என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 93 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் தேசிய அடையாள அட்டையினை வழங்கினார்.
    • கிருஷ்ணகிரியில் கலெக்டர் தலைமையில் 2-வது கட்டமாக நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமினை மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி தொடங்கி வைத்து, 93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இம்முகாம் ஏற்கனவே ஓசூரில் நடைபெற்றது. நேற்று 2-வது கட்டமாக நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில், 93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இம்முகாமில், எலும்பு முறிவு, மனநல மருத்துவம், கண் மருத்துவம், காதுமூக்கு தொண்டை மருத்துவம், நரம்பியல் மருத்துவம், பொது மருத்துவம், கண் காது பரிசோதனை குறித்து சிறப்பு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரியில் மண்டல அளவிலான கபடி தேர்வு போட்டி நடைபெற்றது.
    • கபடி போட்டியில் 4 மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், சேலம் மண்டல அளவில் கபடி தேர்வு போட்டி நேற்று முன்தினம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்துரை தலைமையில். 14, 17 வயது மற்றும், 19 வயதுக்குட்பட்ட 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. கடந்த 1-ந் தேதி ஆண்களுக்கும், நேற்று பெண்களுக்குமான கபடி தேர்வு போட்டி நடந்தது.

    இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கபடி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் நடந்த கபடி தேர்வு போட்டியில், 292 ஆண்களும், நேற்றைய கபடி தேர்வு போட்டியில், 172 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளையாடும், 7 கபடி வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள். 

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழைபெய்ததால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மேலும் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.'

    ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 200 கன அடியாக உள்ள நிலையில் அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 24.27 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நேற்று முன்தினம் 374 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 562 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 188 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50.25 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவின் விவரங்கள் (மில்லி மீட்டரில்):பெணுகொண்டாபுரம்- 50.2, கேஆர்பி அணை-40.4, தேன்கனிக்கோட்டை-24, பாம்பாறு-23, கிருஷ்ணகிரி-19, ஊத்தங்கரை-17.4, ராயக்கோட்டை-17, நெடுங்கல்-14.6, போச்சம்பள்ளி-14.4, பாரூர்- 7.8, அஞ்செட்டி- 4.4, ஓசூர்- 2.3 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 234.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    • தேன்கனிக்கோட்டை அருகே கோழிகடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
    • உறவினர் ஒருவர் விபத்தில் காயமமைடந்ததால் அவரை பார்க்க சென்றபோது கோழிக்கடையின் உரிமையாளர் வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் பணத்தை திருடியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாகர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சதர். இவரது மகன் ஜகீர் (வயது39). இவர் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷாமியா பானு.

    இந்த நிலையில் ஷாமியா பானு, தனது உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரை பார்ப்பதற்காக ஷாமி யாபானுவும், அவரது கணவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு ஓசூர் சென்றனர். மீண்டும் அவர்கள் நேற்று வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் இருந்த ரூ.2 லட்சம் திருடு போனது தெரியவந்தது.

    விசாரணை

    இதுகுறித்து ஜாகீர் உசேன் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாரத் கல்வி நிறுவனங்களின் சார்பில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவணுக்கு நிதிஉதவி வழங்கப்பட்டது.
    • பாரத் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவன் நீட் தேர்வில் 558 மதிப்பெண்கள் பெற்று நாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் தமிழ்செல்வன். இவர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயின்று வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தமிழ்செல்வன் நீட் தேர்வுக்காக பயின்று வந்தார். தற்போது நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் 720க்கு 558 மதிப்பெண் பெற்று நாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இவருக்கு பாரத் பள்ளியின் சார்பில் சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டது. தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்று நாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரியில் சேர தகுதி பெற்றுள்ளார்.

    மேலும் அந்த மாணவன் தனது தந்தையை இழந்து ஏழ்மை நிலையில் உள்ளதை அறிந்து மாணவனுக்கு கல்லூரியின் சேர்க்கைக்காக பாரத் கல்வி நிறுவனங்களின் சார்பில் நிறுவனர் மணி ரூ.50 ஆயிரம் நிதிஉதவி மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்தினார்.

    மேலும் அவர் பேசுகையில், எதிர்காலத்தில் மருத்துவ படிப்பு முடித்து ஏழை மக்கள், ஊனமுற்றோர் மற்றும் சமுதாயத்திற்கு சிறப்பான சேவை செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விஜயகுமார் மற்றும் துணை முதல்வர் நசீர் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.

    • கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரியில் கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பேரிடர் மீட்பு, வெள்ளதடுப்பு குறித்து பாதுகாப்பு மாதிரி ஒத்திகை நிகழச்சி நடந்தது. கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பருவமழை, பேரிடர் காலங்களில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், நீர் நிலைகளில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு பாதுகாப்புடன் மீட்பது என்பது குறித்து தத்ரூபமாக தீயணைப்பு மற்றும் மீட்புபணி வீரர்கள், நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் செய்து காண்பித்தனர். இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • கொத்தமல்லி, புதினாவை நம்பியே விவசாயிகள் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிர் செய்து வருகின்றனர்.
    • நவீன மாயமாக்கப்பட்ட மார்க்கெட்டு ஒன்றை அமைத்து தரவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதி 42 ஊராட்சிகள், 417 கிராமங்களை கொண்டுள்ளது.

