என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 4.17,19 வயதிற்கு உட்பட்ட 3 பிரிவு மாணவி யர்களுக்கு போட்டி கள் நடைபெற்றது.
    • மாணவ, மாணவி யர்களுக்கு அதியமான் கல்லூரி சான்றிதழ் வழங்கினார்.

    ஓசூர்,  

    ஓசூர் அதியமான் கல்லூரி யில், சூளகிரி சரக அளவி லான பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு இடையேயான குடியரசு தின தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 25 பள்ளிகளிலிருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.இதில் 14.17,19 வயதிற்கு உட்பட்ட 3 பிரிவு மாணவி யர்களுக்கு போட்டி கள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி யில் ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர்கள் கோவிந்தன், முனி ராஜ் மற்றும் தனி யார் பள்ளி அலுவ லர் ரமாவதி ஆகியோர் தேசியக் கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் சரக கொடி களை ஏற்றி அணி வகுப்பு மரியா தையை ஏற்றுக் கொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வா ளர் துரை ஒலிம்பிக் சுடரை ஏற்றி போட்டி களை தொடங்கி வைத்தார்.

    இந்த போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி யர்களுக்கு அதியமான் கல்லூரி முதல்வர் ஜி. ரங்கநாத், மாவட்ட ரோட்டரி கவர்னர் ராகவன், ஆடிட்டர் மணி, லேஜன்ட் ரோட்டரி கிளப் தலைவர் உதயகுமார், ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.

    • சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளை சோதனை செய்தார்.
    • ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள அங்கன் வாடி மையத்தை பார்வை யிட்டார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம் அந்தேவனப்பள்ளி ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணி களை மாவட்ட கலெக்டர் சரயு நேரில் ஆய்வு செய்தார். இதில் சமையல் பணி களை பார்வையிட்டு சமை யலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளை சோதனை செய்தார். மேலும் பள்ளி சமையல் கூடத்தை தூய்மை யாக வைத்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என அதிகா ரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து உரிகம் ஊராட்சி. ஈரண்ண தொட்டி மலை கிராமத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள அங்கன் வாடி மையத்தை பார்வை யிட்டார். பின்னர் மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் இன குடியிருப்புகளை பார்வை யிட்டு அங்கு வசிக்கும் மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது வீடுகள் மிக வும் பழுதடைந்து, மழை காலங்களில் மிகவும் சிரம மாக உள்ளது எனவும் போக்குவரத்து வசதி, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என இருளர் இன மக்கள் தெரிவித்தனர். உடனடியாக வீடுகள் பழுதுபார்ப்பு மற்றும் புதிய குடியிருப்புகள் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    தொடர்ந்து கொடக்கரை கிராமத்தில் இருளர் மற்றும் மலைவாழ் மக்கள் குடியி ருப்புகளை பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். கொடக்கரை அரசு உயர்நி லைப் பள்ளி புதிய கட்ட டங்கள் கட்டுமான பணி களை கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஒசூர் சப்கலெக்டர் சரண்யா, தளி பிடிஓகள் பாலாஜி, சுபாராணி உள்ளிட்ட அலுவ லர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செயலாளர்கள் கிராம மக்கள் உடனிருந்தனர். 

    • ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில், 7-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.
    • மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை போட்டிகளை தொ டங்கி வைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் சரக அள வில், விளையாட்டு போட் டிகள் தேன்கனிக்கோட்டை அருகே ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில், 7-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை போட்டிகளை தொ டங்கி வைத்தார். கோட்டை உளிமங்கலம் ஊராட்சி தலைவர் நாராய ணசாமி முன்னிலை வகித்தார். போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 22 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் பள்ளி தலைமை, ஆசிரியர் லூர்துசாமி தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கினார். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட் டத்தை ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தட்டிச் சென்றது. இந்த நிகழ்ச்சியில் உடற் கல்வி இயக்குநர்கள், ஆசிரி யர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண் டனர். 

