search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவர் டில்லர்கள் வாங்க 56 விவசாயிகளுக்கு ரூ.42.74 லட்சம் மானியம்
    X

    பவர் டில்லர்கள் வாங்க 56 விவசாயிகளுக்கு ரூ.42.74 லட்சம் மானியம்

    • விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினர்.
    • பழங்குடியின விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக விவசா யிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் பர்கூர் டி.மதியழகன், தளி டி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

    குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் சிறிய வகை வேளாண் இயந்திரங்களைக் கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பவர்டில்லர்கள், விசை களையெடுப்பான் உள்ளிட்ட கருவிகளை வழங்கும் பணிகள் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

    அதன்படி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண் எந்திரமயமாக்கல் 2023-24 - திட்டத்தின் கீழ் 56 விவசாயிகளுக்கு பவர் டில்லர் வாங்க ரூ.42 லட்சத்து 74 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீதமும், பழங்குடியின விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாக ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறி யாளர்கள் ரவி, இந்துமதி, லட்சுமி ஐஸ்வர்யா, அனுசா பேகம், வேளாண் அலுவலர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் அஸ்லாம், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×