    மலைகள், குன்றுகள் ஏற்ற தாழ்வு கொண்ட நிலபரப்பான சூளகிரி பகுதியில் தென்பெண்ணையாற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீர் மூலமும் மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலமும் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை விவசாயமாக கொத்தமல்லி, புதினா மற்றும் காய்கறி, பூக்கள் பயிரிடப்படுகின்றன.

    இதில் சூளகிரி ஒன்றிய பகுதியான பி.எஸ்.திம்ம சந்திரம், காட்டு நாயக்கன் தொட்டி, பேரிகை, நெரிகம், சின்ரான்தொட்டி, பி.குருபரப்பள்ளி, பண்ணப்பள்ளி, கும்பளம், காலிங்காவரம், பஸ்த்தலப்பள்ளி, அத்திமுகம், வெங்கடேசபுரம், ஆலுர், மைதாண்டப்பள்ளி, செம்பரசனப்பள்ளி, சிம்புல் திராடி, பெத்தசீகரளப்பள்ளி, எ.செட்டிப்பள்ளி, அனகொண்டப்பள்ளி, மாரண்டப்பள்ளி, கானலட்டி, காமன் தொட்டி, கோனேரிப்பள்ளி, பேரன்டப்பள்ளி, புக்காசாகரம், மருதாண்டப்பள்ளி, சூளகிரி, டோரிப்பள்ளி, பீர்ஜப்பள்ளி, சானமாவு, கொம்மேபள்ளி, உத்தனப்பள்ளி, டி.குருபரப்பள்ளி, சாமனப்பள்ளி, அயர்னப்பள்ளி, தியாகசனப்பள்ளி, எனுசோனை, பங்கனஅள்ளி, ஒசஅள்ளி, சென்னப்பள்ளி, மேலுமலை, இம்மிடி நாய்க்கனப்பள்ளி, உல்லட்டி, துப்பு கானப்பள்ளி ஆகிய 42 ஊராட்சிகளில் காலம் காலமாக கொத்தமல்லி, புதினாவை நம்பியே விவசாயிகள் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிர் செய்து வருகின்றனர்.

    சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் பயிர் செய்த தோட்டங்களில் அறுவடை செய்த காய்கறி, பூக்கள் ஓசூர் மார்க்கெட்டுக்கு எடுத்து சென்று வியாபாரம் செய்வார்கள். கொத்தமல்லி, புதினாகளை மூட்டை, மூட்டையாக கட்டி தலையில் சுமந்து பின்பு வாகனங்களில் ஏற்றி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக சூளகிரி-உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கொத்தமல்லி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வார்கள்.

    இதைத்தொடர்ந்து 2006-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக அந்த இடம் அரசு கையகப்படுத்தப்பட்டது. இதனால் சூளகிரி-உத்தனப்பள்ளி சாலையில் மார்க்கெட் இல்லாமல் 15 ஆண்டுகளாக விவசாயிகள், வியாபாரிகள் மிகவும் வருத்–தத்தில் இருந்து வந்தனர். இதனையடுத்து கொத்தமல்லி, புதினாவுக்கு என்று விற்பனை செய்ய இடம் வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். பின்பு வட்டார வளர்சி அலுவலக அதிகாரிகள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒரமாக அலகுபாவி எதிரே உள்ள மலை அடிவாரத்தில் அரசு நிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.

    அந்த இடம் குண்டும், குழியும் உள்ளதால், வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் இருந்து வந்தது. போதிய வசதிகள் இல்லாததால், பல வியாபாரிகள் மருதாண்டபள்ளி, பாளையம், ஒமதேப்பள்ளி என பிரிந்து சென்று பல பகுதிகளில் சாலை ஓரங்களில் ஆபத்தான நிலையில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொத்தமல்லி, புதினா பல ஆயிரம் டன் கணக்கில் லாரிகளில் விவசாய பொருட்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் கொத்தமல்லி, புதினா வகைகள் கீரைகள் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், சென்னை, சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா பல வெளி மாநிலம், வெளிநாடு என அனைத்து பகுதிகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ஒரு பகுதியாக சூளகிரி அமைந்துள்ளது.

    அனைவரின் மனதில் இடம் பிடித்த ஒன்றான கொத்தமல்லி, புதினா ஏற்றுமதி செய்வதற்காக சூளகிரி பகுதியில் அரசு தானாக முன்வந்து 6 ஏக்கரில் நவீன கட்டிடம், சிமெண்ட் சாலை, வாகன நிறுத்துவதற்கான இடவசதிகள், கழிப்பிடம், சி.சி.டி.வி. கேமரா, மின்விளக்கு, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நவீன மாயமாக்கப்பட்ட மார்க்கெட்டு ஒன்றை அமைத்து தரவேண்டும் என்று சூளகிரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • ரூ. 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது
    • மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே உளியாளம் கிராமத்தில், ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமள என்று தொழிற்சாலை முழுவதும் பரவியது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், உரிமையாளருக்கு தகவல் அளித்தனர். மேலும், தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில்,மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் என 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்.

