search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன மழையால்  சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலம் நீரில் மூழ்கியது
    X

    கன மழையால் சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலம் நீரில் மூழ்கியது

    • தரைப்பாலம் கட்டி யதிலிருந்தே அதிக அள வில் மழை பெய்யும் போ தெல்லாம், இது போன்ற நிகழ்வு தொடா்ந்து நடை பெறுகிறது.
    • தரைப்பாலத்தில் இருந்து நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும்

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியில் உள்ள தரைப்பாலம் கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூரு- பாண்டிச்சேரி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக இந்த தரைப் பாலத்தில் தண்ணீா் வெளியேறும் பாதை அடைத்துக் கொண்டதால் தரைத்தளத்தில் அதிக அளவு மழைநீா் தேங்கியது.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அருகே உள்ள கெரிகேப்பள்ளி தரைப்பாலம் வழியாக சுமாா் 10 கிலோ மீட்டா் சுற்றிச் சென்றன. இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் சாலையைக் கடக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினா். பெங்களூரில் இருந்து புது வைக்கு செல்லும் பிரதான வழித்தடம் என்பதால் பெங்களூரில் இருந்து வரும் வாகனங்கள் இந்த ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் சிக்கி பழுதாகி நின்றன.

    தரைப்பாலம் கட்டி யதிலிருந்தே அதிக அள வில் மழை பெய்யும் போ தெல்லாம், இது போன்ற நிகழ்வு தொடா்ந்து நடை பெறுகிறது. தரைப்பாலத்தில் இருந்து நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    Next Story
    ×