என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
    X

    விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

    • காட்டு பெருமாள் கோயிலில் இருந்து ஜம்புத்து கிராமம் வரை குண்டும் குழியுமான சாலையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.
    • ஜம்புத்து கிராமத்திற்கு தற்போதுள்ள ஜிட்டாண்டஹள்ளி மின் இணைப்பில் இருந்து மாற்றி ஆலப்பட்டி மின்ப கிர்மான வட்டத்தோடு இணைக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி அருகே உள்ள ஜம்புத்து கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசகர் நஷீர்அகமத், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அனுமத்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் வரதராஜன், மாவட்ட பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பா ளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு சங்கத்தின் கொ டியினை ஏற்றிவைத்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள கோரிக்கை குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

    கூட்டத்தில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை கட்ட கடந்த 1953-ம் ஆண்டு நிலத்தைக் கொடுத்து விட்டு புலம்பெயர்ந்து குடியிருந்து வரும் 75 குடும்பங்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். காட்டு பெருமாள் கோயிலில் இருந்து ஜம்புத்து கிராமம் வரை குண்டும் குழியுமான சாலையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும். ஜம்புத்து கிராமத்திற்கு தற்போதுள்ள ஜிட்டாண்டஹள்ளி மின் இணைப்பில் இருந்து மாற்றி ஆலப்பட்டி மின்ப கிர்மான வட்டத்தோடு இணைக்க வேண்டும்.

    காட்டுப் பன்றி களை சுட்டுக் கொல்ல துப்பாக்கி வழங்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விளைப் பொருட்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். யானை களால் உயிர்சேதம் ஏற்பட் டால் இழப்பீடு தொகை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×