search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:  5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    கிருஷ்ணகிரி அணை பூங்காவிற்கு செல்லும் வழியில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம்.

    கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • வருவாய்த்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 623 கனஅடியாக இருந்தது. கெலவரப்பள்ளி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரும், மார்கண்டேய நதியில் இருந்து வரும் தண்ணீரால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 4836 கனஅடியாக அதிகரித்தது. பிற்பகல் 1 மணியளவில் நீர்வரத்து

    வினாடிக்கு 5,800 கனஅடியாக அதிகரித்தது. மேலும், அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம்

    50.30 அடி உள்ளதால், அணையின் பாது காப்பினை கருதி, 3 சிறிய மதகுகள், பிரதான 2, 5, 7 மதகுகளில் வினாடிக்கு 6,100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதனால் தென்பெ ண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அணை பூங்காவிற்குள் செல்லும் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் சீறி பாய்ந்து, செல்கிறது. ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ள தாலும், தொடர்ந்து பெய்யும் மழையை பொறுத்து தண்ணீர் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், தென்பெண்ணை ஆற்றினை கடக்கவோ, குளிக்கவோ கூடாது. கால்நடைகளை ஆற்று பகுதிக்கு அழைத்துச் செல்ல கூடாது என பொதுப்பணித்துறை அலு வலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதே போல், ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 148 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 215 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 17.75 அடிக்கு உள்ளது. நீர்வரத்து முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

    சூளகிரி அருகே உள்ள சின்னார் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 85 கனஅடியாக இருந்தது. நேற்று காலை வினாடிக்கு 60 கனஅடியாக சரிந்தது.

    அணையின் மொத்த கொள்ளளவான 32.80 அடியில் நீர்மட்டம் 30.35 அடிக்கு உள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை மணி நிலவர ப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 78 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. போச்சம்பள்ளி 48, அஞ்செட்டி 45, தேன்கனிக்கோட்டை 34, ஊத்தங்கரை 32.40, ராயக்கோட்டை 27, தளி 25, பெனுகொண்டாபுரம் 16.20, கிருஷ்ணகிரி 14.40, பாரூர் 13.80, நெடுங்கல் 8, சூளகிரி 6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    Next Story
    ×