என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே சென்னப்பள்ளி அரசு பள்ளியில் கலெக்டர் சரயு ஆய்வு செய்த காட்சி.
சூளகிரி பகுதி அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
- ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மாணவ, மாணவர் களுக்கு வழங்கப்படும் காலை உணவு மற்றும் மதிய உணவுகளில் எந்தவித குறைபாடும் இல்லாமல் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னப்பள்ளி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் களஆய்வு செய்யும் பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப் பட்டது. இம்முகாம்களில் பெறப்பட்ட விண்ணப் பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப் படும்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து சென்னப் பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களின் கற்றல், கற்பித்தல் திறன் குறித்து பார்வையிட்டு, மேலும், மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு திறன் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களின் கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, சத்துணவு மையத்தில் மாணவ, மாணவர் களுக்கு வழங்கப்படும் காலை உணவு மற்றும் மதிய உணவுகளில் எந்தவித குறைபாடும் இல்லாமல் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வட்டாட்சியர் சக்திவேல், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், பாப்பி பிரான்சினா ஆகியோர் உடன் இருந்தனர்.






