என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாசில்தார் சஸ்பெண்டு: வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
- வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவ லகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
- இதே போல் வரு வாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவ லகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கள்ளக்குறிச்சி தாசில் தார் சஸ்பெண்டை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஐகோர்ட்டு தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ் முனியன் என்ப வரை, அரசியல் தலை யீடு காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு, வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று பணியை புறக்கணித்து காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் குருநாதன் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் குமரேசன், துணை தாசில்தார் மகேஸ்வரி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்தி ரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், தாசில்தாரை இடைக்கால பணிநீக்கம் செய்த கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தின் ஊழியர் விரோத நடவ டிக்கையும், இதனை திசை திருப்ப மேற்கொண்டு வரும் பாரபட்சமான நடவ டிக்கைகளை கண்டித்தும், பெண் அலுவலர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசியும், அரசு நிர்வா கத்தில் அத்துமீறிதலையிட்டு வருவதாக ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனின் நடவடிக் கைகளைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப் பப்பட்டன. இதே போல் வரு வாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவ லகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலை மை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் ஜெக தாம்பிகா, நகராட்சி மாநக ராட்சி சங்க துணைத் தலை வர் வெங்கடேசன் உள்பட கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று வே லையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் அரசு அலுவலகங்களில் எந்த பணியும் நடைபெறவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போ ராட்டம் தொடரும் என வருவாய்த்துறை அலுவ லர்கள் தெரிவித்தனர்.