    • தீ மளமளவென பற்றி கொண்டதால், அந்த டீக்கடை எரிந்து தீக்கிரையானது.
    • டீக்கடை தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் போச்சம்பள்ளி பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் டீக்கடை, செருப்பு கடை, இனிப்பு தயார் செய்யும் கடை, சலூன் கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது60) என்பவர் பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தார்.

    இன்று காலை வாரசந்தை கூடும் என்பதால், நேற்று பஸ்நிலையத்தில் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்த வண்ணமாக இருந்ததால், அப்பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் முருகேசன் டீக்கடையில் திடீரென்று கியாஸ் சிலிண்டர் காலியானதால், வேறு சிலிண்டரை எடுத்து வந்து கியாஸ் அடுப்பில் பொருத்தினார். அப்போது திடீரென்று அதில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. உடனே முருகேசன் மற்றும் கடையில் டீக்குடித்து கொண்டு இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    அதற்குள் தீ மளமளவென பற்றி கொண்டதால், அந்த டீக்கடை எரிந்து தீக்கிரையானது. உடனே அங்கிருந்தவர்கள் உடனே போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டீக்கடையில் பற்றி கொண்ட தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டீக்கடைக்காரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் சிலிண்டர்களை வைத்து பயன்படுத்துவதால் இதுபோன்ற தீ விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள். சமூக ஆர்வலர்கள் பல முறை குற்றசாட்டியும் இது வரை எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

    எனவே, இதுபோன்ற திறந்த வெளியில் டீக்கடை, பலகரா கடை, ஓட்டல் கடை ஆகிய கடைகளில் கியாஸ் சிலிண்டர்களை பாதுகாப்பான முறையில் கையாள்வது குறித்து கடைக்காரர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    டீக்கடை தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் போச்சம்பள்ளி பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பாலசுப்பிரமணியன் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 329-யை செலுத்தியுள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்த வண்ணமாக உள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம், கமிஷன் பெறலாம் என்று மெசேஜ் அனுப்பி மீண்டும் 2 பேரிடம் ரூ.23 லட்சம் வரை மர்ம நபர்கள் பணமோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மனைவிக்காக செல்போன் மூலம் பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தில் பகுதிநேரம் வேலை இருப்பதாகவும், அதில் குறைந்த முதலீடு செய்தால், அதிக சம்பளமும், கமிஷனும் கிடைக்கும் என்று குறுந்செய்தி வந்தது. அதனை நம்பிய பாலசுப்பிரமணியன் அந்த லிங்கை கிளிக் செய்ததன் மூலம் வந்த செல்போன் எண்ணில் மர்ம நபர் ஒருவரை தொடர்பு கொண்டார். அந்த மர்ம நபர் கூறியபடி பாலசுப்பிரமணியன் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 329-யை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அந்த மர்மநபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் என்று வந்தது. இதனால் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி சாமந்தமலை அருகே தளவாய் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமாருக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்செய்தி வந்தது. அதில் அதிக லாபம் மற்றும் கமிஷனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக இருந்தது. இதனை நம்பிய அருண்குமார் மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் கூறியபடி வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சத்து 59 ஆயிரத்து 470-யை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்னர் அந்த மர்ம நபரை அருண்குமார் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. அதன்பின்னர் அருண்குமார் தன்னை மர்மநபர் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.23 லட்சம் வரை மர்ம நபர் பணமோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
    • கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    கிருஷ்ணகிரி:

    ஆந்திர மாநில முதல்-அமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்திபாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்.கே.ஹாலில் நேற்று சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திரா மாநிலங்களில் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் ஆந்திரா மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், வேப்பனப்பள்ளி பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலம் குப்பம், திருப்பதி செல்லும் 60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் தமிழக எல்லையான காளிக்கோவில் பகுதி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

    குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் நேற்று கைதான சந்திரபாபு நாயுடுவை பார்க்க சென்ற நடிகரும், ஜனசேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாணுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதன் காரணமாக பவன்கல்யாண் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆந்திரா, மாநிலத்தில் பவன் கல்யாண் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், வேப்பனபள்ளி வழியாக ஆந்திரா எல்லை பகுதியில் இன்று 2-வது நாளாக தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், எல்லை பகுதியான காளிகோவில் வரை சென்று திருப்பி விடப்பட்டன.

