சிறுவன் உள்பட 2 பேர் மாயம்

கடந்த 24-ம் தேதி வீட்டில் இருந்து மகாராஜ கடை முனீஸ்வரன் கோவி லுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. பெற்றோர், உறவி னர்கள் எங்கு தேடி யும் கிடைக்கவில்லை. பெற்றோர், உறவி னர்கள் எங்கு தேடி யும் கிடைக்கவில்லை.
சிறுவன் உள்பட 2 பேர் மாயம்
Published on

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருேக உள்ள சப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது40). இவர் சற்று மன நலம் பாதிக்கபட்டவர். இவர் கடந்த 24-ம் தேதி வீட்டில் இருந்து மகாராஜ கடை முனீஸ்வரன் கோவி லுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. பெற்றோர், உறவி னர்கள் எங்கு தேடி யும் கிடைக்கவில்லை.

இது குறித்து இவரது மனைவி லட்சுமி மகாராஜ கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகா ரின் பேரில் போலீசார் மாயமான வெங்கடேஷனை தேடி வருகின்றனர்.

அதேபோல் ஓசூர் அருகே உள்ள பத்ரபள்ளி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் கடந்த 28 -ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com