என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆழியாளம் அணைக்கட்டின் வலதுபுற கால்வாயை மாற்றுப்பாதையில் அமைக்க கோரிக்கை
- 1,500 க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது
- தென் பெண்ணை ஆற்றிலிருந்து தூள்செட்டி ஏரி வரை கால்வாய் அமைக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஆழியாளம் அணைக் கட்டின் வலதுபுற கால் வாயை மாற்றுப்பா தையில் அமைக்க வலியு றுத்தி விவசாயிகள் வாழ்வுரி மைக்கான போராட்ட கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு போராட்டக் குழு தலைவர் சுப்பையா, செயலாளர் முனிராஜ், பொருளாளர் முரளி ஆகியோர் தலைமை தாங்கி னார். அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் ஸ்டாலின் பாபு, மத்திய கமிட்டி உறுப்பினர் பிரபாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அவர்கள் பேசியதாவது:-
சூளகிரி அடுத்த ஆழியாளம் அணைக்கட்டு பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தூள்செட்டி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை கொண்டு செல்ல, 26 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைக்கும் திட்டத்தை தமிழக அறிவித்தது. இதற்காக சுமார், 200 ஏக்கர் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்த அறிவிப்பும் வெளியிட்டு உள்ளது.
இதனால், 1,500 க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது. விவசாயிகளின் எதிர்ப்பை யும் மீறி கால்வாய் திட்ட பணியை செயல்படுத்த அதிகாரிகள் முயல்கின்றனர்.
விவசாய நிலங்களை கையகப்படுத்தி அமைக்கப்படும் இந்த கால்வாயால் இம்மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. மாறாக இத்திட்டத்தை செயல்படுத்த தேன்கனிக்கோட்டை தாலுகாவில் கொப்ப ரை வரை உள்ள தென் பெண்ணை ஆற்றிலிருந்து தூள்செட்டி ஏரி வரை கால்வாய் அமைக்கலாம்.
அவ்வாறு செய்தால், ஆழியாளம் அணைக்கட்டில் இருந்து ராமாபுரம், நாயகான பள்ளி, பீர்ஜேப்பள்ளி, தியானதுர்க்கம், லட்சுமிபுரம் ஏரி, நாகமங்கலம் ஏரி வழியாக தூள்செட்டி ஏரிக்கு மாற்றுப்பாதையில், குறைந்த தூரத்தில் கால்வாய் அமையும். இங்குள்ள விவசாய நிலங்களும் பாதிக் கப்படாது. இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
தொடர்ந்து விவ சாய நிலங்களை கையகப்ப டுத்துவதை கண்டித்தும், கால்வாய் திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து அவர்கள் கலெக்டர் சரயுவை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய கலெக்டர், விவசாயிகள் எதிர்ப்பு குறித்து தமிழக அரசுக்கு தெரிவிப்ப தாகவும், மேலும் இது தொடர்பாக அமைதி குழு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள கலைந்து சென்றனர். ஆர்ப் பாட்டத்தை முன்னிட்டு கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு சங்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் சரவணன், குலசேகரன் மற்றும் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






