என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருவாய் ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
- மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
- நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் 2 -வது மாவட்ட மாநாடு 24.09.2022 அன்று நடைபெற உள்ளதால் மாவட்டத்தின் அவசர செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி சமுதாய கூடத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் சின்னசாமி வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் விஜய லட்சுமி,கோவிந்தராஜ் , சுகேந்திரன், மாவட்ட இணை செயலாளர் சுகேந்திரன், குமரேசன் , முன்னாள் மாநில செயலாளர் லட்சுமணன் மற்றும் ஏழு வட்டத்தில் இருந்து வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இறுதியில் மாவட்ட மாநாட்டை கிருஷ்ணகிரி தலைநகரில் நடத்துவது என்றும் இதில் தளி சட்டமன்ற உறுப்பினர் .ராமச்சந்திரன் ,பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் மாவட்ட பொருளாளர் வேடி நன்றி கூறினார்.






