என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தூங்க செல்வதற்கு முன்பு படுக்கையில் இருந்த படியே சிகரெட் குடித்தார்.
    • தீப்பொறி பறந்து வந்து படுக்கை பற்றி கொண்டது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிகரலபள்ளி அருகே உள்ள ஜீவன் வாட்டம் பகுதியைச் சேர்ந்த வர் கோவிந்தசாமி (வயது60). இவர் கடந்த 6-ந் தேதி வீட்டில் தூங்க செல்வதற்கு முன்பு படுக்கையில் இருந்த படியே சிகரெட் குடித்தார்.

    அப்போது அவர் தீயை அணைக்காமல் சிகரெட்டை அவர் தூக்கி போட்டார். அதில் இருந்த தீப்பொறி பறந்து வந்து படுக்கை பற்றி கொண்டது. இதில் கோவிந்த சாமி மீது பற்றியதால் காயம டைந்தார். அவரை உறவினர்கள் உடனே மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவிந்தசாமியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கல்விக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
    • பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதைகடை வைக்கலாம்.

    கிருஷ்ணகிரி, 

    பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் அனிஷாராணி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலை தூரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், செப் 2-ம் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்த பட்டயப் படிப்பு ஒரு ஆண்டு, இரண்டு பருவங்கள் ஆகும். கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

    தமிழ்வழிக் கல்வியில் இப்பாடங்களுக்கு நேர்முக பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதைகடை மற்றும் தாவர மருந்துவ மையம் வைக்கலாம். மேலும் இடுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை யாளராகலாம். சுய வேலை வாய்ப்பு பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 

    • பஸ் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் சுற்றித்திரிகின்றனர்.
    • பஸ்சை எடுக்க முடியாமல் திணறிய கண்டக்டர் ஆளைவிட்டால் போதும் என்று தன்னிடம் இருந்த சில்லரை காசுகளை அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து சுற்றுப்புற கிராமப்புற பகுதிகளுக்கும் மற்றும் ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பரபரப்பாக காணப்படும் இந்த பஸ் நிலையத்தில் பயணிகள், பொதுமக்கள், கடைக்காரர்கள் பயணம் செய்ய வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் சுற்றித்திரிகின்றனர். இவர்கள் அவ்வப்போது அப்பகுதியில் நிற்கும் பொதுமக்களிடம் டீ வாங்கி கொடு, சாப்பாடு வாங்கி கொடு என்று கேட்டு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் காசு கொடு என்று பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளை பின் தொடர்ந்து சென்றும் தொந்தரவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட தயாரான அரசு பஸ்சை அப்பகுதியில் நின்ற மனநோயாளி பெண் ஒருவர் மறித்து நின்றுள்ளார். இதனால் டிரைவர் பஸ்சை இயக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த கண்டக்டர் பஸ்சின் முன்பகுதிக்கு சென்று அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நகர்ந்து செல்லுமாறு கூறினார். ஆனாலும் அந்த பெண் அந்த இடத்தை விட்டு நகரவில்லை, தலையில் கல்லை வைத்து கொண்டு நீண்ட நேரம் அவர் அப்படியே நின்றார்.

    இதனால் பஸ்சில் ஏறிய பயணிகள், கண்டக்டர், டிரைவர் என அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். ஒரு கட்டத்தில் அந்த பெண் காசு கொடு அப்போதுதான் போவேன் என்று அடம் பிடித்தார். பஸ்சை எடுக்க முடியாமல் திணறிய கண்டக்டர் ஆளைவிட்டால் போதும் என்று தன்னிடம் இருந்த சில்லரை காசுகளை அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார். காசு வாங்கிய பிறகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்து நகர்ந்துள்ளார். இதனை அடுத்து கண்டக்டர் மற்றும் டிரைவர் பஸ்சை அங்கிருந்து ஒட்டி சென்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இந்த செயலால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவதி அடைந்தனர்.

    தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இதுபோன்று ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித்திரிகின்றனர். மாவட்ட நிர்வாகம் இவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சாப்பரம் வழியாக காவேரிப்பட்டணம் நகருக்குள் வந்து தான் செல்ல முடியும்.
    • வருவாய்த்துறை மற்றும் போலீசார் கண்டு கொள்வதில்லை.

    காவேரிப்பட்டணம்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களின் அருகே ஏராளமான மலைகள் சூழ்ந்து காணப்படுகிறது. மலைகள் அருகே செம்மண் , சவுல் மண் , நுரம்பு வகை மண்கள் அதி கமாக காணப்படுகின்றது.

