என் மலர்
கிருஷ்ணகிரி
- 1,500 க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது
- தென் பெண்ணை ஆற்றிலிருந்து தூள்செட்டி ஏரி வரை கால்வாய் அமைக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஆழியாளம் அணைக் கட்டின் வலதுபுற கால் வாயை மாற்றுப்பா தையில் அமைக்க வலியு றுத்தி விவசாயிகள் வாழ்வுரி மைக்கான போராட்ட கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு போராட்டக் குழு தலைவர் சுப்பையா, செயலாளர் முனிராஜ், பொருளாளர் முரளி ஆகியோர் தலைமை தாங்கி னார். அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் ஸ்டாலின் பாபு, மத்திய கமிட்டி உறுப்பினர் பிரபாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அவர்கள் பேசியதாவது:-
சூளகிரி அடுத்த ஆழியாளம் அணைக்கட்டு பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தூள்செட்டி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை கொண்டு செல்ல, 26 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைக்கும் திட்டத்தை தமிழக அறிவித்தது. இதற்காக சுமார், 200 ஏக்கர் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்த அறிவிப்பும் வெளியிட்டு உள்ளது.
இதனால், 1,500 க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது. விவசாயிகளின் எதிர்ப்பை யும் மீறி கால்வாய் திட்ட பணியை செயல்படுத்த அதிகாரிகள் முயல்கின்றனர்.
விவசாய நிலங்களை கையகப்படுத்தி அமைக்கப்படும் இந்த கால்வாயால் இம்மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. மாறாக இத்திட்டத்தை செயல்படுத்த தேன்கனிக்கோட்டை தாலுகாவில் கொப்ப ரை வரை உள்ள தென் பெண்ணை ஆற்றிலிருந்து தூள்செட்டி ஏரி வரை கால்வாய் அமைக்கலாம்.
அவ்வாறு செய்தால், ஆழியாளம் அணைக்கட்டில் இருந்து ராமாபுரம், நாயகான பள்ளி, பீர்ஜேப்பள்ளி, தியானதுர்க்கம், லட்சுமிபுரம் ஏரி, நாகமங்கலம் ஏரி வழியாக தூள்செட்டி ஏரிக்கு மாற்றுப்பாதையில், குறைந்த தூரத்தில் கால்வாய் அமையும். இங்குள்ள விவசாய நிலங்களும் பாதிக் கப்படாது. இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
தொடர்ந்து விவ சாய நிலங்களை கையகப்ப டுத்துவதை கண்டித்தும், கால்வாய் திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து அவர்கள் கலெக்டர் சரயுவை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய கலெக்டர், விவசாயிகள் எதிர்ப்பு குறித்து தமிழக அரசுக்கு தெரிவிப்ப தாகவும், மேலும் இது தொடர்பாக அமைதி குழு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள கலைந்து சென்றனர். ஆர்ப் பாட்டத்தை முன்னிட்டு கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு சங்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் சரவணன், குலசேகரன் மற்றும் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினர்.
- பழங்குடியின விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக விவசா யிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் பர்கூர் டி.மதியழகன், தளி டி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் வழங்கி கலெக்டர் பேசியதாவது:-
குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் சிறிய வகை வேளாண் இயந்திரங்களைக் கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பவர்டில்லர்கள், விசை களையெடுப்பான் உள்ளிட்ட கருவிகளை வழங்கும் பணிகள் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண் எந்திரமயமாக்கல் 2023-24 - திட்டத்தின் கீழ் 56 விவசாயிகளுக்கு பவர் டில்லர் வாங்க ரூ.42 லட்சத்து 74 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீதமும், பழங்குடியின விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாக ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறி யாளர்கள் ரவி, இந்துமதி, லட்சுமி ஐஸ்வர்யா, அனுசா பேகம், வேளாண் அலுவலர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் அஸ்லாம், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதிக்கு சென் றுள்ளார்.
- தங்க நகை மற்றும் ரொக்க பணம் ரூ.10,000 கொள்ளை போனது தெரியவந்தது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சப்பானிப்பட்டியை சேர்ந்தவர் சிவகாமி (வயது 45). இவர் காரிமங்கலம் மொரப்பூர் ரோட்டில் மளிகை கடை வைத் துள்ளார். இவர் குடும்பத்தி னருடன் தேர் பேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் சிவகாமி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதிக்கு சென் றுள்ளார். நேற்று மதியம் திருப்பதியில் இருந்து வந்த சிவகாமி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ க்கள் திறக்கப்பட்டு பொ ருட்கள் சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் ரூ.10,000 கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அந்த வழியாக வந்த லாரி ஒன்று காரின் மீது மோதியது.
- காரில் பயணம் செய்த நித்தியன் சம்பவ இடத்தில் பலியானார்.
