என் மலர்
உள்ளூர் செய்திகள்

மலைகிராமங்களில் கலெக்டர் ஆய்வு
- சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளை சோதனை செய்தார்.
- ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள அங்கன் வாடி மையத்தை பார்வை யிட்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம் அந்தேவனப்பள்ளி ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணி களை மாவட்ட கலெக்டர் சரயு நேரில் ஆய்வு செய்தார். இதில் சமையல் பணி களை பார்வையிட்டு சமை யலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளை சோதனை செய்தார். மேலும் பள்ளி சமையல் கூடத்தை தூய்மை யாக வைத்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என அதிகா ரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து உரிகம் ஊராட்சி. ஈரண்ண தொட்டி மலை கிராமத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள அங்கன் வாடி மையத்தை பார்வை யிட்டார். பின்னர் மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் இன குடியிருப்புகளை பார்வை யிட்டு அங்கு வசிக்கும் மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது வீடுகள் மிக வும் பழுதடைந்து, மழை காலங்களில் மிகவும் சிரம மாக உள்ளது எனவும் போக்குவரத்து வசதி, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என இருளர் இன மக்கள் தெரிவித்தனர். உடனடியாக வீடுகள் பழுதுபார்ப்பு மற்றும் புதிய குடியிருப்புகள் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து கொடக்கரை கிராமத்தில் இருளர் மற்றும் மலைவாழ் மக்கள் குடியி ருப்புகளை பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். கொடக்கரை அரசு உயர்நி லைப் பள்ளி புதிய கட்ட டங்கள் கட்டுமான பணி களை கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஒசூர் சப்கலெக்டர் சரண்யா, தளி பிடிஓகள் பாலாஜி, சுபாராணி உள்ளிட்ட அலுவ லர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செயலாளர்கள் கிராம மக்கள் உடனிருந்தனர்.






