என் மலர்
உள்ளூர் செய்திகள்

களர்பதி ஊராட்சியில் அ.தி.மு.க கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஸ்குமார் ஆய்வு செய்த உறுப்பினர் படிவங்களை ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தியிடம் வழங்கிய காட்சி.
அ.தி.மு.க சார்பில் வாக்குச் சாவடி முகவர்கள் சந்திப்பு
- கருத்து வேறுபாடின்றி பணியாற்றிட வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.
- உறுப்பினர் படிவங்களை ஒன்றிய அ.தி.மு.க இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தியிடம் வழங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் அ.தி.மு.க கட்சி சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஸ்குமார் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்தும், உறுப்பினர் படிவங்களை ஆய்வு செய்து கட்சியி னிரிடம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும், கருத்து வேறுபாடின்றி கட்சி பணியாற்றிட வேண்டுமென எடுத்துரைத்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் ஆய்வு செய்த உறுப்பினர் படிவங்களை ஒன்றிய அ.தி.மு.க இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தியிடம் வழங்கினார். இச்சந்திப்பு நிகழ்ச்சியில் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.தென்னரசு, மத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சக்க ரவர்த்தி, மாவட்ட சிறு பான்மை பிரிவு இணை செயலாளர் பியாரே ஜான், ஒன்றிய பொருளாளர் சென்ன கிருஷ்ணன், ஒன்றிய மீன வரணி செயலாளர் முனு சாமி, கிளை செயலா ளர்கள் கணேசன், மதி யழகன், கிருஷ்ணன், மாது, தகவல் தொழில்நுட்ப பிரிவு பூபதி,
இளம்பாசறை பாண்டியன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன், மத்தூர் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் மஞ்சுளா மனோஜ், ஒன்றிய விவசாய அணி துணைத் தலைவர் மணி, குமுதா, ஜெயா, சங்கீதா, செண்பகம், ஜெய லட்சுமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண் டனர். மேலும் மத்தூர் ஒன்றியத்தில் 12 ஊராட்சி களில் வாக்கு சாவடி முகவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.






