என் மலர்
கிருஷ்ணகிரி
- டோனி, டெண்டுல்கர் ஆகியோர் 6 ஆசிய கோப்பையில் ஆடி உள்ளனர்.
- 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் அறிமுகம் ஆனார். தற்போது அவர் 7-வது ஆசிய கோப்பையில் ஆடி வருகிறார். இதன் மூலம் 7 ஆசிய கோப்பையில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
டோனி, டெண்டுல்கர் ஆகியோர் 6 ஆசிய கோப்பையில் ஆடி உள்ளனர்.
ரோகித் சர்மா ஆசிய கோப்பையில் 28 ஆட்டத்தில் விளையாடி இலங்கையின் ஜெயவர்த்தனேயை சமன் செய்தார்.
அவர் 26 இன்னிங்கில் 883 ரன் எடுத்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 3499 ரன் எடுத்துள்ளார். மார்ட்டின் குப்தில் (நியூசிலாந்து) 3497 ரன்னுடன் 2-வது இடத்திலும், விராட்கோலி 3343 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
- தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.
- கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
ஓசூர்:
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. ஓசூரில் இரவு லேசாக மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்து இரவு முழுவதும் மழை பெய்தவாறு இருந்தது. தொடர்ந்து காலை 8 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது.
கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஓசூர் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளித்தது.
இவ்வாறு நகரின் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
மேலும், காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிப்படைந்தனர். பலத்த மழையாலும், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதாலும் ஓசூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை அருகே பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு ஊராட்சி பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
- மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
- நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் 2 -வது மாவட்ட மாநாடு 24.09.2022 அன்று நடைபெற உள்ளதால் மாவட்டத்தின் அவசர செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி சமுதாய கூடத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் சின்னசாமி வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் விஜய லட்சுமி,கோவிந்தராஜ் , சுகேந்திரன், மாவட்ட இணை செயலாளர் சுகேந்திரன், குமரேசன் , முன்னாள் மாநில செயலாளர் லட்சுமணன் மற்றும் ஏழு வட்டத்தில் இருந்து வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இறுதியில் மாவட்ட மாநாட்டை கிருஷ்ணகிரி தலைநகரில் நடத்துவது என்றும் இதில் தளி சட்டமன்ற உறுப்பினர் .ராமச்சந்திரன் ,பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் மாவட்ட பொருளாளர் வேடி நன்றி கூறினார்.
- குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
- எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் குத்து விளக்கேற்றிவைத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி உள்ளிட்ட தொலைதூர மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில், ரூ 10 கோடியே 50 லட்சம் மதிப்பில் சிறப்பு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச்செயலகத்திருந்து காணொலி மூலம் திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, ஓசூர் அரசு மருத்துவமனை கட்டிட வளாகத்தில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்ல குமார், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் குத்து விளக்கேற்றிவைத்தனர்.
மேலும்,முதலமைச்சருக்கு,கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் சார்பில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நன்றி தெரிவித்தார். பின்னர், கலெக்டர் கூறியதாவது:-
இந்த புதிய கட்டிடம், தரைதளம் முதல் மூன்றாம் தளம் வரை சுமார் 40, 124 சதுர அடி பரப்பளவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 78 படுக்கைகள் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. தரைதளத்தில் பிரசவ அறை, உயர் சிகிச்சை பிரிவு, பிரசவத்திற்கு பின் கவனிப்பு அறை, ஆய்வகம் மற்றும் புறநோயாளிகள் பிரிவும், முதல் தளத்தில் பிரசவத்திற்கு முன், மற்றும் பின் கவனிப்பு அறை, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு அறை, டாக்டர் அறை மற்றும் நர்சு அறை உள்ளன.
இரண்டாம் தளத்தில் 2 அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு அறை, டாக்டர் அறை, நர்சு அறை போன்ற அறைகளும், 3-வது தளத்தில், குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, டாக்டர் அறை மற்றும் நர்சு அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தை களுக்கும் பாதுகாப்பான உயர் சிகிச்சை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இதில், ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, நல பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், தலைமை மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள், நர்சுகள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பயனாளிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.
- ஊராட்சி செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் சமத்துவபுரம் பகுதியில் உள்ள புன ரமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் நாற்றங்கால் பண்ணை ஆகியவற்றை கூடுதல் இயக்குனர் ஆனந்த ராஜ் (ஊரக வளர்ச்சி) ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து கண்ணடஹள்ளி ஊராட்சியில் வாரச்சந்தை வளாக கட்டிடங்களையும், பொம்மேப்பள்ளி ஊராட்சியில் புனரமைக்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடத்தையும் பார்வையிட்டார்.
