என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிம்புள்திராடி பகுதியில் விவசாய பயிர்களை காய வைக்க களம் அமைத்து தர வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
    X

    சிம்புள்திராடி காளிங்காவரம் சாலையில் சோளபயிரை காய போட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    சிம்புள்திராடி பகுதியில் விவசாய பயிர்களை காய வைக்க களம் அமைத்து தர வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

    • சூளகிரி அருகே சிம்புள்திரடி ஊராட்சிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயத்தை முதன்மையாக தொழிலாக கொண்டு செய்து வருகின்றனர்.
    • சிம்புள்திராடி பகுதியில் விவசாய பயிர்களை காய வைக்க களம் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட சிம்புள்திராடி ஊராட்சிக்குட்பட்ட அருப்பள்ளி, மையிலேப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் பல ஏக்கரில் ராகி, சோளம், கம்பு, நெல் ஆகிய பயிர்களை பயிரிட்டு தற்போது அவை அறுவடை செய்து வருகின்றனர்.

    பயிர்களை அப்பகுதியில் காய வைப்பதற்காக நெற்களம் இல்லாமல் சிம்புள்திராடியில் இருந்து காளிங்காவரம் செல்லும் சாலையின் நடுவில் போட்டு வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, இப்பகுதில் பயிர்களை காய வைப்ப தற்காக களம் அமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×