search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    யானை தாக்கி 3 ஆட்டுக்குட்டிகள் பலி- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    யானை தாக்கி 3 ஆட்டுக்குட்டிகள் பலி- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    • ஆட்டு குட்டிகளை தும்பிக்கையால் தாக்கிய போது 3 ஆட்டு குட்டிகள் பலியானது.
    • வனத்துறையினர் பலியான ஆட்டுக்குட்டிகள் மற்றும் சேதம் அடைந்த விளை பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி கிராமம் ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, 1,000-ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 15 நாட்களாக இப்பகுதிக்கு அடிக்கடி யானைகள் வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் தாசிகிணறு பகுதிக்கு வந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டுள்ள ராகி, தக்காளி, முருங்கை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்துவிட்டு, அதே பகுதியை சேர்ந்த பவுனேசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டி அருகே சென்றுள்ளது.

    அங்கு குட்டிகளை எடுத்து வைத்திருக்கும் குடில்களை தள்ளிவிட்டு, அதிலிருந்து ஆட்டு குட்டிகளை தும்பிக்கையால் தாக்கிய போது 3 ஆட்டு குட்டிகள் பலியானது.

    இதை அடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் பலியான ஆட்டுக்குட்டிகள் மற்றும் சேதம் அடைந்த விளை பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஏற்கனவே 3 மாதத்திற்கு முன் முதியவரை தாக்கியதில் அவருக்கு கை உடைந்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து இப்பகுதிக்கு படை யெடுக்கும் யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டி அடிக்கும்படி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×