திட்ட இயக்குனர் மலர்விழி ( ஊரக வளர்ச்சி), செயற்பொறியாளர் மலர்வழி, மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர், ஒன்றிய உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி , ஊராட்சி செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சுமார் 300 பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் அறிவுறுத்தலின்படி, காவல் துணை கண்காணிப்பாளர் அமல அட்வின் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், குற்றப்பிரிவு காவலர்கள் ஹனுமந்த தீர்த்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், அதில் சுமார் 300 பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்கள் ஹனுமந்த தீர்த்தத்தை சேர்ந்த லோகநாதன் மகன் சக்திவேல் (வயது 34),சிவபாலன் (31) மற்றும் தருமபுரி மாவட்டம் மாம்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை மகன் மணி (25) என்பது தெரிய வந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஊத்தங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- வருவாய்த்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 623 கனஅடியாக இருந்தது. கெலவரப்பள்ளி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரும், மார்கண்டேய நதியில் இருந்து வரும் தண்ணீரால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 4836 கனஅடியாக அதிகரித்தது. பிற்பகல் 1 மணியளவில் நீர்வரத்து
வினாடிக்கு 5,800 கனஅடியாக அதிகரித்தது. மேலும், அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம்
50.30 அடி உள்ளதால், அணையின் பாது காப்பினை கருதி, 3 சிறிய மதகுகள், பிரதான 2, 5, 7 மதகுகளில் வினாடிக்கு 6,100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் தென்பெ ண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அணை பூங்காவிற்குள் செல்லும் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் சீறி பாய்ந்து, செல்கிறது. ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ள தாலும், தொடர்ந்து பெய்யும் மழையை பொறுத்து தண்ணீர் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்பெண்ணை ஆற்றினை கடக்கவோ, குளிக்கவோ கூடாது. கால்நடைகளை ஆற்று பகுதிக்கு அழைத்துச் செல்ல கூடாது என பொதுப்பணித்துறை அலு வலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல், ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 148 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 215 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 17.75 அடிக்கு உள்ளது. நீர்வரத்து முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
சூளகிரி அருகே உள்ள சின்னார் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 85 கனஅடியாக இருந்தது. நேற்று காலை வினாடிக்கு 60 கனஅடியாக சரிந்தது.
அணையின் மொத்த கொள்ளளவான 32.80 அடியில் நீர்மட்டம் 30.35 அடிக்கு உள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை மணி நிலவர ப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 78 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. போச்சம்பள்ளி 48, அஞ்செட்டி 45, தேன்கனிக்கோட்டை 34, ஊத்தங்கரை 32.40, ராயக்கோட்டை 27, தளி 25, பெனுகொண்டாபுரம் 16.20, கிருஷ்ணகிரி 14.40, பாரூர் 13.80, நெடுங்கல் 8, சூளகிரி 6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி இணை பேராசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு பள்ளி, கல்லூரிகளின் நுகர்வோர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துணை மேலாளர் ராஜராஜன், இணை பேராசிரியர்கள் பீம்மராஜ், ரவி, கிருஷ்ணன், நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் படையப்பா மற்றும் அருண், சாகுல்அமீது உள்பட கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
- முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில், கடந்த, 1972-ல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், பொன்விழா ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரி, கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அதே ஆண்டு கல்லூரியில் படித்த முன்னாள் எம்.எம்.ஏ. முனிவெங்கடப்பன் தலைமை தாங்கினார்.
கல்லூரி படிப்பை முடித்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டேராடூன், டில்லி உட்பட பல்வேறு பகுதிகளில் பணிகளுக்கு சென்று குடும்பத்துடன் வசித்துவரும் அவர்கள் இந்நிகழ்ச்சிக்காக தங்கள் குடும்பத்துடன் கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.
அவர்கள் கூறுகையில், 50 ஆண்டுகள் கழித்து நண்பர்கள் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் கோபாலகிருஷ்ணன், நடராஜன், சாம் இன்பராஜ், ஸ்டான்லி ஜோன்ஸ், தினகரன், பாண்டியன் உள்பட, 45-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
- ஆபத்தான நிலையில் சுத்தம் செய்துள்ளனர்.
- புதர்கள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றை சுத்தம் செய்துள்ளனர்.
ஓசூர்,
ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் எம்.ஜி.ஆர்.மார்க்கெட் எதிரே ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1,000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
வருகிற வார நாட்களில், இந்த பள்ளியில் கல்வி சம்பந்தமான ஆய்வுகள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியின் மேல் தளங்கள் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றில் முளைத்துள்ள புல் புதர்கள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றை சுத்தம் செய்துள்ளனர். மேலும், பள்ளியின் பழைய கட்டிட மேல் தளத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி மாணவர்கள் ஏறி நின்று ஆபத்தான நிலையில் சுத்தம் செய்துள்ளனர். .
தமிழகத்தில், அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களை, வேலைகளில் ஈடு படுத்தக்கூடாது என்று அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், ஓசூரில் அரசுப்பள்ளி மாண வர்களை அப்பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைத்திருப்பது மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.
- பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.
- ஆசாமி போலீசை கண்டவுடன் தப்பி ஓடிவிட்டான்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது ஒசூரிலிருந்து பழனி செல்லும் பேருந்தில் 67 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கடத்தி வந்த ஆசாமி போலீசை கண்டவுடன் தப்பி ஓடிவிட்டான்.
அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பிய ஆசாமியை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.54,000 என்று கூறப்படுகிறது.
- மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- சுதாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த ஏ.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 29). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெயக்குமார்.
இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நில தகராறு இருந்து வருகிறது. கடந்த 26-ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயக்குமார் சுதாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த சுதா தந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