    இவ்வகை மண்களை சிலர் சட்டவிரோதமாக வெட்டி கடத்து கின்றனர். இப்பகுதிகளில் மண்களை சட்ட விரோதமாக கடத்துபவர்கள் பாலக்கோடு ரோடு மற்றும் சாப்பரம் வழியாக காவேரிப்பட்டணம் நகருக்குள் வந்து தான் செல்ல முடியும். ஆனால் அப்படி மண்களை லாரியில் எடுத்துக்கொண்டு வரும் பொழுது வருவாய்த்துறை மற்றும் போலீசார் கண்டு கொள்வதில்லை.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    தினமும் இரவு பகல் பாராமல் செம்மண் , நுரம்பு மண், ஆகியவற்றை மினி லாரியில் வைத்து கடத்துகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். நாங்களே ரகசியமாக தகவல் கூறினாலும் அதை அவர்கள் கண்டு கொள்வதில்லை.

    காவேரிப்பட்டணத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் மண் கடத்தலில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டு பிடிக்கலாம்.  எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மண் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • சீனிவாசா கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    • கிருஷ்ணரின் வரலாற்றையும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக் களை கூறினார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் மல்லிகை நகரில் அமைந்து உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டா டப்பட்டது. இவ்விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    அதைத்தொடர்ந்து அதிய மான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி. திருமால் முருகன் இவ்வி ழாவை தொடங்கி வைத்து கிருஷ்ண ஜெயந்தி தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் "நல்ல வர்களைக் காத்து தீயவர் களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மேலும் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று "கிருஷ்ணர் கீதையில் கற்பித்த பாடங்களை நினை வூட்டி தர்மத்தின் வழியைப் பின்பற்றி வாழ வழிகாட்டி" சிறப்புரை ஆற்றினார்.

    இந்நிகழ்வைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் வரவேற்புரை அளித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சி யாக கவிதை, பேச்சு, மாறு வேடம், நடனம், பாட்டு, உரியடித்தல் மற்றும் நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விழாவிற்கு மேலும் அழகூட்டி தம் திறமைகளை வெளிப்படுத் தினர்.

    இந்நிகழ்வில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி கணபதி ராமன், இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவி களைப் பள்ளியின் தாளாளர் பாராட்டினார். ஐந்தாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா மற்றும் பதினோறாம் வகுப்பு மாணவிகள் அர்ஃபாதாஜ், ஜீவிகா ஆகியோர் விழாவினைத் தொகுத்து வழங்கினர். இறுதியாக 11-ம் வகுப்பு மாணவர் இலக்கியன் நன்றியுரை வழங்கினார்.

    • தேவர் முக்குளம் கிராமத்தில், வணிகக்குழு கல்வெட்டினை புதிதாய் கண்டு பிடித்துள்ளது.
    • வணிகக் குழு கல்வெட்டு, கோவிலை பிரித்துக் கட்டியபோது கீழே தனியே வைக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர் முக்குளம் கிரா மத்தில், வணிகக்குழு கல் வெட்டினை புதிதாய் கண்டு பிடித்துள்ளது.

    இங்குள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோவில் கூரையில் வைத்துக் கட்டப்பட்டிருந்த முதலாம் ராஜேந்திரசோழனின் 18-ம் ஆட்சியாண்டை சேர்ந்த வணிகக் குழு கல்வெட்டு, கோவிலை பிரித்துக் கட்டியபோது கீழே தனியே வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    இந்த கல்வெட்டு 11-ம் நூற்றாண்டில் தேவர் முக்குளத்தினரின் சிறந்த வணிக தளமாக இருந்துள்ளது. அங்கு பல்வேறு வணிக குழுக்கள் இருந்து, அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு என வீரர்படைகளை வைத்து உள்ளனர். மேலும் அந்த வீரர்கள் தங்குவதற்கு என வீரப்பட்ட ணம் இங்கு இருந்ததை இந்த கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுப்பணியில் பிரகாஷ், தலைவர் நாராயண மூர்த்தி, சதானந்த கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், வரலாற்று ஆசிரியர் ரவி, தேவர் முக்குளம் சிங்காரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி அவரது சொந்த நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பில் நீர் ஏற்றும் அறை கட்டிக்கொடுத்தார்
    • 60 கிராமங்–களை சேர்ந்த விவசாயிகள் நீர் ஏற்றும் மோட்டார் பொருத்தப்–பட்டுள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஅள்ளி சட்ட–மன்றத் தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை, கொப்ப–கரை, மேட அக்ரகாரம் ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 60 கிராமங்–களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் குடிநீர் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் ராட்சத கிணறு அமைத்து நீர் ஏற்றும் மோட்டார் பொருத்தப்–பட்டுள்ளது.

