம் பாதிக்கபட்டவர். இவர் கடந்த 24-ம் தேதி வீட்டில் இருந்து மகாராஜ கடை முனீஸ்வரன் கோவி லுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. பெற்றோர், உறவி னர்கள் எங்கு தேடி யும் கிடைக்கவில்லை.

    இது குறித்து இவரது மனைவி லட்சுமி மகாராஜ கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகா ரின் பேரில் போலீசார் மாயமான வெங்கடேஷனை தேடி வருகின்றனர்.

    அதேபோல் ஓசூர் அருகே உள்ள பத்ரபள்ளி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் கடந்த 28 -ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். 

    • தரைப்பாலம் கட்டி யதிலிருந்தே அதிக அள வில் மழை பெய்யும் போ தெல்லாம், இது போன்ற நிகழ்வு தொடா்ந்து நடை பெறுகிறது.
    • தரைப்பாலத்தில் இருந்து நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும்

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியில் உள்ள தரைப்பாலம் கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூரு- பாண்டிச்சேரி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக இந்த தரைப் பாலத்தில் தண்ணீா் வெளியேறும் பாதை அடைத்துக் கொண்டதால் தரைத்தளத்தில் அதிக அளவு மழைநீா் தேங்கியது.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அருகே உள்ள கெரிகேப்பள்ளி தரைப்பாலம் வழியாக சுமாா் 10 கிலோ மீட்டா் சுற்றிச் சென்றன. இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் சாலையைக் கடக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினா். பெங்களூரில் இருந்து புது வைக்கு செல்லும் பிரதான வழித்தடம் என்பதால் பெங்களூரில் இருந்து வரும் வாகனங்கள் இந்த ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் சிக்கி பழுதாகி நின்றன.

    தரைப்பாலம் கட்டி யதிலிருந்தே அதிக அள வில் மழை பெய்யும் போ தெல்லாம், இது போன்ற நிகழ்வு தொடா்ந்து நடை பெறுகிறது. தரைப்பாலத்தில் இருந்து நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • பின்னர் வந்து பார்த்த போது கடையில் சீட்டு பிரிக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத் துள்ள செல்லம்பட்டி பகுதி யை சேர்ந்தவர் மதியழகன் (வயது52). இவர் அப்பகுதி யில் மளிகை கடை நடத்தி வந்தார். இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது கடையில் சீட்டு பிரிக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து மதியழகன் நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்து வந்தது.
    • மனமுடைந்து காணப்பட்ட தனபால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,   

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது38). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கடன் பிரச்சனை அதி கமாக இருந்து வந்தது.

    இதனால் சம்பவத்தன்று மனமுடைந்து காணப்பட்ட தனபால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
    • விரக்தி யடைந்து காணப்பட்ட விக்ரம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சின்னகொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் விக்ரம் (வயது17). இவர் கிருஷ்ணகிரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறி வியல் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந் நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழை பெற்று வீட்டில் இருந்து வந்தார். இதனால் விரக்தி யடைந்து காணப்பட்ட விக்ரம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, நேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொ டங்கி வைத்தார்.
    • ஓசூர் தாசில்தார் சுப்ரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. .பி.முருகன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற த்தொகு திக்குட்பட்ட ஓசூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில், பூனப்பள்ளி, மத்திகிரி ஆகிய இடங்களில் நெடுஞ்சா லைத்துறை சார்பாக ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, நேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொ டங்கி வைத்தார்.

    ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர்.முன்னிலை வகித்தனர். மேலும் இதில், ஓசூர் சப்- கலெக்டர் ஆர்.சரண்யா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவணன், ஓசூர் மாநக ராட்சி துணை மேயர் ஆனந்தைய்யா,ஓசூர் தாசில்தார் சுப்ரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. .பி.முருகன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனமுடைந்து காணப்பட்ட லோகித் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், நல்லூர் அருகே உள்ள கரியசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவ ரது மகன் லோகித் (வயது14). இவர் பாலக்கோடு அருகே செல்லியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் விடுதியில் தங்கி, 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 10-ந் தேதி கோவில் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்தார். திருவிழா முடிந்த பின்னர் லோகித்தை பள்ளி செல்ல அவரது தந்தை வற்புறுத் தியுள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட லோகித் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வேப்ப னப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர். 

    • இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
    • சாக்கடை கால்வாயை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,  

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள காசிக்காரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியன் (வயது40). மேஸ்திரி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது சாப்பிட்ட மதியன் ஓசூர் அருகே உள்ள மீனாட்சி லேஅவுட்டில் சாக்கடை கால்வாயை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னால் வந்த ஜே.சி.பி. வாகனம் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (34).இவர் ஓசூரில் தங்கி ஓட்ட லில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மத்திகிரி பஸ் ஸ்டான்ட் அருகே இருசக்கர வாகனத்தில் ஈஸ்வரி சென்றார்.

    அப்போது பின்னால் வந்த ஜே.சி.பி. வாகனம் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×