என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர், ராயக்கோட்டை சாலையில் உள்ள  அரசுப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த மாணவர்கள்  பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
    X

    ஓசூர், ராயக்கோட்டை சாலையில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த மாணவர்கள் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

    • ஆபத்தான நிலையில் சுத்தம் செய்துள்ளனர்.
    • புதர்கள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றை சுத்தம் செய்துள்ளனர்.

    ஓசூர்,

    ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் எம்.ஜி.ஆர்.மார்க்கெட் எதிரே ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1,000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    வருகிற வார நாட்களில், இந்த பள்ளியில் கல்வி சம்பந்தமான ஆய்வுகள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியின் மேல் தளங்கள் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றில் முளைத்துள்ள புல் புதர்கள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றை சுத்தம் செய்துள்ளனர். மேலும், பள்ளியின் பழைய கட்டிட மேல் தளத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி மாணவர்கள் ஏறி நின்று ஆபத்தான நிலையில் சுத்தம் செய்துள்ளனர். .

    தமிழகத்தில், அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களை, வேலைகளில் ஈடு படுத்தக்கூடாது என்று அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், ஓசூரில் அரசுப்பள்ளி மாண வர்களை அப்பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைத்திருப்பது மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×