என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரவு, பகலாக நடக்கும் மண் திருட்டு
- சாப்பரம் வழியாக காவேரிப்பட்டணம் நகருக்குள் வந்து தான் செல்ல முடியும்.
- வருவாய்த்துறை மற்றும் போலீசார் கண்டு கொள்வதில்லை.
காவேரிப்பட்டணம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களின் அருகே ஏராளமான மலைகள் சூழ்ந்து காணப்படுகிறது. மலைகள் அருகே செம்மண் , சவுல் மண் , நுரம்பு வகை மண்கள் அதி கமாக காணப்படுகின்றது.
இவ்வகை மண்களை சிலர் சட்டவிரோதமாக வெட்டி கடத்து கின்றனர். இப்பகுதிகளில் மண்களை சட்ட விரோதமாக கடத்துபவர்கள் பாலக்கோடு ரோடு மற்றும் சாப்பரம் வழியாக காவேரிப்பட்டணம் நகருக்குள் வந்து தான் செல்ல முடியும். ஆனால் அப்படி மண்களை லாரியில் எடுத்துக்கொண்டு வரும் பொழுது வருவாய்த்துறை மற்றும் போலீசார் கண்டு கொள்வதில்லை.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
தினமும் இரவு பகல் பாராமல் செம்மண் , நுரம்பு மண், ஆகியவற்றை மினி லாரியில் வைத்து கடத்துகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். நாங்களே ரகசியமாக தகவல் கூறினாலும் அதை அவர்கள் கண்டு கொள்வதில்லை.
காவேரிப்பட்டணத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் மண் கடத்தலில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டு பிடிக்கலாம். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மண் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