    ஆந்திராவில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா மற்றும் திருப்பதிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வழியாக செல்லக்கூடிய பஸ்கள், வாகனங்கள் ஆகிய அனைத்தும் வாகனங்களையும் பாதி வழியிலேயே இன்று 2-வது நாளாக திருப்பி அனுப்பி வைத்தனர். கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    • மாணவன் பள்ளிக்கு செல்லாத நிலை யில் வீட்டில் இருந்து வந்தார்.
    • மாணவன் அர்த்திகாவிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

    சூளகிரி 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், கடத்துர் கிராமத்தை சேர்ந்தவர் அணில்குமார் (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அர்த்திகா (20)என்ற மனைவியும் மற்றும் 6 மாத கை குழந்தையும் உள்ளது.

    அணில்குமார் தினமும் காலை வேலைக்கு சென்றால் மாலையில் வீடு திரும்புவார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன். இவர் பேரிகை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்து பின்பு பள்ளிக்கு செல்லாத நிலை யில் வீட்டில் இருந்து வந்தார். அர்த்திகா வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மாணவன், அங்கு சென்று அர்த்திகாவிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

    இது குறித்து அர்த்திகா கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் மாணவனை கைது செய்த னர். இச்சம்பவம் அப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கருத்து வேறுபாடின்றி பணியாற்றிட வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.
    • உறுப்பினர் படிவங்களை ஒன்றிய அ.தி.மு.க இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தியிடம் வழங்கினார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் அ.தி.மு.க கட்சி சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஸ்குமார் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்தும், உறுப்பினர் படிவங்களை ஆய்வு செய்து கட்சியி னிரிடம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும், கருத்து வேறுபாடின்றி கட்சி பணியாற்றிட வேண்டுமென எடுத்துரைத்து ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் ஆய்வு செய்த உறுப்பினர் படிவங்களை ஒன்றிய அ.தி.மு.க இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தியிடம் வழங்கினார். இச்சந்திப்பு நிகழ்ச்சியில் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.தென்னரசு, மத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சக்க ரவர்த்தி, மாவட்ட சிறு பான்மை பிரிவு இணை செயலாளர் பியாரே ஜான், ஒன்றிய பொருளாளர் சென்ன கிருஷ்ணன், ஒன்றிய மீன வரணி செயலாளர் முனு சாமி, கிளை செயலா ளர்கள் கணேசன், மதி யழகன், கிருஷ்ணன், மாது, தகவல் தொழில்நுட்ப பிரிவு பூபதி,

    இளம்பாசறை பாண்டியன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன், மத்தூர் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் மஞ்சுளா மனோஜ், ஒன்றிய விவசாய அணி துணைத் தலைவர் மணி, குமுதா, ஜெயா, சங்கீதா, செண்பகம், ஜெய லட்சுமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண் டனர். மேலும் மத்தூர் ஒன்றியத்தில் 12 ஊராட்சி களில் வாக்கு சாவடி முகவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

    • தேர்ச்சி குறைவாக உள்ள 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தேர்வுகள் நடத்த வேண்டும்.
    • வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணகிரி 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, அரசு மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மார்ச் 2023 தேர்ச்சி குறித்த பகுப்பாய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சரயு பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உள்ள 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளை சிறப்பு கவனம் செலுத்தி, வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள 25 பள்ளி தலைமை ஆசிரியர் வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி தினந்தோறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மெதுவாக கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று தேர்ச்சி குறைவாக உள்ள 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தேர்வுகள் நடத்த வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் பாட வாரியாக சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் மேம் பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்பு களைப் பெற நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற திட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.