    • புளியஞ்சேரி பகுதிக்கு அருகே வந்தபோது நிலைதடு–மாறி கீழே விழுந்தது.
    • சந்திரசேகர் படுகாயம–டைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பி.மாண்டபள்ளி கிராமத்–தைச் சேர்ந்தவர் ராஜப்பன். இவரது மகன் சந்திரசேகர் (வயது25).

    இவர் குருபரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் புளியஞ்சேரி பகுதிக்கு அருகே வந்தபோது திடீ–ரென்று வண்டி கட்டுப்–பாட்டை இழந்து நிலைதடு–மாறி கீழே விழுந்தது. இதில் சந்திரசேகர் படுகாயம–டைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த குருபரப்பள்ளி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து இறந்த சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாட்ஸ் அப்பில், குறைந்த முதலீட்டில் அதிக லாபத்–துடன் கமிஷன் கிடைக்கும் என்று குறுந்தகவல் வந்தது.
    • மர்ம நபர் கூறிய வங்கி கணக்கு–களில் ரூ.17.25 லட்சம் பணம் செலுத்தி–யுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் துறைஸ் நகரைச் சேர்ந்தவர் தியாகு.

    இவரது செல்போன் வாட்ஸ் அப்பில், குறைந்த முதலீட்டில் அதிக லாபத்–துடன் கமிஷன் கிடைக்கும் என்று குறுந்தகவல் வந்தது.

    அதனை நம்பிய தியாகு, அந்த குறுந்தகவலில் இருந்த நிறுவனத்தின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அந்த எண்ணில் பேசிய மர்ம நபர், இதற்காக பணம் முதலீடும் செய்தால் கோடி கணக்கில் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தியாகு, அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கு–களில் ரூ.17.25 லட்சம் பணம் செலுத்தி–யுள்ளார். அதன்பின்னர் அந்த மர்ம நபரை தியாகு தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்–பட்டதை அவர் அறிந்தார். இதுகுறித்து தியாகு கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரி–வித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலத்தை அகலப்படுத்தி விரிவாக்க பணி நடைபெறுகிறது.
    • நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் ஆர்.சி.சர்ச் அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இதன்மேல்பகுதியில் தண்ட வாளத்தில் ரயிலும், கீழே அதன் அடிபகுதியில் சாைலையில் வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த பாலத்தை அகலப்படுத்தி விரிவாக்க பணி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் கர்நாடகாவிலிருந்து ஓசூர் ெரயில் நிலையம் வரை ஏற்கனவே உள்ள ரயில் வழிப்பாதை இரு வழிப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனுடன் சேர்த்து தேன்கனிக் கோட்டை சாலையில் உள்ள பாலத்தை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு, கடந்த 6-ம் தேதி இதற்கான பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி, தேன்கனிக்கோட்டை சாலையில் அடுத்த 7 மாதங்களுக்கு வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது . அதன்படி ஓசூரில் இருந்து தேன் கனிக்கோட்டை செல்லும் கனரக வாக னங்கள் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றன. இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், ெரயில் நிலையம் அருகேயுள்ள ெரயில்வே கீழ் பாதை வழியாக சென்று வர ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    இவ்வாறு ரெயில்வே கீழ் பாதை வழியாக சென்று வரும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. இதனால் நாள்தோறும் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை, ஏராளமான டூவீலர்கள் மற்றும் ஆட்டோக்கள் அந்த வழியாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திணறி, மிகவும் அவதியடைந்தனர்.

    அந்த பகுதியை கடந்து செல்லவே நீண்ட நேரமானது. மேலும் அவசர பணி நிமித்தமாக செல்வோரும் நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அந்த வழியாக நடந்து சென்ற பொது மக்களும் அவதிப்பட்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மற்றும்‌ அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மாணவ, மாணவர் களுக்கு வழங்கப்படும்‌ காலை உணவு மற்றும்‌ மதிய உணவுகளில்‌ எந்தவித குறைபாடும்‌ இல்லாமல்‌ வழங்க வேண்டும்‌ என தெரிவித்தார்‌.

    சூளகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னப்பள்ளி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் களஆய்வு செய்யும் பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப் பட்டது. இம்முகாம்களில் பெறப்பட்ட விண்ணப் பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப் படும்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து சென்னப் பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களின் கற்றல், கற்பித்தல் திறன் குறித்து பார்வையிட்டு, மேலும், மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு திறன் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களின் கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, சத்துணவு மையத்தில் மாணவ, மாணவர் களுக்கு வழங்கப்படும் காலை உணவு மற்றும் மதிய உணவுகளில் எந்தவித குறைபாடும் இல்லாமல் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வட்டாட்சியர் சக்திவேல், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், பாப்பி பிரான்சினா ஆகியோர் உடன் இருந்தனர். 

    ×