என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா
- முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது.
- ஆசிரியர் தினவிழாவையொட்டி பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கிருஷ்ணவேணி மணி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர் மணி விழாவிற்கு தலைமை தாங்கி, அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி பேசினார்.
அவர் பேசும் போது டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவர் ஆசிரியராக தனது பணியை தொடங்கி, பிறகு இந்திய குடியரசு தலைவராக உயர்ந்தது குறித்தும் விளக்கினார். அதை போல எதிர்கால சமுதாயத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு செய்ய வேண்டிய சேவை, தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் களப்பணி யாற்றிட வேண்டும் என்று கூறினார்.
விழாவையொட்டி ஆசிரி யர்கள், ஆசிரியைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சந்தோஷ், ஆசிரியர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார். இந்த விழாவின் முடிவில் முதல்வர் ஹரிநாத் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மாதேஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.






