என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தையல் எந்திரங்கள்"

    • தருமபுரி மாவட்டத்தில் உலாமக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் மொத்தம் 275 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • மொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூ.10.54 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் உலாமக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் மொத்தம் 275 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். நல வாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு, மகப்பேறு, கருச்சிதைவு, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், உலாமக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து, அந்நலவாரியத்தால் வழங்கப்படும் நலத்திட்டங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களை பற்றி விழிப்புணர்வு பெற்று, தகுதியான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து, முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டிலும், கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டிலும் சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித்தொகையும், உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரிய உறுப்பினருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000- மானிய நிதியும்,

    10 பயனாளிகளுக்கு தலா ரூ.6,160- வீதம் ரூ.61,600- மதிப்பீட்டில் விலையில்லா தையல் எந்திரங்களும், 7 பயனாளிகளுக்கு உலமாக்கள் மற்றும் பணியா ளர்கள் நலவாரியத்தில் புதிய உறுப்பினருக்கான அடையாள அட்டையும் என மொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூ.10.54 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    • தையற்பயிற்சி பெறுவதற்காக தையல் இயந்திரங்களை வழங்குமாறு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
    • 30 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,  

    ஐ.வி.டி.பி நிறுவனம், திருப்பத்தூர் நகரில் கல்விப் பணியில் சிறப்புறச் செயலாற்றி வரும் மேரி இம்மாகுலேட் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் சுயத்தொழில் கற்று மேன்மையடையும் வகையிலும், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயன்பெறும் வகையிலும், அவர்கள் தையற்பயிற்சி பெறுவதற்காக தையல் இயந்திரங்களை வழங்குமாறு பள்ளி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளையேற்று, அப்பள்ளிக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் வழங்கினார்.

    3.9.2023 அன்று நடை பெற்ற தையல் எந்திரங்கள் வழங்கும் விழாவில் ஐ.வி.டி.பி நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்கள், பள்ளி நிர்வாகத்தின் பங்களிப்பாக ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்கள் என மொத்தம் ரூ.1.86 இலட்சம் மதிப்பிலான 30 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    விழாவிற்கு முன்னிலை வகித்த பள்ளியின் தாளாளர், தலைமை யாசிரியர் மற்றும் பிற ஆசிரியப் பெருமக்கள் விழா விற்கான ஏற்பாடு களைச் சிறப்பாக செய்ததுடன், பெற்றோர்களின் நலனுக்காக தையல் எந்தி ரங்கள் வழங்கியமைக்கு தங்களின் நன்றியை ஐ.வி.டி.பி நிறுவனருக்கு தெரிவித்துக் கொண்டனர். இதுவரை ஐ.வி.டி.பி நிறுவனம் இப்பள்ளிக்கு ரூ.34.2 இலட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.

    ×