    இதற்காக வேப்பன அள்ளி தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி அவரது சொந்த நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பில் நீர் ஏற்றும் அறை கட்டிக்கொடுத்தார். அந்த அறையை மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்–கப்பட்டது. நீர் ஏற்றும் அறை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர் ஏற்றும் அறையை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஓசூர் மாநக–ராட்சியின் மண்டல குழு தலைவர் ஜெய்பிரகாஷ், ராயக்கோட்டை மக்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி, செயலாளர் வக்கீல் முரு–கேசன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட கவுன்சி–லர் விமலா சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், புதுப்பட்டி தூரு–வாசன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், சஜ்ஜலப்பட்டி மணி மற்றும் 3 ஊராட்சி–களின் பிரமு–கர்கள், விவசாயிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்தலுடன் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன.
    • 20 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியில் வீர பத்திர சுவாமி 2-ம் ஆண்டு கும்பாபிஷேக அஷ்டபந்தன விழா நடைபெற்றது. முன்ன தாக செவ்வாய்க்கி ழமை அன்று இரவு சந்தூரில் இருந்து கங்கை பூஜை செய்து கால்நடையாக ஈச்சங்காடு பகுதியில் உள்ள வீரபத்திர சுவாமி கோவிலை வந்த டைந்தது. அன்று இரவு பெரியமொய் சுவாமிக்கு புன்னியதானம் அபிஷே கமும் சேவாட்ட வரவு வேடிக்கையும் நடைபெற்றன.

    புதன்கிழமை காலை சித்தப்பசுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு ஆலங்கார தீபாரதனையுடன் தலை முடி வாங்குதல் மற்றும் விரதம் இருந்த பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்தலுடன் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. இதனை தொ டர்ந்து ஸ்ரீ வீரபத்திர சுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு 2-ம் ஆண்டு அஷ்ட்டபந்தன கணபதி ஹோமகுண்ட சிறப்பு அபிஷேக ஆராத னையுடன் மஹா கும்பாபி ஷேகம் நடைபெற்றன.

    விழாவினை தொடர்ந்து கோவில் வளாகத்தில் குரும்பர் இன மக்களின் குல வழக்க சேவாட்ட நடனத்து டன், பூசாரி காளை மாட்டின் தலை மீதும், ஆட்டுகடாவின் தலை மீது தேங்காய் உடைத்தும், விரதம் இருந்த பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இத்துடன் பக்தர்கள் கரகம் எடுத்தல், தலை கூடுதல் நிகழ்ச்சி நடை பெறறன. இக்கும்பாபிஷேக விழாவினை சந்தூர், ஈச்சங்காடு, மங்கல்பட்டி, வெப்பாலம்பட்டி உள்ளிட்ட 65 கிராமங்களை சேர்ந்த குல தெய்வ கோவிலுக்கு சொந்தமான பங்குதாரர்கள், உறவினர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கம்புக்காலப்பட்டி பகுதியை சேர்ந்த ஊர் கவுண்டர் ராஜா, கோவில் பூசாரிக ளான சந்தூர் பகுதியை சேர்ந்த ராஜா, பூவாண்டி மாதையன், வெப்பாலம் பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ், கருப்பேரி பகுதி யை சேர்ந்த சிலம்பு உள்ளிட்ட விழா குழுவினர் செய்தருந்தனர். அத்துடன் பக்தர்களுக்கு சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதைவேடம் அணிந்து வந்தனர்.
    • வீடுகளில் கிருஷ்ணருக்கு சீடை, முறுக்கு படைத்து வழிபட்டனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ண பகவான் அவதரித்த நாள் கிருஷ்ணஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை கிருஷ்ணர் கோவில், லட்சுமி நாரா யண சாமி கோவில், தர்மராஜா கோவிலில், கிருஷ்ணருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவர், பழையபேட்டை, நரசிம்ம சாமி கோவில் தெரு, நேதாஜி சாலை, மகாராஜகடை சாலை வழியாக தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வேணு கோபால் சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதைவேடம் அணிந்து வந்தனர். தொடர்ந்து பஜனையை தொடர்ந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகள் பூந்தோட்டம் முத்து மாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்ற னர்.

