என் மலர்
கிருஷ்ணகிரி
- 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதைவேடம் அணிந்து வந்தனர்.
- வீடுகளில் கிருஷ்ணருக்கு சீடை, முறுக்கு படைத்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ண பகவான் அவதரித்த நாள் கிருஷ்ணஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை கிருஷ்ணர் கோவில், லட்சுமி நாரா யண சாமி கோவில், தர்மராஜா கோவிலில், கிருஷ்ணருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவர், பழையபேட்டை, நரசிம்ம சாமி கோவில் தெரு, நேதாஜி சாலை, மகாராஜகடை சாலை வழியாக தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வேணு கோபால் சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதைவேடம் அணிந்து வந்தனர். தொடர்ந்து பஜனையை தொடர்ந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகள் பூந்தோட்டம் முத்து மாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்ற னர்.
இதே போல வீடுகளிலும் கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. வீடுகளில் கிருஷ்ணருக்கு சீடை, முறுக்கு படைத்து வழிபட்டனர். மேலும் குழந் தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பெற் றோர் மகிழ்ந்தனர்.
- தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி யின் பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று நடந்தது. மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கிய நல திட்ட நிதியை, பட்டியல் இன மக்களுக்கு சேர்க்காமல் முறையாக பயன்படுத்தாததாக தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் ஆர்.கே.ரவி தலைமை தாங்கினார். நகர தலைவர் கவுன்சிலர் சங்கர் வரவேற்றார். மாநில பட்டியல் அணி துணை தலைவர் கஸ்தூரி, மாநில செயற்குழு உறுப்பினர் சூரியமூர்த்தி, மாவட்ட தலைவர் சிவப்பிரகாஷ், முன்னாள் மாவட்ட தலைவர் கோட்டீஸ்வரன் ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பட்டி யல் இன மக்க ளுக்கு ஒதுக்கிய பணத்தை அவர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் கவியரசு, பொதுச் செயலா ளர் சங்கர், துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் டெம்போ முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடி வில் ரமேஷ் நன்றி கூறினார்.
- வனத்துறையினர் பட்டாசு வெடித்து, அடர்ந்த காட்டிற்குள் யானைகளை விரட்டி வருகின்றனர்.
- யானை சாலைக்கு வந்து முகாமிட்டிருந்ததை சிலர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், 10-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தினமும் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்து தக்காளி, பீன்ஸ், வாழை, கோஸ், மற்றும் நர்சரி பயிர்களை சேதம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
வனத்துறையினர் பட்டாசு வெடித்து, அடர்ந்த காட்டிற்குள் யானைகளை விரட்டி வருகின்றனர். ஆனால், பல பிரிவுகளாக பிரிந்துள்ள யானைகள், தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில், ஒற்றை யானை ஒன்று மரகட்டா வனப்பகுதியிலிருந்து, உணவு தேடி வெளியேறியது. காட்டில் இருந்து சாலைக்கு வந்த அந்த யானை, மேடான வளைவு பகுதியில் சுற்றித்திரிந்தது.
அதனை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனே, வாகனத்தை திருப்பிக் கொண்டு வந்த வழியாக திரும்பிச் சென்றனர். நீண்ட நேரமாக அங்கேயே முகாமிட்டிருந்த ஒற்றை யானை, சாலையை கடந்து நொகனூர் வனப்பகுதிக்குள் சென்றது.
யானை சாலைக்கு வந்து முகாமிட்டிருந்ததை சிலர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சி வைரலாகி வருகிறது.
தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இருசக்கர வாகனங்கள் மூலம் சூளகிரி பேருந்து நிலையம் வந்து பல பகுகளுக்கு சென்று வருகின்றனர்.
- மாணவிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், , சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட மாரண்டப்பள்ளி , கருங்கள், மைதாண்ட பள்ளி, சுழல் தின்னை மற்றும் கூட்டூர் ஆகிய கிராமங்களில் சுமார் 1500 -க்கும் மேற்பட்ட குடியி ருப்பபுகள் உள்ளன.
இங்கு 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் விவசாய பொருட்களை விற்பனை செய்யவும், வெளியூர்களுக்கு சென்று தொழிற்சாலையில் பணிபுரிவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என 1500-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் சூளகிரி, ஒசூர், பெங்களுர், என பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் போதிய பேருந்து வசதியில்லாததால் கிராமங்களில் உள்ள டெம்போ , ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மூலம் சூளகிரி பேருந்து நிலையம் வந்து பல பகுகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் சூளகிரியில் இருந்து மைதாண்டப்பள்ளி வரை 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்து வருகின்றனர்.இதனால் மாணவிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாரண்ட பள்ளி முதல் மைதாண்டப்பள்ளி வரையிலான தார்சாலை மிக மோசமான நிலையில் குண்டும்,குழியுமாக உள்ளதால் அதனை சீர்படுத்தி, சூளகிரி பேருந்து நிலையத்தில் இருந்து மைதாண்டப்பள்ளி வரையிலான பகுதிக்கு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- வழித்தட பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது
- போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி அருகே உள்ள ஜாகீர் நாட்றாம் பள்ளியைச் சேர்ந்தவர் ராமு (வயது52). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் விஜய் (22).