மத்தூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வர் அருண்குமார் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவர் காரில் நேற்று முன்தினம் அதிகாலை கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலை மத்தூர் அருகே வந்து கொண்டிருந்தார். காரில் அவருடன் மகன் நித்தியன் (15) அமர்ந்திருந்தார்.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த லாரி ஒன்று காரின் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த நித்தியன் சம்பவ இடத்தில் பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்ப வ இடத்திற்கு சென்று நித்தியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு விலை உயர்ந்த மருந்து வழங்கப்பட்டது.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விலையர்ந்த மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி:
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த மாதம் 29-ந் தேதியன்று காலை மாதையன்(65) என்பவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது இடது கை, கால் மற்றும் முகம் ஒரு பகுதி 3 மணி நேரமாக செயல் இழந்து இருந்தது. அவரது தலையை உடனடியாக சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு, மூளையில் உள்ள ரத்த குழாய் அடைப்பை கண்டிறிந்து, ரத்தக்குழாய் அடைப்பை நீக்குவதற்கான விலை உயர்ந்த மருந்து தமிழக அரசால் வழங்கப்பட்டு, அவருக்கு செலுத்தப்பட்டது.
இந்த சிகிச்சையின் பலனாக ரத்தக்குழாய் அடைப்பு நீக்கி இடது கை, கால் பலம் பெற்று முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர்.இளங்கோ, நரம்பியல் துறை டாக்டர்.விஷ்ணுராஜ், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் டாக்டர்.விஜய், டாக்டர்.கோபிநாத், பட்ட மேற்படிப்பு மருத்துவர் டாக்டர்.அரவிந்தன் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களை கல்லூரியின் முதல்வர் டாக்டர்.பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் கூறியதாவது:-
இந்த மருந்தை செலுத்தினால் பலருக்கு நிரந்தர ஊனம் ஏற்படாமல், பெருமளவு தடுக்க முடியும். இத்தகைய உயர்தர உயிர் காக்கும் மருந்து தனியார் மருத்துவமனைகளில் செலுத்துவதற்கு சேலம், பெங்களூர் செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துக்கு ரூ.35 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இது நமது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் பக்கவாதத்தின் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக நமது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து, இந்த உயிர் காக்கும் பக்கவாத சிகிச்சையை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்தல், சூதாட்டத்தில் ஈடுபடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் ஓசூர் சிப்காட், சூளகிரி, கந்திகுப்பம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.540 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல தடை செய்யப்ட்ட குட்கா விற்பனை செய்த வேப்பனப்பள்ளி, பர்கூரை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். பணம் வைத்து சூதாடியதாக ஓசூர், சூளகிரி, பர்கூர், நாகரசம்பட்டியை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.
- தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 4 யானைகள் லிங்கதீரனப்பள்ளி பகுதியில் உள்ள விளை நிலத்தில் புகுந்து தக்காளிச் செடிகளைச் சேதப்படுத்தின.
- வனத்தை விட்டு வெளியேறும் யானைகளைக் கண்காணிக்க வேண்டும் என தேன்கனிக் கோட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலம் பன்னர் கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து ஆண்டு தோறும் 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளுக்குச் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வலசை வரும். இந்த யானைகள் தொடர்ந்து 6 மாதங்கள் தமிழக வனப்பகுதியில் சுற்றித் திரியும். இந்நிலையில், கடந்தாண்டு வலசை வந்த யானைகளில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து தேன்கனிக்கோட்டை, உரிகம், ஜவளகிரி உள்ளிட்ட வனப்பகுதிகளில் நிரந்தரமாகத் தங்கியுள்ளன.
இந்த யானைகள் கடந்த சில வாரங்களாக வனப்பகுதியையொட்டியுள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி குந்துக்கோட்டை செல்லும் சாலையில் ஒற்றை யானை நீண்ட நேரமாகச் சாலையில் சுற்றியது. இதனால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டுக் காத்திருந்தனர்.
அப்போது, சாலையில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களை ஒற்றை யானை துரத்தியதால், பொது மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுதொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து யானையை வனப்பகுதிக்குள் இடம் பெயரச் செய்தனர்.
இதேபோல, தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 4 யானைகள் லிங்கதீரனப் பள்ளி கிராமத்துக்குள் புகுந்து அங்கு அமைக்கப் பட்டிருந்த மின்வேலியைச் சேதப்படுத்தியதோடு, அப்பகுதியில் உள்ள விளை நிலத்தில் புகுந்து தக்காளிச் செடிகளைச் சேதப்படுத்தின.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, "வனத்தை விட்டு தற்போது யானைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. எனவே, வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு யானைகளிடமிருந்து மக்களையும், விளை நிலத்தை யும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
- சூளகிரி அருகே சிம்புள்திரடி ஊராட்சிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயத்தை முதன்மையாக தொழிலாக கொண்டு செய்து வருகின்றனர்.
