களர்பதி ஊராட்சியில் கூடுதல் இயக்குனர் ஆய்வு

பயனாளிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.ஊராட்சி செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சி சமத்துவபுரத்தில் புனரமைக்கப்பட்ட வீடுகளை ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளிடம் விவரம் கேட்டறிந்த  கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் ,  திட்ட இயக்குனர் மலர் விழி.
 மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சி சமத்துவபுரத்தில் புனரமைக்கப்பட்ட வீடுகளை ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளிடம் விவரம் கேட்டறிந்த கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் , திட்ட இயக்குனர் மலர் விழி.
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் சமத்துவபுரம் பகுதியில் உள்ள புன ரமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் நாற்றங்கால் பண்ணை ஆகியவற்றை கூடுதல் இயக்குனர் ஆனந்த ராஜ் (ஊரக வளர்ச்சி) ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து கண்ணடஹள்ளி ஊராட்சியில் வாரச்சந்தை வளாக கட்டிடங்களையும், பொம்மேப்பள்ளி ஊராட்சியில் புனரமைக்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடத்தையும் பார்வையிட்டார்.

திட்ட இயக்குனர் மலர்விழி ( ஊரக வளர்ச்சி), செயற்பொறியாளர் மலர்வழி, மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர், ஒன்றிய உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி , ஊராட்சி செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com