இவர்களுக்குள் பொது வழித்தட பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே அவர்க ளுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத் தன்று ராமு மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த தினேஷ் குமார், சரத்குமார் ஆகியோரை விஜயை தரப்பினரைச் சேர்ந்த வர்கள் குடிபோதையில் ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் இருதரப்பி னருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ண கிரி தாலுகா போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தனசேகரன் (29), தினகரன் (27), பிரதீப் குமார் (33), கார்த்திக் (21), மண்ணுகான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பள்ளியின் நிறுவனர் அன்பரசன் மற்றும் தாளாளர் சங்கீதா அன்பரசன் தலைமை தாங்கினார்கள்.
- மாணவர்களுக்கு மாறுவேட போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றது.
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டு ரோட்டில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளியின் நிறுவனர் அன்பரசன் மற்றும் தாளாளர் சங்கீதா அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பள்ளி முதல்வர் ஷர்மிளா வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு மாறுவேட போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளளர் பரிசுகளை வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் மேலாளர் பூபேஷ் செய்திருந்தார்.
- ரூ.1.15 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டிட பணிகளை பார்வை யிட்டார்.
- குடிநீர் வினியோகம், தூய்மை பணிகளை நக ராட்சி பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி யில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடை பெற்ற வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். அதன் படி, கிருஷ்ணகிரி பழைய பேட்டை பழைய பஸ் நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.15 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டிட பணிகளை பார்வை யிட்டார்.
தொடர்ந்து, திருவண் ணாமலை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.43 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை மக்காத திடக்கழிவுகள் சேகரிப்பு மைய கட்டிட கட்டுமான பணிகளையும், நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையத்தில், நகரில் சேரும் மக்கும் குப்பை, பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்கா குப்பைகள் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர், சேலம் மேம் பாலம் அருகில், சுமார் 9 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, கிருஷ்ணகிரி நகராட்சியிலிருந்து நாள்தோறும் 6 முதல் 7 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து வெளி யேற்றும் பணிகளையும், இவ்வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், கழிவுகசடுகளை சுத்தி கரிப்பு செய்து வெளி யேற்றும் பணிகளுக்காக ரூ.16 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு கலெக்டர் வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்களின் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் குடிநீர் வினியோகம், தூய்மை பணிகளை நக ராட்சி பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் வசந்தி, செயற்பொறியாளர் சேகரன், சுகாதார ஆய்வா ளர் ராமகிருஷ்ணன், நகர கட்டமைப்பு அலுவலர் செந்தில், வருவாய் ஆய்வா ளர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாலிபரை தேடிவந்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அனுமந்தீர்த்தம், மத்தூர் ஆகிய பகுதிகளில் பெண்கள் சிலர் தங்களது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக கிடைக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
அவ்வாறு வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிற்கு திரும்பி வரும்போது இரவு நேரம் ஆகிவிடுவதால், தனியாக நடந்து வர அஞ்சி வந்தனர்.
இந்த நிலையில் ஊத்தங்கரையை அடுத்த அனுமந்தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு தனியாக திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து கட்டிபிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பெண் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதேபோன்று சாமல்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (வயது23) என்பவர் அங்குள்ள தனியார் நூல் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.
இதுகுறித்து வெண்ணிலா சாமல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாலிபரை தேடிவந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தலைமறைவான வாலிபரை பிடிக்க உஷார்படுத்தினர். மேலும், சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் 2 இடங்களில் பெண்களை வழிமறித்து பாலியல் சில்மிஷ சம்பவங்களில் ஈடுபட்டவர் ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதனால் தலைமறைவான வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபரை நேற்று ஊத்தங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கைதான வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) என்பதும் இவர் தான் 2 பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், இவர் மீது தருமபுரி, சென்னை, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைதான முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் கைது செய்ததன் மூலம் ஊத்தங்கரை, மத்தூர், சாமல்பட்டி ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் நிம்மதி அடைந்தனர்.
- 2-ந் தேதி இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி போட்டு விட்டு தூங்க சென்றார்.
