என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
    • தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதிய ளித்தார்.

    சூளகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவில் வேப்பனஹள்ளி தொகுதி ,சூளகிரி ஒன்றியம், இம்மிடி நாயக்கன பள்ளி ஊராட்சிக் குட்பட்ட கிராமங்களில் 15-வது நிதிகுழு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.34.12 லட்சம் மதிப்பீட்டில் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இம்மிடி நாயக்கனபள்ளி ஊராட்சிக் குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தங்கள் பகுதியில் சிமெண்ட் சாலைகள் மற்றும் தார் சாலைகள் பல வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ளதாகவும், மற்றும் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று கடந்த மாதம் சேர்மன் அவர்களிடம் ஒன்றிய குழு உறுப்பினர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    அதன் பின் ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் அதிகாரி களுடன் நேரில் சென்று பார்வையிட்டு தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதிய ளித்தார்.

    அதனடிப் படையில் கும்மனூர் சாலை முதல் வேட்டியம்பட்டி சாலை வரை தார் சாலை அமைக்க சுமார்.ரூ.21.62 லட்சம் மதிப்பிலும், கும்மனூர் கிராமத்தில் கோவில் அருகில் சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம் மதிப்பிலும், சீகலபள்ளி கிராமத்தில் ரட்சை முதல் நாராயன சாமி வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம் மதிப்பிலும், மேடுபள்ளி கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது. இதனை ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ேஹம்நாத் தொடங்கி வைத்தார். இதற்காக ஒன்றிய குழு தலைவருக்கு கிராம பொதுமக்கள் பாராட்டுக் களையும் தெரிவித்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபி பிரான்சினா, விமல் ரவிகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் லதா ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் நாராயன்சாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நவீன்ந்தரன், மாரியப்பன், ரவி கிரன், ஊராட்சி கழக செயலாளர் வெங்கட்ராஜ், ஊர் கவுண்டர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • சமூக அறிவியல் ஆசிரியராக சத்திய சுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.
    • 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வாடமங்கலம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சமூக அறிவியல் ஆசிரியராக சத்திய சுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் பணியில் சேர்ந்த காலங்கள் முதல் 100 சதவீதம் தேர்ச்சியும். மாணவர்களின் கற்றல் மற்றும் விளையாட்டு யோகா போன்றவர்கள் தனி ஆர்வம் கொண்டு காலை மாலை என சிறப்பு வகுப்புகள் எடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றார்.

    இந்த பள்ளியில் 50 மாணவர்கள் என்ற நிலையில் இருந்த இப்பள்ளியானது தற்பொழுது 150 மாணவர்கள் என மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி மாணவர்களின் அன்பை பெற்ற ஆசிரியர் சத்திய சுதந்திரத்தை அவரது கிராமத்தில் தண்ணீர் செல்லும் கால்வாய்க்கு இவர் ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிகிறது.

    புகாரின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஆசிரியர் சத்திய சுந்தரத்தை குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த உத்தரவானது நேற்று மாலை பள்ளிக்கு ஈமெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த தகவல் ஆனது மாணவர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்து வகுப்புக்கு செல்லாமல் வகுப்பை புறக்கணித்து பள்ளியின் வளாகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அங்கு வந்த தலைமை ஆசிரியர் மாது, போச்சம்பள்ளி வட்டாட்சியர் அனிதா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் ஆசிரியரை பணியமர்த்த வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியதின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணியிடம் மாற்றம் உத்தரவானது புகார் நிரூபிக்கப்பட்டால் தொடரும். இல்லையெனில் அந்த உத்தரவு ரத்து செய்து அவரை மீண்டும் அதே பள்ளியில் அமர்த்த வாய்ப்புள்ளது என்றார்.

    • ஆட்டு குட்டிகளை தும்பிக்கையால் தாக்கிய போது 3 ஆட்டு குட்டிகள் பலியானது.
    • வனத்துறையினர் பலியான ஆட்டுக்குட்டிகள் மற்றும் சேதம் அடைந்த விளை பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி கிராமம் ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, 1,000-ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 15 நாட்களாக இப்பகுதிக்கு அடிக்கடி யானைகள் வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் தாசிகிணறு பகுதிக்கு வந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டுள்ள ராகி, தக்காளி, முருங்கை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்துவிட்டு, அதே பகுதியை சேர்ந்த பவுனேசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டி அருகே சென்றுள்ளது.

    அங்கு குட்டிகளை எடுத்து வைத்திருக்கும் குடில்களை தள்ளிவிட்டு, அதிலிருந்து ஆட்டு குட்டிகளை தும்பிக்கையால் தாக்கிய போது 3 ஆட்டு குட்டிகள் பலியானது.