    இதன் வாயிலாக சேகரிக் கப்படும் நிதி தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவ லர்கள் மணிமேகலை (கிருஷ்ணகிரி), கோவிந்தன் (ஓசூர்), மாவட்டத் திட்ட அலுவலர் வடிவேலு, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் பள்ளி தலைமையா சிரியர்கள், உதவி தலை மையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 5-ந்தேதி தமிழ்செல்வன் வீட்டிற்கு சிறுமியின் உறவினர்கள் சென்றனர்.
    • அக்கம்பக்கத்தினர் உடனே கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே மொள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது55). விவசாயியான இவருக்கு சாலம்மாள் (48) என்ற மனைவியும், தமிழ்செல்வன் (21) என்ற மகனும், மஞ்சுளா என்ற மகளும் உள்ளனர்.

    தமிழ்செல்வன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுமியும், தமிழ்செல்வனும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    காதல் விவகாரம் குறித்து இருவர் வீட்டாருக்கும் தகவல் தெரிந்தால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதி மாணவன் தமிழ்செல்வனும், சிறுமியும் பயந்து வீட்டைவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சிறுமி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனையும், சிறுமியையும் தேடி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 5-ந்தேதி தமிழ்செல்வன் வீட்டிற்கு சிறுமியின் உறவினர்கள் சென்றனர். அங்கு அவரது தந்தை கோவிந்தனையும், தாய் சாலம்மாளையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும், ஆத்திரம் தீராத சிறுமியின் உறவினர்கள் கோவிந்தனின் வீட்டை அடித்து நொறுக்கினர்.

    இதனால் செய்வதறியாது பயத்தில் இருந்த கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சாலம்மாள் ஆகிய 2 பேரும் கடந்த 7-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தனர்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் ஷெரீப் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த கோவிந்தனிடம் விசாரணை நடத்தினார்.

    இதில் தனது மகன், சிறுமியை காதலித்ததால், அவர்கள் இருவரும் ஊரை விட்டு சென்று விட்டதாகவும், இதற்காக சிறுமியின் உறவினர்களான மாது, பெருமாள், குமார் மற்றும் ஒரு நபர் ஆகிய 4 பேர் எனது வீட்டிற்கு வந்து என்னையும், எனது மனைவி சாலம்மாளை தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    அதன்பின்னர் 4 பேரும் சேர்ந்து எனது வீட்டின் ஜன்னல், கதவுகளை அடித்து நொறுக்கினர். பயத்தில் தற்கொலை செய்வதற்காக நாங்கள் விஷம் குடித்து மயங்கி கிடந்தோம் என்றார்.

    இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளையும் தற்கொலைக்கு தூண்டியதாக சிறுமியின் உறவினர்களான மாது, குமார், பெருமாள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாயமான சிறுமியையும், மாணவன் தமிழ்செல்வனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மொள்ளம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது.
    • ஆசிரியர் தினவிழாவையொட்டி பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கிருஷ்ணவேணி மணி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர் மணி விழாவிற்கு தலைமை தாங்கி, அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி பேசினார்.

    அவர் பேசும் போது டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவர் ஆசிரியராக தனது பணியை தொடங்கி, பிறகு இந்திய குடியரசு தலைவராக உயர்ந்தது குறித்தும் விளக்கினார். அதை போல எதிர்கால சமுதாயத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு செய்ய வேண்டிய சேவை, தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் களப்பணி யாற்றிட வேண்டும் என்று கூறினார்.

    விழாவையொட்டி ஆசிரி யர்கள், ஆசிரியைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சந்தோஷ், ஆசிரியர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார். இந்த விழாவின் முடிவில் முதல்வர் ஹரிநாத் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மாதேஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 445 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி

     

    கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

    இதில் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விலைவாசியைக் குறைக்க வேண்டும், மத்திய அரசை கண்டித்தும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தபட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் நஞ்சு ண்டன் தலைமை தாங்கி னார். வட்ட செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரியில் 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல், ஓசூர், சூள கிரி, தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, சிங்காரப் பேட்டை, ஊத்தங் கரை, போச்சம்பள்ளி என 8 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 445 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×