என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சூதாடிய 24 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய 24 பேர் கைது

    • 4 கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.
    • கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அந்த வகையில் ஓசூர், பாகலூர், சூளகிரி, கந்தி குப்பம், ஊத்தங்கரை பகுதிகளில் கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ஊத்தங்கரை பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பாரூர், சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளில் போலீசார் மளிகை, பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். அப்போது 4 கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர்கள் 4 பேரை போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல வேப்பனப்பள்ளி, சிப்காட், பாகலூர், பர்கூர், நாகரசம்பட்டி, உத்தனப்பள்ளி, சிங்காரப்பேட்டை பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×