- 2 பசுமாடுகளும் விஷம் கொடுத்து சாகடிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
மத்தூர்,
மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பக்கமுள்ளது பச்சியப்பன் வட்டம். இந்த ஊரை சேர்ந்தவர் கண்ணுபெருமாள் (87). விவசாயி. இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 2-ந் தேதி இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி போட்டு விட்டு தூங்க சென்றார்.
நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்த போது 2 பசுமாடுகளும் இறந்து கிடந்தன. மேலும் அந்த 2 பசுமாடுகளும் விஷம் கொடுத்து சாகடிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து கண்ணு பெருமாள் மத்தூர் போலீசில் புகார் செய்தார். மாடுகளுக்கு விஷம் கொடுத்து சாகவைத்தது யார், என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை செய்து பணி களை தொடக்கி வைத்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் , களர்பதி ஊராட்சியை சேர்ந்த கொத்தக்கோட்டை விநாயகர் கோவில் தெருவில், 15-வது நிதி மானிய குழுவில் இருந்து ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் 240 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை செய்து பணி களை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், தர்மகர்த்தா தங்கராஜ், முன்னாள் தர்ம கர்த்தா கோவிந்தன், ராஜப்பன் நாயுடு, ஒப்பந்த தாரர் கணேஷ்குமார், தகவல் தொழில் நுட்பவு பிரிவு பூபதி, பொன்னுசாமி, சக்திவேல், ஞானவேல், சம்பத், பிரவின், சிலம்பசரன், ஊராட்சி செயலர் சரவணன் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் விடா முயற்சியுடன் தொடர்ந்து போராடி வெற்றி பெற வேண்டும்.
- 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறை சார்பில் "கம்ப்யூட்எஃஸ் -2கே23" என்ற தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ரங்கநாத் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்து விழாவில் பேசுகையில், மாணவர்கள் விடா முயற்சியுடன் தொடர்ந்து போராடி வெற்றி பெற வேண்டும். சந்திராயன்- 2 தோல்வியை கண்டாலும், நம் விஞ்ஞானிகள் தொடர்ந்து போராடி சந்திராயன்- 3 ஐ வெற்றிபெற வைத்தது போல், மாணவர்கள் அனை வரும் தோல்வியை கண்டு துவளாமல் தொடர்ந்து போராடி வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று கூறினார்.
முன்னதாக, கணினி அறிவியல் துறை தலைவர் பாத்திமா வரவேற்றார். பேராசிரியை விஜயலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். உதவி பேராசிரியை கலை வாணி, கருத்தரங்கின் முழுமையான நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
இதில், சிறப்பு விருந்தினராக, ஷ்னீதெர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு வடிவமைப்பாளர் பாலு வெங்கடேஷ் கலந்து கொண்டு, மாணவர்களின் எதிர் காலத்தை ஊக்கப் படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டின் முக்கியத்து வம் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.
கருத்தரங்கில் கணினி அறிவியல் துறை பேராசிரி யர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு கல்லூரி களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் கலந்து கொண்டனர்.
முடிவில், ஒருங்கிணைப் பாளர் விக்ரம் நன்றி கூறினார்.
- தையற்பயிற்சி பெறுவதற்காக தையல் இயந்திரங்களை வழங்குமாறு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
- 30 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி நிறுவனம், திருப்பத்தூர் நகரில் கல்விப் பணியில் சிறப்புறச் செயலாற்றி வரும் மேரி இம்மாகுலேட் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் சுயத்தொழில் கற்று மேன்மையடையும் வகையிலும், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயன்பெறும் வகையிலும், அவர்கள் தையற்பயிற்சி பெறுவதற்காக தையல் இயந்திரங்களை வழங்குமாறு பள்ளி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளையேற்று, அப்பள்ளிக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் வழங்கினார்.
3.9.2023 அன்று நடை பெற்ற தையல் எந்திரங்கள் வழங்கும் விழாவில் ஐ.வி.டி.பி நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்கள், பள்ளி நிர்வாகத்தின் பங்களிப்பாக ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்கள் என மொத்தம் ரூ.1.86 இலட்சம் மதிப்பிலான 30 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
விழாவிற்கு முன்னிலை வகித்த பள்ளியின் தாளாளர், தலைமை யாசிரியர் மற்றும் பிற ஆசிரியப் பெருமக்கள் விழா விற்கான ஏற்பாடு களைச் சிறப்பாக செய்ததுடன், பெற்றோர்களின் நலனுக்காக தையல் எந்தி ரங்கள் வழங்கியமைக்கு தங்களின் நன்றியை ஐ.வி.டி.பி நிறுவனருக்கு தெரிவித்துக் கொண்டனர். இதுவரை ஐ.வி.டி.பி நிறுவனம் இப்பள்ளிக்கு ரூ.34.2 இலட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.






