என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பனப்பள்ளி:

    வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா (வயது 35). அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் திருமலப்பா (60), ரத்தினப்பா (54). விவசாயிகளான இவர்களுக்கு அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பிரேமாவை அவர்கள் தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலப்பா, ரத்தினப்பா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    பர்கூர் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் அடுத்த தபால்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 50). இவர் பர்கூரில் உள்ள தமிழ்நாடு மின்வார வாரிய அலுவலகத்தில் கேசியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 17-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டும், பீரோவில் இருந்த 2½ பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜன், பர்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மும்தாஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கந்திகுப்பம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கந்திகுப்பம் அருகே உள்ள எலத்தகிரி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மேரி (வயது55). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மேரி, நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    செல்போன்களை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரியை கடத்தி அதில் இருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
    ஓசூர்:

    சென்னையிலிருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கொண்டு சென்றபோது மேல்மலை என்ற இடத்தில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரை தாக்கி செல்போன்களுடன் கண்டெய்னர் லாரி கடத்தப்பட்டது. அழகுபாவியில் லாரியை நிறுத்திவிட்டு ரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்களுடன் மர்மநபர்கள் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி கேஆர்பி அணை 48 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை 48 அடியை எட்டியுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து 300 கனஅடியாக உள்ளது. 52 அடி உயரம் கொண்ட அணையானது, 50 அடியை எட்டும் நிலையில் உபரி நீர் திறக்கப்படும்.

    இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எனவே, கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்றில் விடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாநில துணை தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் நஞ்சுண்டன், மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி, பொருளாளர் கஸ்தூரி, நிர்வாகிகள் அலமேலு, ஸ்ரீதேவி, கவிதா, சுஜாதா, சிவகாமி, பார்வதி ஆகியோர் பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் 1992-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மினி மைய பணியாளர்களுக்கு 3 ஆண்டு முடிந்த உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும். எல்.கே.ஜி. வகுப்புகளில் அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

    அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்க்க வேண்டும். 10 ஆண்டு முடிந்தவுடன் மேற்பார்வையாளராக பதவி உயர்வு, உதவியாளருக்கு 5 வருடம் முடிந்தவுடன் அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். காய்கறி செலவின தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
    காவேரிப்பட்டணம் அருகே கார் மோதி தனியார் நிறுவன காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணத்தை அடுத்த சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 55). இவர் காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் ஜூஸ் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கோனார்கொட்டாய் என்ற இடத்தில் சாலையோரம் நடந்து சென்றார். 

    அப்போது அந்த வழியாக சென்ற கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    தர்மபுரி ராஜபேட்டையைச் சேர்ந்தவர் மணி (வயது 41). இவர் ஓசூர் பேகேப்பள்ளி எழில் நகரில் குடியிருந்து, தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடன் தொல்லை காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயக்கோட்டை அருகே மதுபோதையில் வாலிபரை கத்திக்குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை அருகே உள்ள நெல்லூரை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 28). அதே ஊரைச் சேர்ந்தவர் சுகுமார் (39). கூலித்தொழிலாளர்கள். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் நெல்லூரில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரம் அடைந்த சுகுமார், கத்தியால் வெங்கடாசலபதியை குத்தினார். இதில் காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாரை கைது செய்தனர்.
    ஓசூரில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் தின்னூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் வள்ளீஸ்வரி (வயது 22). இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கர்ப்பமான வள்ளீஸ்வரி, பிரசவத்திற்காக ஓசூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தந்தை வீட்டில் இருந்து வந்த வள்ளீஸ்வரி, தனது பெற்றோரிடம் குழந்தைக்கு நகை போடும் படி கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் தற்போது முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வள்ளீஸ்வரி, விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி ஒரு ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளியும் விசாரணை நடத்தி வருகிறார்.
    கடைகளில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ஓசூர் டவுன் போலீசார், ராயக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பழனிசாமி (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், ராயக்கோட்டை போலீசார் அண்ணா சிலை அருகே உள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடைக்காரர் சத்யநாராயணன்(60) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கல்லாவி போலீசார் ஓலப்பட்டி கூட்ரோடு அருகே ரோந்து சென்றபோது அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் பழனிமணி(53) என்பவரை போலீசார் கைது செய்தனர். 3 கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சி.ஆர்.பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முரளிமோகன் (வயது 40), சதாசிவராஜ் (53), அஸ்வத்ரெட்டி (73), சலாம் (60), மதுசூதன் (23) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார், கெலமங்கலம் சந்தை மைதானம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஜீவா நகர் பகுதியை சேர்ந்த நசீம்(20), விமல்(23), வெங்கடேஷ்(23) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    ×