என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அதியமான் கல்லூரியில் சரக அளவிலான தடகள போட்டிகள்
- 4.17,19 வயதிற்கு உட்பட்ட 3 பிரிவு மாணவி யர்களுக்கு போட்டி கள் நடைபெற்றது.
- மாணவ, மாணவி யர்களுக்கு அதியமான் கல்லூரி சான்றிதழ் வழங்கினார்.
ஓசூர்,
ஓசூர் அதியமான் கல்லூரி யில், சூளகிரி சரக அளவி லான பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு இடையேயான குடியரசு தின தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 25 பள்ளிகளிலிருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.இதில் 14.17,19 வயதிற்கு உட்பட்ட 3 பிரிவு மாணவி யர்களுக்கு போட்டி கள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி யில் ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர்கள் கோவிந்தன், முனி ராஜ் மற்றும் தனி யார் பள்ளி அலுவ லர் ரமாவதி ஆகியோர் தேசியக் கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் சரக கொடி களை ஏற்றி அணி வகுப்பு மரியா தையை ஏற்றுக் கொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வா ளர் துரை ஒலிம்பிக் சுடரை ஏற்றி போட்டி களை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி யர்களுக்கு அதியமான் கல்லூரி முதல்வர் ஜி. ரங்கநாத், மாவட்ட ரோட்டரி கவர்னர் ராகவன், ஆடிட்டர் மணி, லேஜன்ட் ரோட்டரி கிளப் தலைவர் உதயகுமார், ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.






