என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் ஈரான் தொட்டி மலை கிராம மக்கள்
    X

    வெறிச்சோடி காணப்படும் கிராமம்.

    சாலை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் ஈரான் தொட்டி மலை கிராம மக்கள்

    • 30 மாணவ, மாணவிகள் 2 கிமீ தூரம் அடந்த வனப்பகுதி வழியாக நடந்து சென்று பிளிக்கல் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கின்றனர்.
    • மருத்துவமனைக்கு உரிகம் மற்றும் அஞ்செட்டிக்கு செல்ல வேண்டும். அரசு சார்பில் கட்டிகொடுத்த வீடுகளும் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், பெட்டமுகிலாளம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும் பாலான சிறு கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ளது.

    இந்த மலைக் கிராமங்களில் சாலை, மருத்துவம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. உரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈரான் தொட்டி மலைக் கிராமத்தில் 50 குடியிருப்பு களில் 900-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர்.

    இங்குள்ளவர்களின் பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் இருந்து வருகிறது.

    வானம் பார்த்த மானாவாரி நிலத்தில் விவசாயம் செய்வதால், மழையை நம்பியே சாகுபடி பணிகள் நடைபெற வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில், இக்கிராமத்தில் மின்சாரம், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், இக்கிராமத்தினர் 40 சதவீதம் பேர் வீடு, நிலங்களை விட்டு, விட்டு கர்நாடக மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-

    தமிழக எல்லைப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஈரான் தொட்டி கிராமத்தில் பல தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மீண்டும் வர 4 நாட்கள் ஆகிவிடும். தெரு விளக்குகள் சரியாக எரியாததால், குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி வனவிலங்குகள் வந்துவிடும்.

    இதனால், மாலை 6 மணிக்குள் வீட்டுக்குள் முடங்கும் நிலையுள்ளது. ஆழ்துளைக்கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி வைத்தனர். அது பழுதாகி தண்ணீர் வருவதில்லை. பழமையான கிணற்று நீரைக் குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

    இங்கிருந்து 30 மாணவ, மாணவிகள் 2 கிமீ தூரம் அடந்த வனப்பகுதி வழியாக நடந்து சென்று பிளிக்கல் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கின்றனர்.

    மருத்துவமனைக்கு உரிகம் மற்றும் அஞ்செட்டிக்கு செல்ல வேண்டும். அரசு சார்பில் கட்டிகொடுத்த வீடுகளும் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    அடிப்படை வசதி மற்றும் வருவாய்க்கு வழியில்லாத தால் பல ஆண்டுகளாக வாழ்ந்த பலர் ஊரை காலி செய்து, வெளியூருக்கு பிழைப்பு தேடி சென்று விட்டனர்.

    எனவே, எங்கள் கிரா மத்தில் சாலை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர்.

    Next Story
    ×