    இதே போல வீடுகளிலும் கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. வீடுகளில் கிருஷ்ணருக்கு சீடை, முறுக்கு படைத்து வழிபட்டனர். மேலும் குழந் தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பெற் றோர் மகிழ்ந்தனர்.

    • தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.

     கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி யின் பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று நடந்தது. மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கிய நல திட்ட நிதியை, பட்டியல் இன மக்களுக்கு சேர்க்காமல் முறையாக பயன்படுத்தாததாக தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட தலைவர் ஆர்.கே.ரவி தலைமை தாங்கினார். நகர தலைவர் கவுன்சிலர் சங்கர் வரவேற்றார். மாநில பட்டியல் அணி துணை தலைவர் கஸ்தூரி, மாநில செயற்குழு உறுப்பினர் சூரியமூர்த்தி, மாவட்ட தலைவர் சிவப்பிரகாஷ், முன்னாள் மாவட்ட தலைவர் கோட்டீஸ்வரன் ஆகியோர் பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பட்டி யல் இன மக்க ளுக்கு ஒதுக்கிய பணத்தை அவர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் கவியரசு, பொதுச் செயலா ளர் சங்கர், துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் டெம்போ முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடி வில் ரமேஷ் நன்றி கூறினார்.

    • வனத்துறையினர் பட்டாசு வெடித்து, அடர்ந்த காட்டிற்குள் யானைகளை விரட்டி வருகின்றனர்.
    • யானை சாலைக்கு வந்து முகாமிட்டிருந்ததை சிலர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், 10-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தினமும் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்து தக்காளி, பீன்ஸ், வாழை, கோஸ், மற்றும் நர்சரி பயிர்களை சேதம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

    வனத்துறையினர் பட்டாசு வெடித்து, அடர்ந்த காட்டிற்குள் யானைகளை விரட்டி வருகின்றனர். ஆனால், பல பிரிவுகளாக பிரிந்துள்ள யானைகள், தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில், ஒற்றை யானை ஒன்று மரகட்டா வனப்பகுதியிலிருந்து, உணவு தேடி வெளியேறியது. காட்டில் இருந்து சாலைக்கு வந்த அந்த யானை, மேடான வளைவு பகுதியில் சுற்றித்திரிந்தது.

    அதனை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனே, வாகனத்தை திருப்பிக் கொண்டு வந்த வழியாக திரும்பிச் சென்றனர். நீண்ட நேரமாக அங்கேயே முகாமிட்டிருந்த ஒற்றை யானை, சாலையை கடந்து நொகனூர் வனப்பகுதிக்குள் சென்றது.

    யானை சாலைக்கு வந்து முகாமிட்டிருந்ததை சிலர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சி வைரலாகி வருகிறது.

    தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இருசக்கர வாகனங்கள் மூலம் சூளகிரி பேருந்து நிலையம் வந்து பல பகுகளுக்கு சென்று வருகின்றனர்.
    • மாணவிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், , சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட மாரண்டப்பள்ளி , கருங்கள், மைதாண்ட பள்ளி, சுழல் தின்னை மற்றும் கூட்டூர் ஆகிய கிராமங்களில் சுமார் 1500 -க்கும் மேற்பட்ட குடியி ருப்பபுகள் உள்ளன.

    இங்கு 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் விவசாய பொருட்களை விற்பனை செய்யவும், வெளியூர்களுக்கு சென்று தொழிற்சாலையில் பணிபுரிவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என 1500-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் சூளகிரி, ஒசூர், பெங்களுர், என பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் போதிய பேருந்து வசதியில்லாததால் கிராமங்களில் உள்ள டெம்போ , ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மூலம் சூளகிரி பேருந்து நிலையம் வந்து பல பகுகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் சூளகிரியில் இருந்து மைதாண்டப்பள்ளி வரை 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்து வருகின்றனர்.இதனால் மாணவிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மாரண்ட பள்ளி முதல் மைதாண்டப்பள்ளி வரையிலான தார்சாலை மிக மோசமான நிலையில் குண்டும்,குழியுமாக உள்ளதால் அதனை சீர்படுத்தி, சூளகிரி பேருந்து நிலையத்தில் இருந்து மைதாண்டப்பள்ளி வரையிலான பகுதிக்கு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   

    ×