என் மலர்
கிருஷ்ணகிரி
ஓசூர் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் சானசந்திரம் அருகே தனியார் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்ற சுதாகர் ரெட்டி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று ஓசூர் ஹட்கோ போலீசார் ரெயில்வே நிலையம், வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரவின்குமார் (21), குச்சிகான்(எ) பூபதி(22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பசவராஜ் தலைமை தாங்கினாார். நிர்வாகிகள் சதீஷ்கமார், துரை, சரவணன், கண்ணையா, கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தில்ரமேஷ் வரவேற்று பேசினார். இதில் நிர்வாகிகள் கருணாநிதி, சவுந்திரராஜன், சரவணன், தாவித் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது, மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. மின் திட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர், பொறியாளர், அலுவலர்களின் பதவியை பறிக்க கூடாது. துணை மின்நிலையங்களையும், பகிர்மானங்களையும், பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. பதவி உயர்வுகளையும், புதிய வேலைவாய்ப்புகளையும் பறிக்க கூடாது.
கொரோனா காலத்தில் உடல் ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்திடும் அரசாணையை மின்வாரியத்தில் அமலாக்க வேண்டும். மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதிநேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும். அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்புக்கான தொகை மற்றும் அகவிலைப்படியை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
இந்த தர்ணா போராட்டத்தில் மின் வாரிய ஊழியர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை அருகே 12 வயது பெண் யானையை சுட்டுக்கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் சென்னமாளம் என்ற இடத்தில் யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனத்துறை பகுதி-கிராமம் இடையே வெட்டப்பட்டுள்ள யானை தாண்டா அகழியில் 12 வயது பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜவளகிரி வனச்சரகர் நாகராஜ் தலைமையிலான வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் யானையின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
இதில் யானையின் பின்புற தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்ததும், யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யானையின் உடல் அந்த பகுதியில் புதைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வன உயிரின குற்ற சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமையிட உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் சென்னமாலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துமல்லேஷ் (வயது 40) என்பவர் யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், முத்துமல்லேசை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
வனத்துறையினர் நடத்திய விசாரணையில், விவசாய நிலத்திற்குள் யானைகள் கூட்டம் வருவதை கண்ட முத்துமல்லேஷ் அவற்றை விரட்ட துப்பாக்கியால் சுட்டபோது பெண் யானை இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை அருகே 12 வயது பெண் யானையை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதி உள்ளது. இங்கு அதிக அளவில் யானைகள் உள்ளன. அத்துடன் தற்போது கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்துள்ள 30-க்கும் மேற்பட்ட யானைகளும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவற்றுள் குட்டி யானைகளும் உள்ளன.
இந்த யானைகள் இரவு நேரத்தில் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக பொதுமக்கள் சென்றனர். அப்போது சென்னமாளம் என்ற இடத்தில் யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனத்துறை-கிராமம் இடையே வெட்டப்பட்டுள்ள யானை தாண்டா அகழியில் 12 வயது பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதைப் பார்த்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜவளகிரி வனச்சரகர் நாகராஜ் தலைமையிலான வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதில், அந்த யானை அகழியை கடந்தபோது மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் கிரேன் மூலமாக யானையின் உடலை மீட்டனர்.
தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
இதில் யானையின் பின்புற தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்ததும், மர்ம நபர்கள் யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் உறுதியானது. இதைத்தொடர்ந்து யானையின் உடல் அந்த பகுதியில் புதைக்கப்பட்டது.
யானையின் உடலில் பாய்ந்திருந்த குண்டுகள், நாட்டுத்துப்பாக்கி மூலம் சுடப்பட்ட குண்டுகள் ஆகும். யானைகள் விவசாய நிலங்களுக்குள் வரக்கூடாது என்பதற்காக சுட்டார்களா? அல்லது தந்தங்கள் கடத்தும் கும்பல் சுட்டார்களா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தில் உதவி வன பாதுகாவலர் ஜெகதீஷ் பகான் நேரில் விசாரணை நடத்தினார். ஜவளகிரி அருகே பெண் யானை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூரில் மாநகராட்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அட்கோ குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன். மாநகராட்சி ஊழியர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கல்லாவியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர், நேற்று காலை அவர் வீட்டுக்கு திரும்பிய போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.75 ஆயிரம், 1 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஓசூர் போலீசில் புகார் செய்தார்.
இதேபகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ், கிருஷ்ணன், விக்னேஷ். இவர்கள் தங்களது வீட்டு வாசல் முன்பு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தனர். இந்த 3 மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போனது. இதுகுறித்து அவர்கள் 3 பேரும் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அடுத்தடுத்த வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீசார் ஓணம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடை உரிமையாளர் ரவி(வயது41) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தேன்கனிக்கோட்டை போலீசார், அஞ்செட்டி சாலையில் உள்ள ஒரு மளிகை கடைகளில் சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர் செல்வம்(50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கிருஷ்ணகிரி- கும்மனூர் சாலையில் உள்ள மேட்டு ஓரை ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த செம்படமுத்தூர் பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் (வயது 30), கொண்டேப்பள்ளி கூகியப்பன் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.100-ஐ பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரை அருகே லாட்டரி சீட்டுக்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்காவது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்றதாக கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் யுகேந்திரன் (வயது 31), சுண்டேகுப்பம் குமார் (42), கந்திகுப்பம் காமராஜ் நகர் முனியப்பன் (52), போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் ராஜா (55), தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலை அப்துல் ஜாபர் (60), ஊத்தங்கரை தர்மராஜா கோவில் யாரப் (37) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரூ.1,200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பர்கூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பேக்கரி ஊழியர் பலியானார்.
பர்கூர்:
பர்கூரை அடுத்த ஜி.நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 41). இவர் சென்னையில் உள்ள பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் பர்கூரில் இருந்து சென்னைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பர்கூரில் சென்னை பிரிவு சாலையில் சென்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் மாதையன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாதையன் இறந்து விட்டார்.
இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் வீட்டில் 4½ பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி திருமலை நகர் தீர்த்தகிரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 41). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 31-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் வெளியே சென்றார்.
நேற்று முன்தினம் அவர்கள் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டை திறந்து பார்த்த போது, வீட்டின் உள் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையின் ஜன்னல் கம்பிகளை உடைத்த மர்மநபர்கள் உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 4½ பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து சசிகுமார், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாஜூதீன் வழக்குப்பதிவு செய்து, கைரேகை நிபுணர்களை வரவழைத்து, பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து சென்றனர். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கிருஷ்ணகிரி- கும்மனூர் சாலையில் உள்ள மேட்டு ஓரை ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த செம்படமுத்தூர் பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் (வயது 30), கொண்டேப்பள்ளி கூகியப்பன் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.100-ஐ பறிமுதல் செய்தனர்.
சிங்காரப்பேட்டை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை அருகே உள்ள பெரியதள்ளப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). கூலித்தொழிலாளி. அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.