என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி வயல்களில் பயிர்களை காப்பாற்றும் விவசாயிகள்
    X

    குடங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி வயல்களில் பயிர்களை காப்பாற்றும் விவசாயிகள்

    • விவசாயிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து ராகி உள்ளிட்ட பயிர்களுக்கு ஊற்றி பயிர்களைக் காத்து வருகின்றனர்.
    • விவசாய விளை நிலப் பகுதிக்குச் சீரான மற்றும் உயரழுத்த மின் விநியோகத்துக்கு மின்வாரி யம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரங்களில் உள்ள கிராம மக்களுக்கு விவசா யமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

    மேலும், இப்பகுதி விவ சாயிகள் கிணற்று பாசனம் மூலம் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். மேலும், மழையை நம்பி மானாவாரி நிலங்களிலும் சில விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது மழை இல்லாததால் பயிர்களை காக்க அதிக அளவில் நீர் பாய்ச்சும் நிலையுள்ளது.

    இந்நிலையில், வேப்பனப்பள்ளி, நாச்சி குப்பம், சிகரமானப்பள்ளி, பண்ணப்பள்ளி, மாண வரனப்பள்ளி, நேரலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்தழுத்த மின் விநி யோகம் காரணமாக விளை நிலங்களில் மின் மோட்டா ரை இயக்க முடி யாத நிலை நிலவி வருகிறது.

    தொடரும் இப்பிரச்சினை யால், வாடி வரும் பயிர்களை காக்கவும், நிலத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யவும் இப்பகுதி விவசாயிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து ராகி உள்ளிட்ட பயிர்களுக்கு ஊற்றி பயிர்களைக் காத்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் தொடர் மின் வெட்டு, குறைந்தழுத்த மின் விநியோகம் காரணமாக விளை நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச முடிய வில்லை.

    ஒரு நாளைக்கு குறைந்தது 5 மணி நேரத்துக்கும் மேல் மின் நிறுத்தம் செய்யப்படு கிறது. மேலும், மின் விநியோகம் இருக்கும்போது குறைந்தழுத்த மின்சாரம் கிடைக்கிறது. இதனால், மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை.

    இதனால், குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றி பயிர் களை காத்து வருகி றோம். இதேநிலை நீடித்தால், மகசூல் பாதிப்பும், வருவாய் இழப்பும் ஏற்படும்.

    எனவே, விவசாய விளை நிலப் பகுதிக்குச் சீரான மற்றும் உயரழுத்த மின் விநியோகத்துக்கு மின்வாரி யம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    இதுதொடர்பாக மின் வாரிய அலுவலர்களிடம் கேட்ட போது, மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள தாலும் விவசாய பயன் பாட்டுக்கான மின் தேவை வழக்கத்தை விட அதிகரித் துள்ளது.

    இதனால் மின் அழுத்த பிரச்சினை ஏற்படுகிறது. இதை சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×