என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு கலெக்டருக்கு நன்றி தெரிவித்த அத்திமுகம் கிராம மக்கள்
- நேற்று வருவாய் துறை அதிகாரிகள், ஊர் மக்களை அழைத்து மயான நிலத்தை சர்வே செய்தார்.
- அதிகாரிகள் அத்தி முகம் பொது மக்களுக்கு மயான நிலத்தை மீட்டு கொடுத்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, அத்தி முகம் கிராமத்தில் பல வருடங்களாக மயானம் நிலத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்து வந்தனர் .
இதில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நள்ளிரவு நேரங்களில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அந்த வழியாக மண்சாலை அமைத்தனர்.
இதனை கண்ட அத்திமுக கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் சரயுவிடம் புகார் அளித்தனர். புகார் மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நேற்று வருவாய் துறை அதிகாரிகள், ஊர் மக்களை அழைத்து மயான நிலத்தை சர்வே செய்தார்.
இதில் சுமார் 2.12 ஏக்கர் நிலம் ஆக்கரிமிப்பு செய்ய பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் அத்தி முகம் பொது மக்களுக்கு மயான நிலத்தை மீட்டு கொடுத்தனர்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தை மீட்டு கொடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டர் சரயுவிற்கும் நன்றி தெரிவித்து கொண்ட னர்.






