என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு,சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 445 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
இதில் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விலைவாசியைக் குறைக்க வேண்டும், மத்திய அரசை கண்டித்தும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தபட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் நஞ்சு ண்டன் தலைமை தாங்கி னார். வட்ட செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரியில் 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல், ஓசூர், சூள கிரி, தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, சிங்காரப் பேட்டை, ஊத்தங் கரை, போச்சம்பள்ளி என 8 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 445 பேரை போலீசார் கைது செய்தனர்.