- சிம்புள்திராடி பகுதியில் விவசாய பயிர்களை காய வைக்க களம் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட சிம்புள்திராடி ஊராட்சிக்குட்பட்ட அருப்பள்ளி, மையிலேப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் பல ஏக்கரில் ராகி, சோளம், கம்பு, நெல் ஆகிய பயிர்களை பயிரிட்டு தற்போது அவை அறுவடை செய்து வருகின்றனர்.
பயிர்களை அப்பகுதியில் காய வைப்பதற்காக நெற்களம் இல்லாமல் சிம்புள்திராடியில் இருந்து காளிங்காவரம் செல்லும் சாலையின் நடுவில் போட்டு வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இப்பகுதில் பயிர்களை காய வைப்ப தற்காக களம் அமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் அணைக்கு, 374 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 921 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.55 அடியாக இருந்தது. தொடர் மழையால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகமாகும் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை, 8 மணி நிலவரப்படி நெடுங்கல்லில், 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அதே போல், போச்சம்பள்ளி 32.10, பாரூர் 29, பாம்பாறு அணை 28, ஊத்தங்கரை 25.40, கே.ஆர்.பி. அணை 24.20, பெனுகொண்டாபுரம் 5.20 என மொத்தம் 208.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
- நிலக்கடலை பயிரிடப்பட்ட பகுதிகளில் கருகும் நிலையில் இருந்த செடிகள் மீண்டும் உயிர் பெற்று செழித்து வளர்ந்து காணப்பட்டது.
- இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி விதைப்பில் முழு ஈடுபாட்டுடன் விதைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூர், கல்லாவி, சந்தூர். ஆனந்தூர், ஓலைப்பட்டி கொடமாண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ஆண்டு தோறும் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகின்றனர். இந்த நிலக்கடலை பயிரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டில் பொருத்தமான மழை இல்லாததால் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை செடிகள் அனைத்தும் வாடி, வதங்கி கருகும் நிலையை அடைந்தது.
இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி விதைப்பில் முழு ஈடுபாட்டுடன் விதை நிலக்கடலை கடந்தாண்டை காட்டிலும் விலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதை பொருட்படுத்தாமல் வாங்கி விதைத்தனர். இந்த நிலையில் மழையின்றி நிலக்கடலை பயிர் வாடி வதங்கியது. இதை பார்த்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக போச்சம்பள்ளி பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், நிலக்கடலை பயிரிடப்பட்ட பகுதிகளில் கருகும் நிலையில் இருந்த செடிகள் மீண்டும் உயிர் பெற்று செழித்து வளர்ந்து காணப்பட்டது. இதனால் நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- ஆற்றில் தவறிவிழந்தவர்களையும், நீரில் அடித்து செல்பவர்களையும் எவ்வாறு மீட்டெடுப்பது குறித்தான மாதிரி ஒத்திகை பயிற்சியும் செயல்முறை விளக்கமும் செய்து காண்பித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம். போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பேரிடம் மீட்பு வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பருவ மழை பேரிடர் காலங்களில் ஆறு, ஏரிகுளம், அணை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வரஉள்ள வட கிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்புடன் மீட்பது என்பது குறித்து தத்ரூபாமாக தீயணைப்பு மற்றும் பணி வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தனர். இந்நிலையில் தற்போது தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் போச்சமபள்ளி அருகில் உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றுக்கு புனித நீராட குடும்பத்துடன் வருகிறார்கள். இதனை வைத்து போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் தவறிவிழந்தவர்களையும், நீரில் அடித்து செல்பவர்களையும் எவ்வாறு மீட்டெடுப்பது குறித்தான மாதிரி ஒத்திகை பயிற்சியும் செயல்முறை விளக்கமும் செய்து காண்பித்தனர். இதனால் ஆற்றுக்கு புனித நீராட வந்த பக்தர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
- ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் வருகிற 11-ந் தேதி தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7-ம் அணி வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.
- ஏலம் எடுத்தவுடன் முழு தொகை மற்றும் அதற்கு உண்டான ஜி.எஸ்.டி. முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ள வேண்டும்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி 7-ம் அணி போலீஸ் படை ஐ.பி.எஸ். (தளவாய்) ஜெயந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
போச்சம்பள்ளியில் 7ம் அணி காவலர் படை செயல்பட்டு வருகிறது இங்கு பயன் படுத்தப்பட்ட கழிவு செய்யப்பட்ட 8 காவல் வாகனங்களை எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 12-ந் தேதி காலை 12 மணியளவில் 7-ம் அணி காவல் படை தலைமை அலுவலகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.
மேலும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் வருகிற 11-ந் தேதி தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7-ம் அணி வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள். அன்றே 6 சக்கர வாகனத்திற்கு ரூ.3 ஆயிரமும், 4 சக்கர வாகனத்திறகு ரூ.2 ஆயிரமும் முன் பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்தவுடன் முழு தொகை மற்றும் அதற்கு உண்டான ஜி.எஸ்.டி. முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறிஉள்ளார்