    இதை அடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் பலியான ஆட்டுக்குட்டிகள் மற்றும் சேதம் அடைந்த விளை பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஏற்கனவே 3 மாதத்திற்கு முன் முதியவரை தாக்கியதில் அவருக்கு கை உடைந்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து இப்பகுதிக்கு படை யெடுக்கும் யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டி அடிக்கும்படி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நேற்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென பெங்களூருவுக்கு வந்தார்.
    • முதன் முறையாக தனது பூர்வீக ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று வருகை தந்தார்.

    கிருஷ்ணகிரி, ஆக.31-

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படம் இதுவரை சுமார் ரூ.500 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த படம் வெளியானதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். அங்கு தனது ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரபிரதேசத்திற்கு சென்றார்.

    அங்கு அந்த மாநில முதல்-மந்திரி யோகிஆதித்யநாத், எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.

    மேலும் அங்கு துணை முதல்-மந்திரியுடன் சேர்ந்து 'ஜெயிலர்' படத்தையும் பார்த்தார். பிறகு அயோத்தி ராமர்கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

    இதையடுத்து நேற்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென பெங்களூருவுக்கு வந்தார். அவர் காலை 11.30 மணியளவில் ஜெயநகரில் உள்ள பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பணிமனைக்கு வந்தார். அவரை கண்டதும் பி.எம்.டி.சி. ஊழியர்கள் ஆச்சரியமும், உற்சாகமும் அடைந்தனர்.

    அவர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

    இந்நிலையில், முதன் முறையாக தனது பூர்வீக ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று வருகை தந்தார்.

    அப்போது ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயண ராவ் உடன் சேர்ந்து பெற்றோர் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபாடு செய்தார். ரஜினிகாந்த் தனது சொந்த ஊருக்கு வந்ததால் அந்த கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் சொந்த ஊருக்கு வந்த ரஜினிகாந்துக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • கஞ்சா விற்றதாக 4 பேரை கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.2,200 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    மாவட்டத்தில் எங்கும் கஞ்சா விற்பனை நடை பெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.

    அந்த வகையில் கஞ்சா வைத்திருந்ததாக மகராஜகடை அருகே உள்ள பூசாரிப்பட்டி கோவிந்த ராஜ் (21), ஓசூர் பழைய வசந்த நகர் பிரிதிவி மேனன் (25), அஞ்செட்டி அருகே பஞ்சல் துணையை சேர்ந்த கத்தாலப்பா (43), குருபரப்பள்ளி அருகே உள்ள தாண்டவராயன் கொட்டாய் பார்த்திபன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.2,200 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • 30 மாணவ, மாணவிகள் 2 கிமீ தூரம் அடந்த வனப்பகுதி வழியாக நடந்து சென்று பிளிக்கல் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கின்றனர்.
    • மருத்துவமனைக்கு உரிகம் மற்றும் அஞ்செட்டிக்கு செல்ல வேண்டும். அரசு சார்பில் கட்டிகொடுத்த வீடுகளும் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், பெட்டமுகிலாளம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும் பாலான சிறு கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ளது.

    இந்த மலைக் கிராமங்களில் சாலை, மருத்துவம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. உரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈரான் தொட்டி மலைக் கிராமத்தில் 50 குடியிருப்பு களில் 900-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர்.

    இங்குள்ளவர்களின் பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் இருந்து வருகிறது.

    வானம் பார்த்த மானாவாரி நிலத்தில் விவசாயம் செய்வதால், மழையை நம்பியே சாகுபடி பணிகள் நடைபெற வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில், இக்கிராமத்தில் மின்சாரம், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், இக்கிராமத்தினர் 40 சதவீதம் பேர் வீடு, நிலங்களை விட்டு, விட்டு கர்நாடக மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-

    தமிழக எல்லைப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஈரான் தொட்டி கிராமத்தில் பல தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மீண்டும் வர 4 நாட்கள் ஆகிவிடும். தெரு விளக்குகள் சரியாக எரியாததால், குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி வனவிலங்குகள் வந்துவிடும்.

    இதனால், மாலை 6 மணிக்குள் வீட்டுக்குள் முடங்கும் நிலையுள்ளது. ஆழ்துளைக்கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி வைத்தனர். அது பழுதாகி தண்ணீர் வருவதில்லை. பழமையான கிணற்று நீரைக் குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

    இங்கிருந்து 30 மாணவ, மாணவிகள் 2 கிமீ தூரம் அடந்த வனப்பகுதி வழியாக நடந்து சென்று பிளிக்கல் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கின்றனர்.

    மருத்துவமனைக்கு உரிகம் மற்றும் அஞ்செட்டிக்கு செல்ல வேண்டும். அரசு சார்பில் கட்டிகொடுத்த வீடுகளும் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    அடிப்படை வசதி மற்றும் வருவாய்க்கு வழியில்லாத தால் பல ஆண்டுகளாக வாழ்ந்த பலர் ஊரை காலி செய்து, வெளியூருக்கு பிழைப்பு தேடி சென்று விட்டனர்.

