என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளக்காடாக மாறிய ஓசூர் பஸ் நிலையம்"

    • ஓசூர் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளித்தது.
    • காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிப்படைந்தனர்.

    ஓசூர்,

    ஓசூரில் நேற்று இரவு லேசாக மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்து இரவு முழுவதும் மழை பெய்தவாறு இருந்தது. தொடர்ந்து காலை 8 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது.

    கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஓசூர் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளித்தது.

    இவ்வாறு நகரின் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

    மேலும், காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிப்படைந்தனர்.

    பலத்த மழையாலும், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதாலும் ஓசூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

    ×