search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்தி நினைவு மண்டபத்தை சீரமைக்க வேண்டும்- கிருஷ்ணகிரி காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோரிக்கை
    X

    காந்தி நினைவு மண்டபத்தை சீரமைக்க வேண்டும்- கிருஷ்ணகிரி காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோரிக்கை

    • கடந்த 3 ஆண்டு களாக காந்தி நினைவு மண்டபம் பராம ரிப்பின்றி பூட்டப்பட்டு உள்ளது.
    • நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த காந்தி நினைவு மண்டபம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    சேலம் மாவட்ட கலெக்டர் கடந்த 1956-ம் ஆண்டு காவேரிப்பட்டிணம் பகுதியில் காந்தி நினைவு மண்டபம் அமைக்க அரசு புறம்போக்கு நிலத்தில் 3.8 சென்ட் நிலம் வழங்கினார்.

    அந்த நிலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜ் மணியகார் காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு காந்தி ஜெயந்தி, காந்தி நினைவு நாள், காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பிறந்தநாள்கள், நினைவு நாட்கள், போன்றவை நடத்தப்பட்டு வந்தன.

    பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அவருக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் பட்டாபி நாயுடு, அவருக்கு பின்னர் 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவராக இருந்த காசிலிங்கம் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர் கொண்ட அறக் கட்டளை குழு காந்தி நினைவு மண்டபத்தை பராமரித்து வந்தது.

    அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததால் கடந்த 3 ஆண்டுகளாக காந்தி நினைவு மண்டபம் பராமரிப்பின்றி பூட்டப்பட்டு உள்ளது.

    காந்தி நினைவு மண்டபத் திற்குள் உள்ள கலையரங்கங்கள் சேதமடைந்தும், கதவுகள் உடைந்தும், செடிகள் முளைத்து முட்புதர்களாகவும் பரா மரிப்பின்றி காணப்படுகிறது.

    நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த காந்தி நினைவு மண்டபம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

    அதேபோல் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதில் இந்திய காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு சேர்மன் விஜய் இந்தர் சிங்லா, குழு உறுப்பினர்கள் நிதின் கும்பகர், வாசு ஆகியோர் காந்தி மண்டபம் மற்றும் அதன் சொத்துக்களை கடந்த ஜூலை மாதம் நேரில் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநில காங்கிரஸ் கட்சியும், தேசிய காங்கிரஸ் கட்சியும் காந்தி நினைவு மண்டபத்தை புனரமைத்து சுதந்திர போராட்ட வரலாற்றை படைப் பாற்றும் விதமாக கண்காட்சிகள் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×