    எனவே, எங்கள் கிரா மத்தில் சாலை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை அவரைக் காய் கிலோ ரூ.70 வரை விற்பனையானது.
    • கொடி அவரை சாகுபடிக்கு பந்தல் தேவை. இச்சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செல வாகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, ஓசூர், வேப்பனப்பள்ளி, பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங் கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக அவரைக் காய், முட்டைக்கோஸ், காலி பிளவர், பீன்ஸ், முள்ளங்கி, புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய் கறிகளை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதில், அவரை சாகுபடி யில் சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அறுவடையாகும் அவரைக்காய் ராயக்கோட்டை சந்தை மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி உழவர் சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனர்.

    ராயக்கோட்டை சந்தை யிலிருந்து ஏலம் முறையில் வியாபாரிகள் கொள்முதல் செய்துதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு விற் பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    இதன் மூலம் ஆண்டு முழுவதும் நிலையான வருவாய் கிடைப்பதால் சிறு விவசாயிகள் அவரை சாகு படியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில் அவரை செடி மற்றும் கொடி வகையாக பயிரிடப் படுகின்றன. பட்டை, கொட்டை, சட்டை, சிவப்பு, நெட்டை, மூக்குத்தி, கோழி அவரை என பல்வேறு ரகங் கள் உள்ளன. இதில், கொடி வகை அவரை சாகுபடியில் அதிக விவசாயிகள் ஈடுபடு கின்றனர். கொடி அவரை சாகுபடிக்கு பந்தல் தேவை. இச்சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செல வாகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை அவரைக் காய் கிலோ ரூ.70 வரை விற்பனையானது.

    தற்போது, உழவர் சந்தைகளில் கிலோ ரூ.46-க்கும், வெளி சந்தைகளில் கிலோ ரூ.50-க்கும் விற் பனை செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் விலை மேலும் உயரும். மகசூல் அதிகரித்தாலும் ஓரளவுக்கு நிலையான வருவாய் கிடைக்கிறது. இதனால், அவரை சாகுபடியில் சிறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினர்.

    • வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவ லகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
    • இதே போல் வரு வாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவ லகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கள்ளக்குறிச்சி தாசில் தார் சஸ்பெண்டை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஐகோர்ட்டு தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ் முனியன் என்ப வரை, அரசியல் தலை யீடு காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

    அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு, வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று பணியை புறக்கணித்து காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் குருநாதன் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் குமரேசன், துணை தாசில்தார் மகேஸ்வரி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்தி ரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில், தாசில்தாரை இடைக்கால பணிநீக்கம் செய்த கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தின் ஊழியர் விரோத நடவ டிக்கையும், இதனை திசை திருப்ப மேற்கொண்டு வரும் பாரபட்சமான நடவ டிக்கைகளை கண்டித்தும், பெண் அலுவலர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசியும், அரசு நிர்வா கத்தில் அத்துமீறிதலையிட்டு வருவதாக ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனின் நடவடிக் கைகளைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப் பப்பட்டன. இதே போல் வரு வாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவ லகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலை மை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் ஜெக தாம்பிகா, நகராட்சி மாநக ராட்சி சங்க துணைத் தலை வர் வெங்கடேசன் உள்பட கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று வே லையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் அரசு அலுவலகங்களில் எந்த பணியும் நடைபெறவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போ ராட்டம் தொடரும் என வருவாய்த்துறை அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    • கவாத்து செய்தவன் மூலம் பூக்கள் உற்பத்தியை அதிகரித்து, காய் உற்பத்தி திறனை மேம்படுத்துகிறது.
    • தேவைக்கு அதிகமாக உள்ள கிளைகளை மா மரத்தில் இருந்து நீக்குவதன் மூலம் உரப்பகிர்வு முறையை திறனுடையதாக்க முடியும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் பூபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மா மரங்களில் இருந்து ஆண்டுக்கு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட காலநிலை மாற்றம், பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் காரணமாக மா பயிரில் மகசூல் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. எனவே, வரும் காலங்களில் நல்ல மகசூலை பெற்றிட விவசாயிகள் மா சாகு படியில் மா மரங்களில் அறுவடைக்கு பின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்து நல்ல மகசூல் பெற்று பயனடையலாம்.

    அதன்படி, மா மரங்களில் கவாத்து செய்வதன் மூலம் நல்ல சூரிய வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே உள்ள இலைகளுக்கு கிடைத்து, மரம் நன்றாக வளர்ந்து பூ பூத்து, நல்ல காய்ப்புக்கு ஏதுவாகிறது. தேவைக்கு அதிகமாக உள்ள கிளைகளை மா மரத்தில் இருந்து நீக்குவதன் மூலம் உரப்பகிர்வு முறையை திறனுடையதாக்க முடியும்.

