என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் கொள்முதல் நிலைய கட்டிட திறப்பு விழா
    X

    கூட்டுறவு சங்க பால் கொள்முதல் நிலைய கட்டிடத்தை பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

    பால் கொள்முதல் நிலைய கட்டிட திறப்பு விழா

    • பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
    • பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் பால் கொள்முதல் கட்டிடத்தை குத்து விளக்கேற்றி வைத்து திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பால்கொள் முதல் நிலைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாற்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.

    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் பால் கொள்முதல் கட்டிடத்தை குத்து விளக்கேற்றி வைத்து திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார்.

    விழாவில் மத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு, மாவட்ட அரங்காவலர் குழுத் தலைவர் ரஜினி செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அனிதா, மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ் குமரன், துரைசாமி, களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, திமுக மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், ஒன்றிய கழகத் துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஏகாம்பரம், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி மாதப்பன், பால்வள பொது மேலாளர், துணைபதிவாளர் மற்றும் சார்பதிவாளர் கால்நடை மருத்துவர், விரிவாக்க அலுவலர் பால் வள கூட்டு சங்க செயலர் கார்த்திகேயன், களர்பதி பூபதி, பால்வளகூட்டுவு சங்க இயக்குநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×