search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதியமான் பப்ளிக் பள்ளியில்  கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
    X

    நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ராதை , கிருஷ்ணரின் வேடங்களை அணிந்து வந்த காட்சி.  

    அதியமான் பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

    • சீனிவாசா கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    • கிருஷ்ணரின் வரலாற்றையும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக் களை கூறினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் மல்லிகை நகரில் அமைந்து உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டா டப்பட்டது. இவ்விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    அதைத்தொடர்ந்து அதிய மான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி. திருமால் முருகன் இவ்வி ழாவை தொடங்கி வைத்து கிருஷ்ண ஜெயந்தி தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் "நல்ல வர்களைக் காத்து தீயவர் களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மேலும் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று "கிருஷ்ணர் கீதையில் கற்பித்த பாடங்களை நினை வூட்டி தர்மத்தின் வழியைப் பின்பற்றி வாழ வழிகாட்டி" சிறப்புரை ஆற்றினார்.

    இந்நிகழ்வைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் வரவேற்புரை அளித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சி யாக கவிதை, பேச்சு, மாறு வேடம், நடனம், பாட்டு, உரியடித்தல் மற்றும் நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விழாவிற்கு மேலும் அழகூட்டி தம் திறமைகளை வெளிப்படுத் தினர்.

    இந்நிகழ்வில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி கணபதி ராமன், இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவி களைப் பள்ளியின் தாளாளர் பாராட்டினார். ஐந்தாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா மற்றும் பதினோறாம் வகுப்பு மாணவிகள் அர்ஃபாதாஜ், ஜீவிகா ஆகியோர் விழாவினைத் தொகுத்து வழங்கினர். இறுதியாக 11-ம் வகுப்பு மாணவர் இலக்கியன் நன்றியுரை வழங்கினார்.

    Next Story
    ×