    மேலும் இலைவ ளர்ச்சியை கட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலம் நிறைவான மகசூலை பெற முடியும். மரத்திற்கு எளிதாக சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் ஏற்பட கவாத்து வழி வகுப்பதன் மூலம் பூச்சி மற்றும் நோய்க ளால் ஏற்படும் இழப்பு குறைக்கப்பட்டு, காய்களில் நல்ல நிறம் உருவாகவும், தரம் மேம்படவும் வழிவகை செய்கிறது. கவாத்து செய்தவன் மூலம் பூக்கள் உற்பத்தியை அதிகரித்து, காய் உற்பத்தி திறனை மேம்படுத்துகிறது.

    எனவே, இது தொடர்பாக தோட்டக் கலைத்துறை சார்பில் வட்டார வாரியாக பயிற்சி வழங்க பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம், எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் தோட்டக்கலை விஞ்ஞானிகள் மூலம் பயிற்சி மற்றும் செயல் முறை விளக்கம் வழங்கப்ப டவுள்ளது.

    அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் 4-ந் தேதி பர்கூர் வட்டாரத்திலும், 7-ந் தேதி மத்தூர் வட்டாரத்திலும், 8-ந் தேதி காவேரிப்பட்டணம் வட்டாரத்திலும், 12-ந் தேதி கிருஷ்ணகிரி வட்டாரத்திலும், 13-ந் தேதி வேப்பனஹள்ளி வட்டாரத்திலும், 14-ந் தேதி ஊத்தங்கரை வட்டாரத்திலும் பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் நடைபெறவுள்ளது. எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மா விவசாயிகள் நல்ல மகசூல் பெற்றிட தோட்டக் கலைத்துறை சார்பில் கேட்டுக் கொள்கி றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று இவ்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
    • கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஓணம் கொண்டாடினர்.

    கிருஷ்ணகிரி,

    கேரளாவின் அறுவடை திருநாளான ஓணம் பண்டி கை நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி யின் நிறுவனர் கொங்க ரசன், பள்ளியின் தாளா ளர் சாமுண்டீஸ்வரி, நிர்வாக இயக்குனர்கள் கவுதமன், புவியரசன், பள்ளியின் முதல்வர் பார்வதி ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

    மேலும், பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று இவ்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஓணம் கொண்டாடினர்.

    இதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மாணவ, மாணவிகள் பல்வேறு வண்ண மலர் களின் இதழ்களை பயன்படுத்தி வண்ணமயமான ரங்கோலி கோலம் வரைந்து பள்ளியை அலங்கரித்தனர்.

    • சாதனை படைத்த மாணவிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
    • இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விஜய குமார், துணை முதல்வர் நசீர்பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் தடகள போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தஷிதா மற்றும் தயனிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மாணவி தஷிதா 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், தயனிதா நீளம் தாண்டுதலில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-ம் இடமும் பெற்று மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் இந்த மாணவிகள் மாநில அளவில் நடை பெறும் போட்டிகளில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களை பாரத் கல்வி குழு மங்களின் நிறுவனர் மணி சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார்.

    அவர் பேசும் போது மாணவ, மாணவிகள் எதிர் வரும் விளையாட்டு போட்டிகளில் மாநில அள விலும், தேசிய அளவிலும் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்று கூறி பரிசுகளை வழங்கினார். மேலும் சாதனை படைத்த மாணவிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

    வெற்றிக்கு உறுதுணை யாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் தமீசை பள்ளியின் நிறுவனர் மணி பாராட்டி னார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விஜய குமார், துணை முதல்வர் நசீர்பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடந்த 24-ம் தேதி வீட்டில் இருந்து மகாராஜ கடை முனீஸ்வரன் கோவி லுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.
    • பெற்றோர், உறவி னர்கள் எங்கு தேடி யும் கிடைக்கவில்லை. பெற்றோர், உறவி னர்கள் எங்கு தேடி யும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருேக உள்ள சப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது40). இவர் சற்று மன நலம் பாதிக்கபட்டவர். இவர் கடந்த 24-ம் தேதி வீட்டில் இருந்து மகாராஜ கடை முனீஸ்வரன் கோவி லுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. பெற்றோர், உறவி னர்கள் எங்கு தேடி யும் கிடைக்கவில்லை.

    இது குறித்து இவரது மனைவி லட்சுமி மகாராஜ கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகா ரின் பேரில் போலீசார் மாயமான வெங்கடேஷனை தேடி வருகின்றனர்.

    அதேபோல் ஓசூர் அருகே உள்ள பத்ரபள்ளி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் கடந்த 28 -ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். 

    ×