என் மலர்
கிருஷ்ணகிரி
- இரவு முழுவதும் பெய்த மழை இன்றுகாலை வரை நீடித்தது. கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
- தேன்கனிக்கோட்டை பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
ஓசூரில் நேற்றிரவு லேசாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக பெய்ய தொடங்கியது.
இரவு முழுவதும் பெய்த மழை இன்றுகாலை வரை நீடித்தது. கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
மழைநீர் தேங்கியதால் ஓசூர் பஸ்நிலையம் குளம்போல் காட்சி அளிக்கிறது.
இதே போல நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதே போல் தேன்கனிக்கோட்டை பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஓசூர், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- ஓசூர் அருகேயுள்ள சாக்கரை ஏரி மழை நீரால் முழுவதுமாக நிரம்பியது.
- ஏரியிலிருந்து வெளியேறிய தண்ணீர் 8 பேர் தங்கியிருந்த பகுதியிலும் சூழ்ந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல ஓசூர் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஓசூர் அருகேயுள்ள சாக்கரை ஏரி மழை நீரால் முழுவதுமாக நிரம்பியது.
இதனால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வயல்களிலும், குடியிருப்பு பகுதியிலும் புகுந்தது.
இப்பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபடுவதற்காக பெண்கள் உள்ளிட்ட 8 பேர் வெளியூரிலிருந்து வந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஏரியிலிருந்து வெளியேறிய தண்ணீர் இவர்கள் தங்கியிருந்த பகுதியிலும் சூழ்ந்தது.
இது பற்றிய தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கயிறுகள் கட்டியும், மிதவை மூலமும் கட்டிட தொழிலாளிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீர் மேலும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை மூழ்கடிக்கும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
- பல்வேறு இடங்களில் விசாரித்தும் அர்ச்சனா குறித்து எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை.
- இது குறித்து சங்கர் சாமல்பட்டி போலீசில் புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த சாமல்பட்டி வடகனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் அர்ச்சனா (வயது 19).
நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அர்ச்சனா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அர்ச்சனா குறித்து எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சங்கர் சாமல்பட்டி போலீசில் புகார் செய்தார் .அந்த புகாரில் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 26) என்ற வாலிபர்தான் கடத்தி சென்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின்பேரில் சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அர்ச்சனாவையும், கடத்தி சென்றதாக கூறப்படும் சதீசையும் தேடி வருகின்றனர்.
- ஓட்டு வீடு முழுவதும் சரிந்து விழுந்தது. முத்துவேடி அதிர்ஷ்ட்ட வசமாக உயிர் பிழைத்தார்.
- வீட்டில் இருந்த டி.வி, பீரோ, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை சேதமானது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேடி (வயது 37). கணவரை பிரிந்து தனது மகள் கோபிகாவுடன் வசித்து வருகிறார்.
12-ம் வகுப்பு படிக்கும் கோபிகா தனது பாட்டி வீட்டிற்கு சென்ற நிலையில், நேற்று மதியம் சமைத்துவிட்டு சமையலறையில் முத்துவேடி உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த வேலையில் ஓட்டின் ஒரு பகுதி உடைந்து இவரது மேல் விழுந்துள்ளது.
விழுந்த வேகத்தில் சாப்பாட்டை வைத்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது ஓட்டு வீடு முழுவதும் சரிந்து விழுந்தது. முத்துவேடி அதிர்ஷ்ட்ட வசமாக உயிர் பிழைத்தார்.
வீட்டில் இருந்த டி.வி, பீரோ, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை சேதமானது. கணவர் கைவிட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக கூலி வேலை செய்து தனது மகளை காப்பாற்றி வரும் முத்துவேடிக்கு தங்க வீடில்லை என்ற நிலையில் அரசு வீடு கட்ட உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
தகவலறிந்து அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் அரசி, பருப்பு உள்ளிட்ட ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் ரூ.3000-த்தை கொடுத்து, இலவச வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதிய ளித்தார்.
- தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் கோழிப்பணைக்குள் புகுந்து 700-க்கும் மேற்பட்ட நடுத்தர கோழிகள் பலியானது.
- இறந்து போன கோழிகளின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுகிறது.
சூளகிரி,
சூளகிரி தாலுகா கான லட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 50). இவர் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார்.
தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் கோழிப்பணைக்குள் புகுந்து 700-க்கும் மேற்பட்ட நடுத்தர கோழிகள் பலியானது. இறந்து போன கோழிகளின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுகிறது.
பண்ணையில் கோழிகள் இறந்த சம்பவம் பற்றி அறிந்த கிராம அலுவலர் செந்தில் மற்றும் ஊராட்சி மன்றதலைவர் ரத்தினம்மா கிருஷ்ணப்பா, பி.டி.ஓ. கோபாலகிருஷ்ணன், சிவகுமார் மற்றும் பலர் பார்வையிட்டனர்.
- ஓட்டலின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருண்குமார் ஓட்டலுக்குள் சென்றார்.
- திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த அத்திப்பள்ளியை சேர்ந்தவர் அருண்குமார்.
இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஓசூருக்கு வந்தார். வண்டியின் பெட்டியில் ரூ.2.9 லட்சம் பணம் வைத்திருந்துள்ளார்.
ஓசூரில் உள்ள ஒரு ஓட்டலின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருண்குமார் ஓட்டலுக்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
அதிர்ச்சியடைந்த அருண்குமார் பெட்டிக்குள் பார்த்தபோது அவர் வைத்திருந்த ரூ.2.9 லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஓசூர் ஹட்கோ போலீசில் அருண்குமார் புகார் செய்தார் .
போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
- ஓசூர் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளித்தது.
- காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிப்படைந்தனர்.
ஓசூர்,
ஓசூரில் நேற்று இரவு லேசாக மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்து இரவு முழுவதும் மழை பெய்தவாறு இருந்தது. தொடர்ந்து காலை 8 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது.
கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஓசூர் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளித்தது.
இவ்வாறு நகரின் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
மேலும், காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிப்படைந்தனர்.
பலத்த மழையாலும், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதாலும் ஓசூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
- தொடர் மழை பெய்து வந்த நிலையில் ஏரி முழுவதுமாக நிரம்பி வழிந்தது.
- ஏரிக்கரையோரம் தீடீர் என உடைப்பு ஏற்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்- சூளகிரி தாலுகா கானலட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணையப்பா ஏரி 10 ஏக்கர் பரப்பு கொண்ட பெரிய ஏரி.
தொடர் மழை பெய்து வந்த நிலையில் ஏரி முழுவதுமாக நிரம்பி வழிந்தது. இந்நிலையில் ஏரிக்கரையோரம் தீடீர் என உடைப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம்மா கிருஷ்ணப்பா நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தெரியப்ப டுத்தினார்.
பின்னர் சேர்மன் லாவன்யா ஹேமநாத், பி.டி.ஓ.க்கள் கோபால கிருஷ்ணன், சிவக்குமார், மற்றும் பொறியாளர்கள் சென்று பார்வையிட்டு மணல் மூட்டைகள் மூலம் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
- லாட்டரி சீட்டுகளை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் அம்ஜத் (வயது 40).
இவர் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வைத்துள்ள பெட்டிக்கடை யில் அரசால் தடை செய்யப்பட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஊத்தங்கரை போலீசார் அம்ஜத்தின் கடையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அம்ஜத்தை கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.2,190 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
- இருசக்கர வாகனத்தில் பக்கத்து ஊரில் நடந்த ஆடல்,பாடல் நிகழ்ச்சியை பார்க்க சென்றார்.
- இதுகுறித்து தமிழழகன் தந்த புகாரின்பேரில் சிங்காரம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரம்பேட்டை அருகேயுள்ள பெரிய கள்ளப்பாடியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 32).
இவர் தனது இருசக்கர வாகனத்தில் பக்கத்து ஊரில் நடந்த ஆடல்,பாடல் நிகழ்ச்சியை பார்க்க சென்றார்.
அப்போது அவரது வாகனம் திருடு போனது. இதுகுறித்து தமிழழகன் தந்த புகாரின்பேரில் சிங்காரம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- 500-க்கும் மேற்பட்டவிளை நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- சின்னார்அணையில் பல்வேறு கிராம மக்கள் வந்து பார்வையிடுவதுடன் இளைஞர்கள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வேம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சின்னார் அணை தொடர் மழையால் நிரம்பி வழிந்து செல்கிறது.
இதனால் சுற்றுவட்டார கிராமங்களான மாரண்டப்பள்ளி, வேம்பள்ளி, ஒன்றியுர், தாசன்புரம், தேக்களப்பள்ளி, சென்னப்பள்ளி, சுண்டகிரி, சின்னார், மூறுக்கனப்பள்ளி,மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்டவிளை நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சின்னார்அணையில் பல்வேறு கிராம மக்கள் வந்து பார்வையிடுவதுடன் இளைஞர்கள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.
- சூளகிரி ஒன்றியத்தில் 133 அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் இத்திட்டம் செயல்பட உள்ளது.
- முதற்கட்டமாக சூளகிரியில் பிரிவு 2 , பேரிகையில் பிரிவு 1 என பயிற்சி நடைபெற்றது.
சூளகிரி,
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் 17 ஒன்றியங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் 133 அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் இத்திட்டம் செயல்பட உள்ளது.
இதில் ஒரு பள்ளி கூடத்திற்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பி.எல்.எப். மூலம் 3 சுய உதவி குழு உறுப்பினர்கள் வீதம் மொத்தம் 399 உறுப்பினர்களுக்கு 2 நாட்கள் சமையல் பயிற்சி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக சூளகிரியில் பிரிவு 2 , பேரிகையில் பிரிவு 1 என பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சிக்கு திட்ட இயக்குனர் ஈஸ்வரன் தலைமையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் உதவிதிட்ட அலுவலர் பிரபாகரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஸ்குமார், வட்டார மேலாளர் எல்லப்பா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.






