என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ 2.9 லட்சம் திருட்டு"

    • ஓட்டலின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருண்குமார் ஓட்டலுக்குள் சென்றார்.
    • திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

     கிருஷ்ணகிரி,

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த அத்திப்பள்ளியை சேர்ந்தவர் அருண்குமார்.

    இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஓசூருக்கு வந்தார். வண்டியின் பெட்டியில் ரூ.2.9 லட்சம் பணம் வைத்திருந்துள்ளார்.

    ஓசூரில் உள்ள ஒரு ஓட்டலின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருண்குமார் ஓட்டலுக்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த அருண்குமார் பெட்டிக்குள் பார்த்தபோது அவர் வைத்திருந்த ரூ.2.9 லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஓசூர் ஹட்கோ போலீசில் அருண்குமார் புகார் செய்தார் .

    போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

    ×