என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை: ஓசூர் அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா
  X

  குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை: ஓசூர் அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இதில் 14,16,18, மற்றும் 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • ராஜ் என்ற மாணவன் குண்டு எறிதல் போட்டியில் 9.75 மீட்டர் தூரத்தில் எறிந்து முதலிடம் பிடித்தார்.

  ஓசூர்,

  கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

  2023 சாம்பியன்ஷிப் தேர்வு செய்வதற்கு மாவட்ட அளவிலானதடகள போட்டிகள், ஓசூர் அருகே மதகொண்டபள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் நடை பெற்றது. இதில் 14,16,18, மற்றும் 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

  ஓசூர் பேடரபள்ளியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியிலிருந்து 14 வயதுக்குட்பட்ட 3 மாணவர்களும், 3 மாணவியரும் கலந்து கொண்டனர். அதில், ராஜ் என்ற மாணவன் குண்டு எறிதல் போட்டியில் 9.75 மீட்டர் தூரத்தில் எறிந்து முதலிடம் பிடித்தார்.

  மேலும், சுபிக்க்ஷா என்ற மாணவி உயரம் தாண்டு தலில், இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து, நேற்று பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் நாகேஷ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாநகராட்சி கவுன்சிலர் ரஜினி காந்த், பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ரமேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி மஞ்சுளா, துணைத் தலைவர் ரவி, பள்ளி உடற்கல்வி ஆசிரியை கலையரசி ஆகி யோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினர்.

  மேலும், குண்டு எறித லில் முதலிடம் பிடித்த மாணவர் ராஜ், மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

  Next Story
  ×